டிவி நேரம் :
வீட்ல டிவி நிகழ்ச்சிகளை பார்த்துட்டு இருந்தபோது துப்பாக்கி படத்தோட விளம்பரம் வந்தது..நான் வச்சிருக்கிறது ஏர்டெல் டிஷ் டிவி அதுல ஒரு குறிப்பிட்ட சேனலில் ஒளிபரப்பாகும் படத்தினை பார்க்கனும்னா புக் பண்ணனும்.அதுக்கு தான் விளம்பரம்.அதுல துப்பாக்கி அப்படின்னு போடறதுக்கு பதிலா தீப்பக்கி ன்னு போட்டு காசாக்கிகிட்டு இருந்தாங்க.அடப்பாவிகளா.....தமிழைக் கூட ஒழுங்கா எழுத தெரியாம...? அட பக்கி களா...? தமிழ் நாட்டுல தான் இந்த கொடுமையெல்லாம்...
வீட்ல டிவி நிகழ்ச்சிகளை பார்த்துட்டு இருந்தபோது துப்பாக்கி படத்தோட விளம்பரம் வந்தது..நான் வச்சிருக்கிறது ஏர்டெல் டிஷ் டிவி அதுல ஒரு குறிப்பிட்ட சேனலில் ஒளிபரப்பாகும் படத்தினை பார்க்கனும்னா புக் பண்ணனும்.அதுக்கு தான் விளம்பரம்.அதுல துப்பாக்கி அப்படின்னு போடறதுக்கு பதிலா தீப்பக்கி ன்னு போட்டு காசாக்கிகிட்டு இருந்தாங்க.அடப்பாவிகளா.....தமிழைக் கூட ஒழுங்கா எழுத தெரியாம...? அட பக்கி களா...? தமிழ் நாட்டுல தான் இந்த கொடுமையெல்லாம்...
******************************************
காமெடி சூப்பர்ஸ்டாரான சந்தானம் நடிச்ச முதல் படம் சிம்பு கூடத்தான் அப்படின்னு சொல்றாங்க.ஆனா சந்தானமோ நிறைய துக்கடா படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து இருப்பார் போல...அப்படித்தான் இந்த படத்தினை பார்க்க நேர்ந்தது.குணாலும் சந்தானமும் ஒரு சீனில் தோன்றும் பேசாத கண்ணும் பேசுமே அப்படிங்கிற படம்.(அதையும் உட்கார்ந்து பார்த்து இருக்கேனா பார்த்துங்குங்க...) நடிக்கவே தெரியாத ஒரு நடிகர் யாருன்னா அது குணால் தான்.அவர் மட்டும் இப்போ இருந்தா தினம் தினம் நாம செத்துட்டு இருப்போம்..
***************************************
சாவித்திரி
என்ன அழகு....கருப்பு வெள்ளை காலத்தில் கொடிகட்டப்பறந்த மிகச்சிறந்த அழகி...நடிகையர் திலகம்னு சும்மாவா சொன்னாங்க...
என்ன அழகு....கருப்பு வெள்ளை காலத்தில் கொடிகட்டப்பறந்த மிகச்சிறந்த அழகி...நடிகையர் திலகம்னு சும்மாவா சொன்னாங்க...
**********************************
ப்ரூக் பீல்ட் மாலில் வெள்ளிக்கிழமை அன்னிக்கு வெட்டியா உட்கார்ந்திட்டு இருக்கும் போது பக்கத்துல இருந்த ஒரு பிரியாணி கபாப் கடைக்கு அய்யர் வந்தாரு.அட...அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு யோசிக்கும் போதே தலைவர் உள்ளே நுழைந்து பூஜை புனஸ்காரங்களை செய்ய ஆரம்பிச்சாரு....அனேகமா இப்படித்தான் சொல்லி இருப்பாரோ....
ஓம் சிக்கன் பிரியாணி நமஹ...
நல்லா விக்கணும் நமஹ.....
ஓம் தந்தூரி சிக்கன் நமஹ...
தாராளமா போகணும் நமஹ...
ஓம் கபாப் சிக்கன் நமஹ..
கும்பலாய் வரணும் நமஹ...
ஓம் கபாப் சிக்கன் நமஹ..
கும்பலாய் வரணும் நமஹ...
பத்தி, சூடம் காண்பிச்ச பின்னாடி பிரசாதமாய் சில்லி சிக்கன் தருவார்னு நினைச்சோம் ஆனா தரவேயில்லை..
****************************************
பிடித்த பாடல்:
எதேச்சையா இந்த பாட்டை கேட்டபோது ரொம்ப பிடிச்சிருந்தது. குழந்தையோட அழகான வாய்சில இந்த பாட்டுல ரொம்ப அசத்தலா இருந்தது.வர்ஷா ரஞ்சித் என்கிற சின்னப்பெண் பாடி இருக்கு.ஜிதின் ரோசன் என்பவர் இசை அமைத்திருக்கிறார்.இந்தப்பாட்டு குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனா படம் தான் ஊத்திக்கிச்சு.
பாடல் : நரிவருது நரிவருது
படம் : தீக்குளிக்கும் பச்சை மரம்
*******************************
பதிவர் சந்திப்பு - நாள் -1.9.2013, இடம் - சென்னை - அனைவரும் வாரீர்
நேசங்களுடன்
நேசங்களுடன்
ஜீவானந்தம்
கரம்.... ரசித்தேன்.
ReplyDeleteநன்றி....
Deleteதமிழை நியுஸ்லதான் கொல்றாங்கன்னா, ஏர்டெல்-லயுமா கொல்றாங்க...
ReplyDeleteஎல்லாருமே கொல்றாங்க...
Deleteமச்சி.... ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டுக்காத...
ReplyDeleteஎன்ன பண்றது...
Deleteசாவித்திரி அற்புதமான நடிகை
ReplyDeleteம்....நடிகையர் திலகம் அல்லவா...
Deleteகலக்கல் கரம்.. சந்தானம் பற்றிய நியுஸ் புதுசு..
ReplyDeleteஎனக்கும் புதுசு தான்....
Deleteநல்ல தேடல் - ரசித்தேன்.
ReplyDeleteநன்றி...ரசித்ததற்கு..
Delete//பத்தி, சூடம் காண்பிச்ச பின்னாடி பிரசாதமாய் சில்லி சிக்கன் தருவார்னு நினைச்சோம் ஆனா தரவேயில்லை..// கோவை குசும்பு... :0)
ReplyDeleteஹிஹிஹி...
Deleteசாவித்திரி அம்மாவையும் ரசிக்கும் அளாவுக்கு உங்க நிலைமை இப்படி ஆகிடுச்சே!
ReplyDeleteஓல்ட் ஈஸ் கோல்டு இல்லையா....
Delete" நல்லவேளை அவர் இப்போ உயிரோடு இல்லை..இருந்தா நம்ம எல்லாரையும் கொன்னுருப்பார். "
ReplyDeletevery bad lines . . .
pls remove it
மாத்திவிட்டேன் நண்பரே,,
Delete