திருச்சி, பொன்மலை, ஒரு ஞாயிற்றுக்கிழமை வேளை...ரொம்ப சிறப்பா கொண்டாடணும்னு காலையிலேயே ஆரம்பிச்சுட்டு ஒரு 7 மணி வாக்கில் கிளம்பினோம் சந்தைக்கு.கூட்டம் கூட ஆரம்பித்துக் கொண்டிருந்தது. ஆங்காங்கே அம்மணிகள் தெரிய ஆரம்பித்தனர்.நிறைய பேர் தத்தம் குடும்பத்துடன் வந்திருந்தனர்.குழந்தைகளும் ஆர்வத்துடன் அனைத்தையும் அறியும் பொருட்டு வந்திருந்தனர்.எல்லாத்தையும் நோட்டம் விட்ட படியே மீன் வாங்கும் இடத்திற்கு சென்றோம்.வகை வகையான மீன்கள் வாடிக்கையாளர்களை வரவேற்றுக்கொண்டிருந்தது.இன்னிக்கு யார் வீட்டுல எந்த மீன் குழம்போ என யோசித்துக்கொண்டே கூட்டத்தில் ஐக்கியமானோம்.
ஒரு வேனில் உயிரோடு மீன்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தனர் ஆற்றில் பிடித்தது மட்டுமில்லாமல் இங்கு வேனிலும் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.நம்ம காவிரி ஆத்து ஜிலேபி மீன் தான்.உயிரோட கிலோ 160.( செத்த மீன்களை யாரும் வாங்க மாட்டாங்க போல..)அதுக்கும் கூட்டம் அலை மோதுது.
பொறுமையா முதலில் ஒரு ரவுண்ட் வந்தோம் ஏற்கனவே ரவுண்ட் கட்டி இருப்பதால்...என்னென்ன மீன்கள் எவ்ளோ விலை என்பதை எல்லா கடையிலும் விசாரித்து கொண்டு எந்த கடையில் விலை குறைவாக இருக்கிறதோ அங்கு குவிந்தோம்.பாறை, வஞ்சிரம், நெய்மீன், நண்டு, இறால், வாவல், சங்கரா, ஜிலேபி, விரால், கெண்டை, என ஏகப்பட்ட வகைகள். வாழை இலையில் கும்பலாய் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
நெய் மீன் வாங்கினோம்.ஃபிங்கர் ஃபிஷ் ஃபிரை செய்வதற்காக...(அந்த செய்முறை யை போட்டோ எடுக்க மறந்துட்டேன் )
பொறிப்பதற்கு கிழங்கா மீன் வாங்கினோம்.விலை ரொம்ப சல்லிசாக இருக்கிறது.ஒன்னரை கிலோ 100 மட்டுமே.அப்புறம் சங்கரா மீன்.குழம்பு வைப்பதற்காக.அதுவும் விலை குறைவே..
மூன்று மீன்களையும் வாங்கி அங்கேயே ஒரு பையனிடம் கொடுத்து சுத்தம் செய்து வாங்கினோம்.(கிலோவிற்கு 10/15 வாங்குகிறார்கள்.பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்) அப்புறம் அம்மணிகள் ஏரியாவான காய்கறி விற்கும் இடத்தில் சமையலுக்கு தேவையான மற்ற பொருட்களையும் வாங்கிவிட்டு நேரம் பார்க்க இன்னும் ஒரு சில நிமிடங்களே இருந்தது நம்ம கடை திறக்க.இப்போ கிளம்பினால் பார்சல் வாங்கிகொண்டு போக சரியாக இருக்கும் என்றெண்ணி கிளம்பினோம்.
அதுக்கப்புறம் என்ன..மீன் வேக வேக நாங்களும் வெந்து கொண்டிருந்தோம்.ஒரே மஜா தான்.
பதிவர் சந்திப்பு - நாள் -1.9.2013, இடம் - சென்னை - அனைவரும் வாரீர்
நேசங்களுடன்
ஜீவானந்தம்
வெள்ளிக்கிழமை அதுவுமா கவுச்சி வாடை வர பதிவு போட்டிருக்கான் பாரு!!
ReplyDeleteஎங்க சந்தைக்கு வந்த கிளி பத்தின தகவல் மிஸ்ஸிங்?
ReplyDeleteயோவ், காலங்காத்தாலேயே வாய்ல எச்சி ஊருதுய்யா... அய்யய்யோ, இன்னிக்கு வெள்ளிக்கிழமையா வேற போச்சே.... ரம்ஜான் ஸ்பெஷல்னு சொல்லி சாப்பிட்டிரலாமா...
ReplyDeleteஇருப்பது இந்தோநேஷியாவில்...பதிவோ பொன்மலையில்...
ReplyDeleteவிக்கிரமாதித்தன் வேலையா இருக்கே!
நல்ல சுவையாயிருக்கு, ஐ மீன், சுவாரசியமா இருக்கு
ReplyDeleteநடத்துங்க!
ReplyDelete