Friday, December 14, 2012

கோவை மெஸ் - படையப்பா மெஸ் - திருப்பூர்

படையப்பா...முயல்கறி....
திருப்பூர்ல தமிழ்ச்செடி விழாவிற்காக பிளான் போடும் போதே எப்படியாவது இந்த வாரம் முயலை பிடிச்சிட வேண்டியது தான் அப்படின்னு நினைத்தபடியே திருப்பூர் போனோம்...கொஞ்சம் சீக்கிரமாகவே விழா முடிஞ்சதினால் அடுத்த வேளை நம்ம சாப்பாட்டு வேளை தான் என்பதால் உடனடியாக படையப்பா ஹோட்டலுக்கு புறப்பட்டோம்..
(தலைவர் ரசிகனா இருப்பார் போல இந்த மெஸ்ஸின் முதலாளி...)

கொஞ்சம்  விசாலமாகவே இருக்கிறது .உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய  வாஸ்து மீன் நம்மை வர வேற்கிறது .இதை பார்த்த வுடன் இதையும் வறுத்து தருவார்களா என்ற யோசனையுடனே  உள்ளே நுழைந்தோம்..சுவற்றில் ஒட்டியிருந்த முயல் கறி நோட்டிஸ் உள்ளே முயல் இருக்கிறதை உறுதிப்படுத்தியது...
உள்ளே அமர்ந்ததும் பவ்யமாக பக்கத்தில்  வந்து நின்ற சர்வர் பையன் ரொம்ப தெய்வீகமாய் காட்சியளித்தான்.இருக்கிற கொஞ்சூண்டு நெத்தியில் வரிசை வரிசையாய் பொட்டு வைத்து இருந்தான்.என்ன இருக்கிறது என்று கேட்டதுதான் தாமதம்...ஒப்பிக்க ஆரம்பித்தான்....வாயை திறந்ததும் வந்து விழுந்த மெனுக்களோ ஒரே அசைவம்.சரி.,.சொல்லி முடிக்கட்டும் என்று ஒரு நிமிடம் காத்து இருந்தோம்...
இந்த ஹோட்டல் ஸ்பெசல் முயல் கறி என்று தெரிந்ததினால் அதனை ஆர்டர் செய்தோம்...அப்புறம் பிரியாணி, நாட்டுகோழி  வறுவல்.......(மெஸ்ஸில் இன்னும் நிறைய அசைவ வகைகள் இருக்கிறது...இன்னொரு தினம் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்..)

 (முயலை காணோம் )


 
முயல் கறி.....நன்றாக இருக்கிறது.ஆனால் அளவு குறைவுதான்.அதிக வித்தியாசம் இல்லை.மட்டனுக்கும் இதற்கும்......சிறுவயதில் எங்கள் கிராமத்தில்  நரிக்குறவர்கள் காடை, கவுதாரி, காட்டு முயல் கொண்டு வந்து விற்பார்கள்..அப்போது முயல் கறி சாப்பிட்டது தான்..அதற்கு அப்புறம் கோவையில் ஒரு தடவை சாப்பிட்டு இருக்கிறேன்...நீண்ட வருடம் கழித்து இப்போது தான் சாப்பிடுகிறேன்...
சுவை நன்றாக இருக்கிறது..திருப்பூர் வாசிகளுக்கு ஏற்ற காரத்துடன் இருக்கிறது. இந்த ஹோட்டல் அருகிலேயே பார் வேற இருக்கு.அதனால் கொஞ்சம் காரம் சாரமாகவே இருக்கிறது.அடிக்கிற வெயிலுக்கு ஏத்த மாதிரியே காரமும் இருக்கிறது.
மட்டன் பிரியாணி சாப்பிட்டு பார்க்கலாம்.அப்படி ஒன்றும் அதிக சுவை இல்லை.......நாட்டு கோழி வறுவல் புது விதமான சுவையுடன் இருக்கிறது.பிரியாணி முடித்தவுடன் கொஞ்சம் சாதம் சாப்பிட்டு வெளியேறினோம்...நாங்கள்  சாப்பிட்டு முடிக்க  அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் ஆக கூட்டம் கூட ஆரம்பித்தது.விலை கொஞ்சம் அதிகம் தான்.முயல் கறி சாப்பிடணும் என்பவர்களுக்கு இந்த ஹோட்டல் ஓகே...

திருப்பூரில்  இருக்கிற பேமஸ் மெஸ் இது.குமரன் ரோட்டில் இருக்கிறது.

நேசங்களுடன்

ஜீவானந்தம்



8 comments:

  1. இது தானே வேணாங்கறது..முயல் சாப்பிடரதுன்னு முடிவு பண்ணிட்டு அப்புறம் ஏன் சர்வர எல்லா மெனுவும் சொல்ல சொல்றீங்க..

    ReplyDelete
  2. விலையைப் பற்றி ஒண்ணும் சொல்லலையே?

    ReplyDelete
  3. அப்போ அடுத்த ட்ரிப் திருப்பூருக்கு......நல்ல சுவையான பதிவு. ஆமாம், முயல் கரி எவ்வளவு ஆகுதுன்னு சொல்லவே இல்லியே !

    ReplyDelete
  4. வாஸ்து மீனை வாஸ்துபடி சமைச்சு சாப்பிடனுமோ ?

    ReplyDelete
  5. எப்படியோ சாப்பிட்டாச்சு கொஞ்சம் பார்சல் செய்து கொண்டுவந்திருக்கலாமில்ல நாங்க சாப்பிட்டதில்ல .
    எங்க பெரியம்மா வீட்டில் கறிக்காகவே வளர்த்தார்கள் ஆனால் என்னமோ அழகான முயலை சாப்பிட மனசு வரலை.

    ReplyDelete
  6. வந்த அனைவருக்கும் முயல் கறி பார்சல் பண்ணப்படும்...ஹி ஹி ஹி

    ReplyDelete
  7. இவர் எனது சொந்த ஊருக்கு அருகில் உள்ளவர். நீங்கள் பார்த்த கடைக்கு அருகே ஒரு சந்து இருந்ததே அந்த சந்தில் தான் தொடக்கத்தில் இட்லி தோசை மட்டும் ரோட்டோர கடையாக போட்டு விற்றுக் கொண்டிருந்தார்.

    நம்மூர் மக்கள் சாம்பர்ர் பக்குவம் எப்போதும் கைகொடுக்கும். அதில் ஆரம்பித்த லக் இன்று ஊரில் மட்டும் 10 கோடிக்கும் மேல் சொத்து.

    திருப்பூர் மக்களுக்கு கொஞ்சம் ருசியாக இருந்து விட்டால் போதும். இப்போது இருக்கும் கடையை கோடிக்கு மேல் விலை கொடுத்தும் வாங்கி விட்டார்.

    ReplyDelete
  8. muyal kari udampuku nalla tham saptutu enakum konjam parcel paduthutu vanga k va

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....