Friday, December 21, 2012

கரம் - 5 - 21.12.12


21.12.2012 - உலக அழிவு தினம் அப்படின்னு சொல்லி சொல்லியே நிறைய பேரு உலகெங்கும் வதந்திகளை பரப்பிகிட்டு இருந்தாங்க..
மெக்சிகோ நாட்டை பூர்வீகமாக கொண்ட "மாயன்' இனத்தினர், 5,126 ஆண்டுகளை கொண்ட காலண்டரை தயாரித்து பயன்படுத்தி வந்தனர். இந்த காலண்டர், கி.மு.3114ல் துவங்கி, இன்றுடன் முடிகிறது.மாயன் காலண்டர், ஒரு லட்சத்து, 44 ஆயிரம் நாட்களை கொண்டது. அதன் பின், இந்த காலண்டர் மறு சுழற்சிக்கு உட்பட்டது. இன்றுடன் இந்த காலண்டர் முடிவடைவதால், உலகம் இன்று அழிந்து விடும் என வதந்தி இருந்தது..
பார்த்தா...இப்போ  வரைக்கும் உலகம் அழியல...இன்னிக்கு இரவு 12 மணிக்குள்ளே உலகம் அழிஞ்சுடுமா...
--------------------------------------------------------------
இன்னிக்கு உலகம் அழிஞ்சு இருக்குமா அப்படின்னு காலையில் 5 மணிக்கு டிவி பார்த்தா....கே டிவியில் இளையவன் அப்படின்னு ஒரு படம்...சத்யன் ஹீரோவா நடிச்ச(..?) படம்....முடியல....

வானத்துல எத்தனையோ நட்சத்திரம் இருந்தாலும் எனக்கு பிடிச்சது நிலா தான்....இந்த உலகத்துல எத்தனையோ பெண்கள் இருந்தாலும் எனக்கு பிடிச்சது நீதான்....

 நீங்க..பத்து மாசம் தான் ஜனனியை (ஹீரோயின் ) சுமந்தீங்க...நான் அவங்களை பார்த்ததில் இருந்து நெஞ்சில சுமந்திட்டு இருக்கேன்....

சத்யன் காதல் டயலாக்...
இதை விட கொடுமை.. இவங்க ரெண்டு பேருக்கும் டுயட்....வேற..

பேசாம இதுக்கு உலகம் அழிஞ்சு இருக்கலாம்..
---------------------------------------------------------
கோலி சோடா - கலர்
சிறுவயதில் விரும்பி குடித்த பானம்.வெளிநாட்டு பானங்கள் வரும் வரை தமிழகத்தில் கோலோச்சிய குளிர்பானங்கள்...இப்போது காணக்கிடைக்காத அதிசயபொருளாய்....எங்காவது ஒரிரு கிராமங்களில் மட்டும் இது கிடைக்கிறது...கோலா என்று கருப்பு கலரில் இருக்கும் இது நல்ல சுவையுடன் இருக்கும்...ஜிஞ்சர் எனப்படும் இன்னொரு கலர் வயிற்று வலிக்கு நல்ல மருந்தாக இருக்கும்...

------------------------------------------------------------------
புரட்டாசி மாதத்தில் வந்த ஒரு விளம்பரம்..நாமக்கல் போன போது கிளிக்கியது....கோல்டன் பேலஸ் ஹோட்டல்...
----------------------------------------------------------------
மலேசியா போய்ட்டு வந்த போது வாங்கிட்டு வந்த சரக்கு...ஜாகர்மில்டர்-
ஆன் தி ராக்ஸ் - இதை அப்படியே குடிக்கலாம்..செமையா இருக்கும்...
 அன்னிக்கு இதை சாப்பிட்டு கிட்டு இருக்கும் போது நம்ம அம்மணி சிம்பாலிக்கா கொண்டு வந்து பக்கத்துல வச்சது ஆல் அவுட்...என்னா ஒரு கொலவெறி...
---------------------------------------------------------------

நேசங்களுடன்
ஜீவானந்தம்

8 comments:

  1. கடைசி படம் - கலக்கல்! :)

    ReplyDelete
  2. மச்சி அது ஜேகர் மீஸ்டர்.. ( Jager bomb பத்தி சொல்லாம விட்டுட்டயே..!)

    ReplyDelete
  3. கரம் மசாலா ..நல்ல வாசனை !

    ReplyDelete
  4. அன்னிக்கு இதை சாப்பிட்டு கிட்டு இருக்கும் போது நம்ம அம்மணி சிம்பாலிக்கா கொண்டு வந்து பக்கத்துல வச்சது ஆல் அவுட்...என்னா ஒரு கொலவெறி.
    >>
    உங்க அம்மணி நல்லவங்க போல. என் ஆத்துக்காரர் இதுப்போல சாப்பிட்டுக்கிட்டு இருந்தா ஒரு டம்பளர்ல ரெண்டுத்தையும் மிக்ஸ் பண்ணி குடுத்து அவரை குடிக்க வெச்சிருப்பேன்

    ReplyDelete
  5. மாயன் கலெண்டரில் ஆரம்பிச்சு, கடைசியில் மப்பில் முடிதிருகிரீர்கள்......இது பிளான் பண்ணி செய்ததா ?

    ReplyDelete
  6. பாஸ் இப்போவெல்லாம் நம்ம ஊரில் கோலி சோடா கிடைப்பதில்லையா...? ஒரு காலத்தில் நானும் விரும்பிக் குடித்த பானம்.எல்லாமே கலக்கல்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....