Sunday, July 1, 2012

கோவை மெஸ் - மனோஜ் பவன்-மதுராந்தகம்


மதுராந்தகம் மனோஜ் பவன்

திண்டிவனம், மருவத்தூர் தாண்டி இந்த மதுராந்தகம் இருக்கிறது.அப்படி ஒண்ணும் பெரிய ஊர் இல்லை.ஒரு பெரிய ஏரி ஒன்று இருக்கிறது.வருடத்தில் ஒரு நாள் ஏரியில் ஏலம் விட்டு மீன் பிடிப்பார்கள்.ஏலம் முடித்து மீன் பிடித்தவுடன் மிச்ச மீதியை பிடிக்க மதுராந்தகம் மக்கள் ஏரியில் குவிவார்கள்.

இறால் விரால் மற்றும் விலாங்கு மீன் ஒவ்வொன்றும் ஐந்து கிலோ அளவில் கிடைக்குமாம்.ஆறடி நீளம் உள்ள விலாங்கு கிடைக்குமாம்.அப்புறம் இந்த ஊரை சுற்றி முப்பது கிலோ மீட்டர் தொலைவில் வேடந்தாங்கல், உத்திரமேரூர், மகாபலிபுரம், திருக்கழுக்குன்றம், கோட்டைகாடு, மருவத்தூர், போன்ற நிறைய சுற்றுலா தளங்கள் இருக்கின்றன.
      இப்ப நாம பார்க்க போறது மனோஜ் பவன் ஹோட்டல் பத்தி..அந்த ஊருல இருக்கிற ஒரே நல்ல உயர் தர சைவ ஹோட்டல் இது தான்.யாரை கேட்டாலும் சொன்னது இந்த கடையைத்தான்.பெருமாள் கோவில் வீதியில் இருக்கிறது.சின்ன கடைபோல தான் இருக்கிறது. ஆனாலும் கொஞ்சம் நன்றாக உள்ளது.ஹோட்டலுக்கு சென்று நாங்கள் பூரி ஆர்டர் பண்ணியவுடன் சர்வர் சென்றது ஒரு சுவற்றுக்கு அருகில். ஒரு பூரி..ஒரு பூரி..பூரி.....என ராகத்துடன் சொன்னது ஆச்சர்யம்.கொஞ்ச நேரம் கழித்து பக்கத்து டேபிளுக்கு தோசை ஆர்டர் கேட்டது...ஒரு தோசை...ஒரு தோசை... தோச... தோச.. தோசை...என செம ராகத்துடன்....இன்னொரு சர்வர்...

                    (அந்த மைக்கு இதுதான்.) 

ஆச்சரியமோ ஆச்சர்யம்....சர்வரை விசாரித்ததில் அடுப்பங்கரை பக்கத்து இடத்தில் இருப்பதால் இங்கே இருந்து மைக் மூலம் சொல்லுகிறார்களாம்.உடனடியாக மாஸ்டர் போட்டு கொடுத்து விடுவாராம்.எப்பூடி.......அப்புறம் ராகம் போட்டு வந்த பூரியின் சுவை நன்றாக இருக்கிறது.மீண்டும் ராகம் கேட்க விரும்பியதில் அடுத்த ஆர்டர் தோசையாகி போனது.......
அப்புறம் விலை அந்த ஏரியாவிற்கு ரொம்ப அதிகம் போல இருக்கிறது...ஆயினும் கூட்டம் கூடுகிறது. சுவையும் ராகமும் காரணம் போல...அப்புறம் இங்க பணிபுரிகிற அனைத்து பணியாளர்களும் இந்த ஹோட்டலில் இருக்கிற டேபிளில் அமர்ந்து தான் சாப்பிடனும் என்கிற சமத்துவ கொள்கையை கடை பிடித்து வருகின்றனர்.இவர்களுக்கென்றே தனி டேபிளும் ஒதுக்கி இருக்கின்றனர் இந்த ஹோட்டல் உரிமையாளர்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

11 comments:

  1. மாப்ளே, ஒத்தயிலேயே மேயரீரு........ஒத்தையில மேயறது ஒடம்புக்கு ஆவாதாக்கும்.

    ReplyDelete
  2. வணக்கம் மாம்ஸ்..என்னபன்றது...கூட்டமா போனா கும்மி அடிச்சிடிறாங்க

    ReplyDelete
  3. மதுராந்தகம் வரும் போது மனோஜ் பவன் பூரியை ருசிச்சிட வேண்டியதுதான்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. அங்க சர்வர் சொல்ற ராகத்தை கேட்கணும்..ரொம்ப அருமையா இருக்கும் சுரேஷ்..

    ReplyDelete
  5. பூரி எனும் புது ஐட்டமை போட்டோ எடுத்து போட்டமைக்கு மிக்க நன்றி. அதன் அருகில் இருப்பது அநேகமாக உருளைக்கிழங்கு என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. ///////சிவகுமார் ! said...

    பூரி எனும் புது ஐட்டமை போட்டோ எடுத்து போட்டமைக்கு மிக்க நன்றி. அதன் அருகில் இருப்பது அநேகமாக உருளைக்கிழங்கு என்று நினைக்கிறேன்/////

    ஓனர்னா ஓரமாத்தானே இருக்கணும் அதை விட்டுட்டு இங்க வந்து கருத்து சொல்லிக்கிட்டு இருக்காரு

    இருந்தாலும் நக்கல் இவருக்கு கொஞ்சம் ஜாஸ்திதான் :D :D

    ReplyDelete
  7. ராகம் பூரி அருமை நண்பா

    ReplyDelete
  8. /// சிவகுமார்...மெட்ராஸ் பவன் உரிமையாளர்///

    அது சைவ ஹோட்டல் ஆனதால் பூரி தோசை மட்டுமே இருக்கிறது.நாம போட்டோ போட இதுல ஏதாவது ஒன்னை தான் போட முடியும்.அதுதான் பூரி போட்டேன்.ஆனா பக்கத்துல இருக்கிறது உருளை கிழங்கா அப்படின்னு தெரியாது... ஹிஹி ஹி

    ReplyDelete
  9. இது போங்கு ஆட்டம். என்னிடம் மட்டும் எப்பவும் நான் வெஜ் ஹோட்டல் எழுத சொல்லிட்டு என்னா இது :)

    சுவராஸ்யமா எழுதிருக்கீங்க

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....