ராஜபாளையத்தில் அய்யனார் கோவிலும் ஒரு அருவியும் அருகிலேயே இருக்கிறது என்று நண்பர்கள் சொன்னதால் சிவகாசியில் இருந்து அங்கு கிளம்பினோம்.ராஜபாளைத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் இந்த அய்யனார் கோவில் இருக்கிறது.கோவில் செல்லும் பாதையின் இருமருங்கிலும் மாமரங்கள், தேக்கு மரங்கள், புளிய மரங்கள் என இருபுறமும் பசுமையாய் இருக்கிறது.மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கையில் எங்கு பார்த்தாலும் பசுமை...சில்லிட வைக்கும் சாரல் என அற்புதமாய் இருக்கிறது.கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது.
கார் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு பார்த்தால் நிறைய எச்சரிக்கை போர்டுகள்...வனப்பகுதியில் தீ மூட்டாதீர் என்று....அருகே ஒரு பெரிய ஆலமரம் நிறைய விழுதுகளுடன்....எப்பவும் போல இங்கு நம் முன்னோர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள்...
கோவிலை அடைந்தோம்..மிக அமைதியாக இருக்கிறது.மலைகளில் இருந்து வரும் அருவி நீர் ஓடை போல் கோவில் அருகே வருகிறது.ஒரு ஓடை மிக மெல்லியதாய் சிறு சிறு பாறைகளுக்கு இடையே வந்து கொண்டு இருக்கிறது.தண்ணீரில் கால் வைத்ததும் செம குளிர்ச்சி....இந்த ஓடையை தாண்டி தான் செல்ல வேண்டும் அய்யனார் கோவிலுக்கு...அருவி தான் எங்க இருக்குனு தெரியல..காட்டுக்குள் ரொம்ப தூரம் செல்லவேண்டும் என்று சொன்னதால் போகவில்லை...
நிசப்தம்..எங்கும்..நகர வாழ்க்கையின் பரபரப்பு கொஞ்சம் கூட இல்லை இங்கு...பறவைகளின் கீச்சிடல், இயற்கையின் சப்தம் என மிக அமைதியாக அம்சமாக இருக்கிறது.
தல வரலாறு :
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில், பாலாறு, நீராறு ஒன்றாக சேரும்
ஆற்றங்கரை ஓரத்தில் நீர் காத்த அய்யனார் அருளாட்சி செய்து
கொண்டிருக்கிறார்.
இவருக்கு வலது புறம் பூர்ணா, இடதுபுறம் புஷ்கலா தேவியார்
வீற்றிருக்கின்றனர்.கிட்டதட்ட 500 - 1000 ஆண்டுகளுக்கு முன் ராஜ ராஜ சோழன் காலத்தில் இக்கோவில் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.(ஆனால் இப்பொ இருக்கிற தூண்கள் அனைத்திலும் யாராவது ஒருத்தர் பெயர் பொறிக்கப்பட்டு இருக்கிறது..நன்கொடை கொடுத்தவர்களாம்....)
கோவிலின் உள்ளே சுற்றி வர பிரகாரம் கொஞ்சம் பெரிதாகவே இருக்கிறது.இந்த இந்தக் கோயிலில் வனலிங்கம், தலைமைசுவாமி, பெருமாள் , லட்சுமி, சின்ன
ஓட்டக்காரசாமி, பெரிய ஓட்டக்காரசாமி, வனகாளி, மாடம், மாடத்தி, ரக்காச்சி
அம்மன், வனப்பேச்சியம்மன், கருப்பசாமி, தர்மராஜர், சப்தகன்னிமார் ஆகிய
தெய்வங்கள் அருள்பாலிக்கிறார்கள்.
இந்தகோவில் விசேசம் என்னவெனில் குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளையும், குறைகளையும் போக்கவும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.பிரார்த்தனை நிறைவேறியதும் அபிஷேகம் செய்து, தங்களால் இயன்ற பொருளுதவி, அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
இப்போது ஓடையில் நீர் வரத்து குறைவாக இருக்கிறது.திடீர் என்று வெள்ளப்பெருக்கும் ஏற்படும்..இந்த ஓடையை தாண்டி தான் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
இயற்கையை விரும்புகிறவர்கள், தனிமையை நாடுபவர்கள் செல்லவேண்டிய அற்புத இடம் இந்த அய்யனார் கோவில்...
ராஜபாளையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறது.பஸ் போக்குவரத்து வசதி இருக்கிறது.
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் சைக்கிளில் சென்று அருவியில் குளித்துவிட்டு வருவோம். தற்போது சில வருடங்களாக வனத்துறையினரின் கெடுபிடி அதிகமாகிவிட்டது. அருவி பக்கமோ சுனை பக்கமோ குளிக்க அனுமதிப்பதில்லை...
ReplyDeleteமழை அதிகமாக இருக்கும் நேரத்தில் ஓடையைக் கடக்கக்கூட முடியாத அளவுக்கு தண்ணீர் இருக்கும். சித்திரை வருடப்பிறப்பு இந்தக்கோவிலின் தனிச்சிறப்பு... முடிந்தால் அப்போது சென்று பாருங்கள்...நன்றி...
சிறப்பான இடம் தான் போல! தனிமையை விரும்புபவர்களுக்கு நல்ல இடம்..
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பரே.
மாப்ஸ்.. ஒரே டூர் போல இருக்கு..!
ReplyDeleteமாப்ளே இந்த இடம் நல்லா இருக்குதே
ReplyDeleteரம்மியமான இடங்கள் ..படங்கள் அருமை.
ReplyDeleteகண்களை நிறைக்கிறது படங்கள் ...........நல்லாத்தான் சுத்துரீங்க ஊரை
ReplyDeleteஒருத்தரக்கூட காணோம், கொஞ்சம் பயமாவும் இருக்கு
ReplyDeleteநீர் காத்த அய்யனார் கோவில் , ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம். = 19.12.12 இல் எழுதிய பதிவு. அருமையாக எழுதியிருக்கிறார்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி கோவை நேரம்
ReplyDelete