3
இது ஒண்ணும் சினிமா விமர்சனம் இல்லைங்கோ ..
நேத்து கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்து கிட்டு இருந்த ஐ பி எல் கிரிக்கெட் மேட்ச் சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது.சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதி கொண்டன...முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய சென்னை அணி ரொம்ப சொதப்பியது.(கிரிக்கெட்டில் சொதப்புவது எப்படி )..அதுல ரொம்ப பேரு மூணு ரன்னா எடுத்து அநியாயமாக ஆட்டம் இழந்தனர்.. அவங்க எடுத்த ரன்கள் தான் மூணு...( 3 ) பதிவின் தலைப்பு வந்துடுச்சா...
டு ப்லேசிஸ் - (3 )
மார்கல் - (3 )
ஜடேஜா -(3 )
ஜடேஜா -(3 )
அஷ்வின் -(3 )
போலிஞ்சர் - (3 )
ஒருவேளை நம்ம தனுஷ் ( 3 ) கொலைவெறி இவங்களையும் பாதித்து விட்டதோ...ஆளாளுக்கு 3 ரன் எடுத்து கொன்னு எடுத்துட்டாங்க...
இந்த கொலைவெறி குரூப்ல எப்படியோ ஒரு ரன் அதிகமா எடுத்து எஸ்கேப்பு ஆயிட்டாரு நம்ம கேப்டன் தோனி..அவரு எடுத்த ரன் 4 …
அப்புறம் முதல் சிக்ஸ் , முதல் பவுண்டரி , முதல் விக்கெட், என ஏகப்பட்ட முதல் ....
அப்புறம் ரொம்ப கம்மியான ரன் சேசிங் இருந்ததால், லீவி யின் அதிரடி ஆட்டத்தால் சீக்கிரம் ஜெயித்து விட்டது மும்பை இந்தியன்ஸ்....
வாழ்த்துகள் ... மும்பை இந்தியன்ஸ்
CSK - 112/all out. - MI 115/3
நேசங்களுடன்
ஜீவானந்தம்
No comments:
Post a Comment
வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....