Sunday, August 18, 2013

பயணம் - சிங்கப்பூர் - MARINA BAY Sands , Singapore

கடந்த ஒரு வாரமா சிங்கப்பூர்ல ஊர் சுத்திட்டு இருந்தேன்.மிகப் பிரம்மாண்டமான அதே சமயம் மிகப் பிரமாதமான ஊர்.என்ன ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடு, சுத்தம், அப்புறம் அழகழகான அம்மணிகள் என அம்சமாய் இருக்கிறது சிங்கப்பூர்.சிங்கப்பூர்ல மெரினா பே சாண்ட்ஸ் என்கிற இடத்திற்கு போனேன்.கப்பல் மாதிரி இருக்கிற கட்டிடம்.அண்ணாந்து பார்த்தா நிச்சயம் கழுத்து சுளுக்கிக்கும்.அவ்ளோ உயரமான கட்டிடம்.ஸ்கைபார்க் எனப்படும் உச்சிக்கு மேலே போய் சுத்திப்பார்க்க  20 டாலர்.பில்டிங்கின் அண்டர்கிரவுண்டில் இருக்கிற கவுண்டரில் டிக்கெட் வாங்கிட்டு உள்ளே நுழைகையில் இந்த பில்டிங்கின் மாடல் இருக்கிறது.அதை பார்த்துவிட்டு நகர்கையில் நம்மை இழுத்துப்பிடித்து போட்டோ எடுக்கிறார்கள்.நாங்களும் போஸ் கொடுத்துவிட்டு லிஃப்ட்க்குள் போனோம். லிஃப்ட் மேலே போக போக காது உய்ங்...கிறது.56 மாடிக்கு போக வெறும் 32 செகண்ட்ஸ் தான்.செம பாஸ்ட்..கதவை திறந்து வெளிய பார்த்தா நம்ம போட்டோவை (அந்த பிரம்மாண்டமான கப்பல் பில்டிங் பேக்ரவுண்ட்ல நிக்க வைச்சு  எடுத்த போட்டோ) வச்சி கூவிக்கிட்டு இருந்தாங்க. அட...அதுக்குள்ளயா...என ஆச்சரியப்பட்டே 30 டாலர் கொடுத்து வாங்கிக் கொண்டோம்.(வரலாறு வேணும்ல).அப்படியே நடந்து போனா கப்பலோட மேற்பரப்புல இருக்கோம்.சுத்தியும் கண்ணாடித்தடுப்பு வைத்திருக்கிறார்கள்.அதில சாய்ந்துகிட்டு ஒவ்வொருத்தரும் செமையா போஸ் கொடுத்துகிட்டு இருக்காங்க.நாங்களும் அந்த ஜோதில ஐக்கியமாகிட்டோம்.மேலிருந்து கீழே பார்த்தால் எல்லாம் துக்குனூண்டு தெரியுது...சிங்கப்பூரோட ஒட்டு மொத்த அழகும் தெரியுது.கடல், கட்டிடம், ரோடு என எல்லாம் மிக அழகாய் தெரிகிறது.இந்த பில்டிங்கில் தான் இன்பினிடி ஃபூல் என்கிற நீச்சல் குளம் இருக்கிறது.இதில் நமக்கு குளிக்க அனுமதி இல்லை.எட்ட நின்னு பார்க்க மட்டுமே.அப்படி எட்டி பார்த்துவிட்டு பெருமூச்சினை விட்டபடி வேற பக்கம் நகர்ந்தோம்.


இந்த கப்பலின் மேற்பரப்பில் சுத்தி சுத்தி பார்த்துகொண்டே அதிசயப்பட்டோம். சிங்கப்பூர் அழகை ரசித்துக்கொண்டே இருக்கிறோம்..நேரம் போனதே தெரியவில்லை.அம்மணிகள் வேற அரைகுறை ஆடைகளுடன் உலாவுகிறார்கள்...அங்கிருந்து கிளம்ப மனசே இல்லை.சும்மா வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்துட்டு (அம்மணிகளை இல்லை..அங்கிருந்து தெரிகிற சிங்கப்பூர் அழகினை) கிளம்பினோம்.

பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்

நேசங்களுடன்
ஜீவானந்தம்18 comments:

 1. ஏன் நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதிக்க மறுக்குறார்கள்?

  நான் சிங்கப்பூர் போகும் போது இந்த கட்டடம் இல்லை.
  ஸ்பீட் லிப்டில் போய் சிங்கப்ப்பூரை ‘பறவை பார்வையில்’ பார்க்க ஆவல் எழுகிறது.

  ReplyDelete
  Replies
  1. கடவுள் பார்வை வேண்டாமா சார்??

   Delete
  2. எல்லா பார்வையும் பார்க்கலாம்...வாங்க...

   Delete
 2. சென்ற முறை விட்டுப் போனதை எல்லாம் கவர் பண்ணிட்ட போலிருக்கு.. அடுத்த முறை இன்பினிட்டி குளத்தில் குளிக்கறமாதிரி போகலாம்..

  ReplyDelete
  Replies
  1. ஆமா மச்சி..இன்னும் நிறைய இடம் இருக்கு பார்க்கல..

   Delete
 3. இவ்வளவு அழகாக இருந்தால், கிளம்ப எப்படி மனசு வரும்...? (சிங்கப்பூரை...!)

  ReplyDelete
  Replies
  1. ஆமா தி.தி.///மனசே வரல...கிளம்ப ...

   Delete
 4. சிங்கப்பூர் பற்றிய தகவல்கள் படங்கள் இன்னும் எதிர்பார்க்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. இன்னுமா....ஒரு வருசம் ஆகும் எல்லா போட்டோவையும் போட...

   Delete
 5. பாஸ்கரன் சார் வணக்கமுங்க..
  அந்த ஹோட்டலில் தங்கறவங்க மட்டுமே குளிக்க முடியும்..

  ReplyDelete
 6. ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா எம்பாம் பெரிய கட்டிடங்கள்?!

  ReplyDelete
  Replies
  1. என்ன....ந.கொ.ப.காணோம் லெவலுக்கு போயீட்டீங்க.//

   Delete
 7. //.அம்மணிகள் வேற அரைகுறை ஆடைகளுடன் உலாவுகிறார்கள்...//

  நிர்வாண ஊரில் நிர்வாணமாக இருப்பது அதியசம் இல்லை. அவரவருக்கு பொருத்தமான உடையில் அரைகுறை இருந்தால் இருக்கட்டுமே. தமிழ்நாட்டில் நடிகளை கட்டாய ஆடைக் குறைப்பு செய்யச் சொல்லி ஆடவிடுவதை நாம் ரசிப்பதில்லையா ?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்..தங்களின் முதல் வருகை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
   கரெக்ட்...அங்க அவங்களுக்கு அதுதான் பொருத்தமான உடை..அதுவே நமக்கு நல்லதா தோணுது..ஹிஹிஹி.
   நம்மூர்ல நடிகைகளை பாரின் ரேஞ்சுக்கு நடிக்க (?) வைக்கிறோம்..ஆனா நல்லா இல்லையே...ஹிஹிஹி

   Delete
 8. அடுத்தமுறை போகும்போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள்

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா போகலாம் நண்பரே...ஆனா உங்க பால் கார்டு, ரேசன் கார்டு, கிரடிட்கார்டு ஏடிம் கார்ட் எல்லாம் கொடுத்திடனும்..ஹிஹிஹி

   Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....