Monday, July 1, 2013

கோவை மெஸ் - தேங்காய் பன் , கோவை

தேங்காய் பன் : கோவையில இருக்கிற எல்லா பேக்கரியிலும் கிடைக்கிற ஒரு தின்பண்டம் தான் இது.இது முக்கோண வடிவில் இருக்கும்.தேங்காய் துருவலுடன் இனிப்பு சேர்த்து பன்னுக்குள் வைத்து ஸ்டஃப் செய்யப்பட்டிருக்கும்.ஏலக்காய் டூட்டி ஃப்ரூட்டி என கலர்புல்லா இருக்குற இந்த தேங்காய் பன் சாப்பிட்டா சூப்பரோ சூப்பர்.
 
ஒரு பெரிய வட்டமாகத்தான் செய்வார்கள்.ஆனால் பீஸ் போடும் போது முக்கோண வடிவில் கட் பண்ணி தருவார்கள்.மிக சுவையாக இருக்கும். டீ சாப்பிடும் போது இதை கூட சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.நான் பேச்சலரா இருக்கும் போது அதிக நாட்கள் பசி தீர்க்க உதவியது இந்த தேங்காய் பன் தான்.ஒரு பன் சாப்பிட்டாலும் சும்மா வயிறு நிறைஞ்சு கிண்ணுன்னு இருக்கும்.பசியே தோணாது.வேலை முடிந்து களைப்பா வரும் போது சூடா டீ யோடு சேர்த்து இதை கொஞ்சம் கொஞ்சமா புட்டு புட்டு சாப்பிடும் போது அப்படியே எனர்ஜி சேர்ந்து கூட வரும்.அதே மாதிரி வேலைல இருக்கும் போது சாயந்திரம் பயங்கரமா பசிக்கும் அப்போது கடைக்கு போய் டீ தேங்காய் பன் ரெண்டையும் சேர்த்து சாப்பிட்டா பசி கொஞ்சம் பறந்து போகும்.
1998ல கோவைல ஒரு கம்பெனியில் வேலை செய்யும் போது ஆப் நைட் ஷிஃப்ட் முடிச்சிட்டு 1 மணிக்கு ரூமுக்கு நடந்து வருவோம்.ரொம்ப பசியா இருக்கும்.ஹோட்டல் லாம் இருக்காது.ஆனா பேக்கரி மட்டும் திறந்திருக்கும்.அப்போ வர்ற வழியில எங்களுக்காகவே தேங்காய் பன் வச்சி இருப்பாங்க.அதை மூணு நாலு வாங்கிட்டு சாப்பிட்டுகிட்டே தெம்பா வீடு போய் சேர்வோம்.பசியும் அடங்கின மாதிரி இருக்கும்.தூக்கமும் உடனே வரும்.அப்போ இருந்து இன்னமும் தேங்காய் பன் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது.
இப்போ விக்கிற விலைவாசிக்கு தகுந்த படி விலையை ஏத்திட்டாங்க.ஒரு பீஸ் 7 ரூபாய்.ஆனாலும் செம ஓட்டம் ஓடிட்டு தான் இருக்கு.வாங்கி சாப்பிட்டு பாருங்க.அதன் டேஸ்ட் தெரியும்.சங்கனூர் நால்ரோட்டுல ஒரு போலிஸ் செக் போஸ்ட் இருக்கு.அதுக்கு எதிர்த்தாப்புல இருக்கிற பேக்கரில ரொம்ப டேஸ்டா இருக்கும்.அங்க தான் அடிக்கடி வாங்குறது ஒரு முழு ரவுண்ட் பன்.செம டேஸ்டா இருக்கும்.இதன் வாழ்நாள் இரண்டு நாள்தான்.இல்லேனா நல்லாருக்காது.கோவையில இருக்கிற எல்லா பேக்கரியிலயும் அவங்க அவங்களே தங்களுக்கு தேவையான ப்ரெட், கேக், பிஸ்கட், தேங்காய் பன் என எல்லாம் தயாரித்துவிடுகிறார்கள்.அதனாலே எப்பவும் பிரஷான தேங்காய் பன் தான் கிடைக்கும்.தாராளமா வாங்கி சாப்பிடலாம்.பன் என்றாலே மைதா மாவுதான்.இப்போ மைதாவுல என்னென்னமோ இருக்குன்னு சொல்றாங்க.ஆனாலும் இதற்கென ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் புரோட்டாவிற்கு இருப்பது போல.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

 

28 comments:

  1. Replies
    1. சாப்பிட்டு பாருங்க...இன்னும் சூப்பரோ சூப்பர்

      Delete
  2. பசியை குறைக்கும்... சில சமயம் பசிக்கவும் செய்யாது...

    ReplyDelete
    Replies
    1. ஆமா...ஆனா நல்லா இருக்கும்

      Delete
  3. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி...நம்ம பிரவுசர் வேலை செய்ய மாட்டேங்குது

      Delete
  4. அப்பம்பாலிக் மாதிரி.. (எங்க ஊர் பலகாரம்)

    ReplyDelete
    Replies
    1. இந்த தடவை வரும் போது சாப்பிட்டு விடலாம்

      Delete
  5. எங்க ஊருலயும் கிடைக்குது.., இளம்சூட்டில் சாப்பிட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா...ரொம்ப சந்தோசம்...இளம் சூட்டுல சாப்பிடணும் னா அடுப்பங்கரையில உட்கார்ந்தே இருக்கணும்....ஹிஹிஹி

      Delete
  6. Jeeva can you tell me the name of the bakery which is in sanganur, I also used to buy from there, But forgot the name.

    ReplyDelete
    Replies
    1. பாலாஜி...எனக்கும் மறந்து போச்சு...ஆனா கடை ஞாபகத்தில் இருக்கு.மரக்கடை ஒண்ணு இருக்கு அதுக்கு முந்தின கடை...கார்னர் கடை...

      Delete
  7. மலரும் நினைவுகள் ஜீவா. நான் கணபதியில் இருந்தப்ப "ராகம்" பேக்கரி ரொம்பவே பேமஸ். அப்ப 50 காசு ஒரு பன். அப்புறம் நான் காலேஜ் படிக்கிறப்ப 3 ரூபா. இப்ப ஏழு ரூபாவா...

    ReplyDelete
    Replies
    1. ஓ,,,நீங்க கோவைல சாப்பிட்டு இருக்கீங்களா....ஆமா விலை ஏறிவிட்டது நண்பரே

      Delete
  8. நானும் சாப்பிட்டிருக்கிறேன் - திருச்சியில்....

    சுவையை நினைவூட்டியது உங்கள் பகிர்வு....

    ReplyDelete
    Replies
    1. ஓ...எல்லா ஊருலயும் கிடைக்கும் போல....நன்றி சார்

      Delete
  9. ஆமாம் ஜீவா, இன்னுமும் அந்த சுவை நாக்கில் இருக்கு, உங்க பதிவு அந்த நினைவை கிளப்பி விட்டுடுச்சு !

    ReplyDelete
    Replies
    1. ஓ...அப்படியா நண்பரே.....ஒரு நாள் வாங்க மறுபடியும்...சேர்ந்து போலாம்....

      Delete
  10. One backery below north coimbatore fly over also having more of coconut and good tate you can try one time, [DG ADUMANY]EAST OF RAILWAY TRACK

    ReplyDelete
  11. கண்டிப்பா நண்பரே...சாப்பிட்டு பார்த்திடுவோம்.

    ReplyDelete
  12. ஆம், இது மிகவும் சுவையாக இருக்கும். ராமகிருஷ்ணா மருத்துவமனை எதிரில் பேக்கரி. இங்கே எப்போதும் சூடாக இருக்கும்.

    ReplyDelete
  13. தேநீர் அதே 1998 இரவு வேலை பேக்கரி! சூப்பர்

    ReplyDelete
  14. Karamadi is famous for thengai bun.. neenga karamadi thenga bun sapittu irrukkingala,,,sapputu parungo... :)

    ReplyDelete
  15. Pure coconut bun is Ok but all are adding the duty fruity- it colour coated papaya Excess colour is not good for health...Agri Marruthu,Coimbatore

    ReplyDelete
  16. கோவையில் ஊட்டி வருகி கிடைக்கும் இடம் பற்றி சொல்லுங்க. கோவை வரும்போது எல்லாம் வாங்குகிறேன்,எதுவும் உண்மையான வர்கி இல்லை.

    ReplyDelete
    Replies
    1. கோவையில் ஊட்டி வர்க்கி வாங்கியதில்லை.ஊட்டி குன்னூர் போனால் மட்டும் அங்கிருந்தே வாங்கி வருவேன்.இனி தேடிப்பார்க்கனும்...

      Delete
  17. நண்பரே நீங்கள் ஒரு முறை
    ரெட்ரோஸ் பேக்கரியில் தேங்காய் பன் சுவைத்து பார்க்கவும்
    https://www.facebook.com/Redrosebakery.coimbatore/
    https://www.facebook.com/Redrosebakery.coimbatore/photos/a.392125404193113.90974.391764757562

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செல்கிறேன்...

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....