Saturday, December 1, 2012

கோவை மெஸ் : செல்வி மெஸ், சீலநாய்க்கன்பட்டி, சேலம்

செல்வி மெஸ் சேலத்தில் இந்த பேரை அதிகம் கேள்விப்பட்டு இருக்கிறேன்.இதற்கு ஒரு நாள் வாய்ப்பு வந்துச்சு.சென்னையில் இருந்து ரிட்டர்ன் வரும் போது சேலம் சீலநாய்க்கன்பட்டியில்  செல்வி மெஸ் போர்டு கண்ணில் பட்டவுடன் பளீரென கொஞ்சம் ஞாபகத்திற்கு வரவே போய்க்கொண்டிருந்த நம்ம சிங்கத்தை நிறுத்தி பின் ரிவர்ஸ் எடுத்து திருப்பி இந்த மெஸ்க்கு வந்தேன்.(பேசாம அப்படியே போய் இருக்கலாம்..விதி வலியது...)
 
 
அலுமினியம் பார்டிசன் போட்டு சன் பிலிம் லாம் ஒட்டி உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாமல் இருக்கிறது இந்த மெஸ்ஸின் அமைப்பு. நுழைந்தவுடன் பார்த்தால் உள்ளே கும்பலாய் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர்.சரி கூட்டம் அதிகமா இருக்கு சுவையும் நல்லா இருக்கும் என்று நினைத்து விட்டேன்...அப்புறம் தான் தெரிகிறது சுவை சுத்தமாய் இல்லை என்று.கைகழுவும் இடத்தில் வைக்கப்பட்டு இருந்த போர்டு பார்த்தவுடனே கொஞ்சம் ஜெர்க் ஆகித் தான் போனேன்.
ரொம்ப கறார் பேர்வழி போல என்று நினைத்துக் கொண்டே பிரியாணி, மட்டன் சுக்கா, ஈரல், மீன், சில்லி சிக்கன் என இருக்கிறதில் ஒவ்வொரு உயிரினமாக சொன்னேன். ஒவ்வொன்றாய் வந்தது...ஒன்றுமே சரியில்லை.ஈரல் கொஞ்சம் கூட நன்றாகவே இல்லை.அதுபோலவே பிரியாணியும்......கொடுத்ததில் முட்டை மட்டும் தான் நன்றாக இருக்கிறது. பிரியாணிக்கு உண்டான மணம், சுவை இல்லை.ஒரு மெஸ்ஸில் இருக்கிற சுவை என்பதே இல்லை.நல்ல காரம் சாரமா இருக்கும் என்று எதிர்பார்த்து போனவனுக்கு சப் என்று ஆகிவிட்டது.
இத்தனைக்கும் அன்னிக்கு  கொஞ்சம் தெளிவாத்தான் இருந்தோம். அப்படியும் சுவை சரியில்லை என்றால் எப்படி இருக்கும்.தலைக்கறி, நண்டு வருவல் ரொம்ப ஃபேமஸ் என்று சொன்னார்கள். நல்லவேளை...அன்னிக்கு அவைகளுக்கு கொடுப்பினை இல்லை.இனி சேலம் போனால் இந்த செல்வி மெஸ் பக்கமே எட்டி பார்க்க கூடாது என்ற எண்ணத்தினை ஏற்படுத்தி விட்டது.
விருப்பம் இருக்கிறவர்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பாருங்கள்.பஸ் ஸ்டாண்ட் அருகில் இன்னொரு கிளை இருக்கிறதாம்.எந்திரிச்சே நிக்க முடியலயாம்...இதுல ஒன்பது பேராம்.....அப்படிங்கிற சந்திரமுகி பட டயலாக் தான் ஞாபகம் வருது....
விலையும் அந்த ஊருக்கு ஏற்றதை விட அதிகமாகத்தான் இருக்கிறது.கொடுத்த காசுக்கு உண்டான சுவை இல்லை எனலாம்.சேலம் மாவட்டத்தில் நிறைய மெஸ்கள் இருக்கின்றன.அசைவ வகைகளுக்கு பெயர் போன மாவட்டம் சேலம் தான்.தலைக்கறி, குடல் கறி செமையாக இருக்கும்.ஏனோ தெரியவில்லை.அன்று கேள்விப்பட்டதை வைத்து உள்ளே நுழைந்து விட்டோம்.சுவை சுத்தமாக இருக்கிறது....பார்ப்போம்..இனி வேறொரு நாளில்....இதே மெஸ்சில்...இன்னொரு கிளையில்....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

4 comments:

 1. அப்ப விடப்போறதில்ல?

  ReplyDelete
 2. அது சின்ன பெட்டிக்கடையாய் இருந்த போதில் இருந்தே சென்றிருக்கிறோம் நல்ல வளர்ச்சி இன்னொரு காரணம் பைபாஸில் ஹோட்டல்கள் அப்பொழுதெல்லாம் அவ்வளவாக இல்லை. நீங்க சொன்ன மாதிரி பிரியாணி ரொம்ப மோசமாகவெல்லாம் இல்லை.ரசம் சூப்பர். சென்ற வாரம்தான் சாப்பிட்டோம். மட்டன் பிரியாணிதான் ரொம்ப டேஸ்ட் என்று என் கணவர் சொன்னார்.நான் சாப்பிட்டதில்லை .

  ReplyDelete
 3. நானும்..வீட்டம்மாவும் போனமாசம் பஸ்ஸ்டாண்ட் கிளைகடைக்குப் போய் சாப்பிட்டு வெறுத்துப் போய் விட்டோம்! விலையும் குறைவில்லை !

  ஒண்ணு மட்டும் சொல்லலாம்..கோவை மக்களுக்கு ருசி ரொம்ப கேக்குது!

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....