Monday, December 17, 2012

கோவை மெஸ் - பால்கோவா, ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா:
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே நமக்கு பால்கோவா தான் முதலில் ஞாபகம் வரும்.அந்த அளவுக்கு உலக பிரசித்தி பெற்ற சுவை வாய்ந்தது இந்த ஊரில் தயாரிக்கப்படும் பால்கோவா.சிவகாசி போயிட்டு அப்படியே இந்த ஊருக்கு போய் ஆண்டாளை தரிசித்து வரலாம் என்று போனேன்.ஊருக்குள் நுழையும் போதே ஆங்காங்கே நிறைய பால்கோவா கடைகள்.ஒரு சின்ன சந்துக்குள் நுழைந்தால் கோவில்...அண்ணாந்து பார்த்தால் கோபுரம்.... கோவில் கோபுரம் முழுக்க கீற்று மட்டையால் மூட பட்டிருக்கிறது.அடடா...இந்த கோபுரத்தை தரிசிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே....சரி வந்தது வந்தோம்... இருக்கிறதை போட்டோ எடுக்கலாம் என்று கோபுரத்தினை எடுத்தேன்.தமிழக அரசின் முத்திரையான இந்த கோபுரம் இப்போது செப்பனிடப்பட்டு கொண்டு இருக்கிறது.இன்னும் மூன்று மாதத்திற்குள் தயாராகி விடுமாம்....

 ற்பையம்
கோவிலுக்கு எதிரே உள்ள ஒரு பெட்டிக்கடையில் இந்த ஊரில் எந்த கடையில் பால்கோவா நன்றாக இருக்கும் என்று கேட்டதற்கு அருகில் உள்ள அரசு கடையை (மதுபானகடை இல்லீங்கோ...) காட்டினார்...
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு பால்பண்ணை பால்கோவா கடை..
கடைக்கு சென்றவுடன் பால் கோவா கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்க்க கொடுத்தார் கடை ஓனர்..சுவை நன்றாக இருந்தது..அடுத்து பால் அல்வா கொஞ்சம் கொடுத்தார்...அதுவும் நன்றாக இருந்தது... கொஞ்சம் பார்சல் வாங்கி கொண்டு வெளியே வந்தால் ஏகப்பட்ட பால்கோவா கடைகள் ...கோவிலுக்கு அருகே இரு புறமும்....ஊரு முழுக்க இதே கடைகள் தான் இருக்கும் போல...பால் மணம் வீசிக்கொண்டே இருக்கிறது...





 கிட்டதட்ட 60 ஆண்டு காலமாக இந்த பால்கோவா தொழில் இருக்கிறதாம். நிறைய பேருக்கு குடிசைத் தொழிலாக இது இருக்கிறது.
ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில் கோபுரம் இல்லாமல் இந்த பதிவை முடிப்பதா..
ு நெட்டில் சுட்டு..
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பசுமை வாய்ந்த இடமாய் இருக்கும் இந்த ஊரில் ஏகப்பட்ட பசுக்கள் இருப்பதால் பால் அதிகம் கிடைக்கிறது.பாலும் நல்ல சுவையுடன் இருப்பதால்தான் இங்கு பால்கோவா பிரசித்தி பெற்று இருக்கிறது.

இந்த கடை கோவில் கோபுரம் எதிரில் இருக்கிறது.


நேசங்களுடன்
ஜீவானந்தம்.



5 comments:

  1. அடடா..... அருமையோ அருமை!

    நானும் ஸ்ரீவில்லிபுத்தூர் போயிருக்கேன்,ஆனாலும் இந்தப் பால்கோவாவை ருசிக்க எனக்கு வாய்க்கலையே!

    அப்போதும் இப்போதும் கண்ணால் தின்னதோடு சரி!

    ReplyDelete
  2. பார்வைக்கு நல்ல விருந்து..!

    ReplyDelete
  3. ஏனுங்க தம்பி, எங்க போனாலும் நீயே தனியே சாப்புடுறியே இந்த அக்கா ஞாபகம் வரவே இல்லியா?

    ReplyDelete
  4. எங்களுக்கு எங்கப்பா பால்கோவா?....

    ReplyDelete
  5. ஸ்ரீவில்லிபுத்தூர் போக வேண்டும் என ஆசை வந்துவிட்டது.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....