Tuesday, October 29, 2013

மலரும் நினைவுகள் - சந்தித்த நாள் 29.10.1999

சந்தித்த நாள் - 29.10.1999 - 29.10.2013


இந்த இனிய நாளில் என் இனிய நினைவுகளை பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.கடந்த கால சுவடுகளை பார்க்கிற போது நம்மையும் அறியாமல் ஒரு வித ஈர்ப்பு வரும் அப்படிதான் இந்த கவிதையும்...

பொக்கிஷமா வச்சிக்கிட்டு இருந்த ஒரு பையினுள் துழாவியபோது கிடைத்த கணம்  ரொம்ப அருமை ..

இது ஒரு மீள் பதிவுதான்.ஞாபகார்த்தமா இருக்கட்டுமே அப்படின்னு இன்னிக்கு  இந்த பதிவு... சந்தித்த நாள் 


இதே மாதிரி இன்னொன்ணு கூட கிறுக்கியிருந்தேன்....இம்ப்ரஸ் பண்ண...

இஞ்சினீரியங் பயிலும்
என்னவளுக்கு
இதயத்தினை
இரும்பாய் படைத்துவிட்டான்
இறைவன்...
அதனால்தான் என்னவோ
இளகவில்லை
இன்னும்........

அந்த நாள் நினைவுகள் சுகமாக இருக்கின்றது இப்பவும்.வாழ்க்கையினை வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் இந்த நினைவுகள் தான்.சுவாசமாய் நிறைந்திருக்கிறது என்றென்றும்...

எங்கள் இருவரையும் ஒன்று சேர்த்த இறைவனுக்கு நன்றி...

அப்புறம் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

புத்தாடை உடுத்தி ஜாலியா இருங்க...பார்த்து பட்டாசு வெடிங்க...
கவனம்...பக்கத்துல எப்பவும் ஒரு வாளி தண்ணீர் இருக்கட்டும்.அதே மாதிரி உடல் நலம் குன்றியவர்கள் முதியவர்கள், கர்ப்பிணிகள் இருந்தால் அந்த ஏரியாவில் அதிகம் வெடி வெடிக்காதீங்க...
நல்லபடியா கொண்டாடுங்க...

ஸ்வீட்ஸ் அளவா சாப்பிடுங்க...அதிகமா சாப்பிட்டு ஏதாவது வயித்துல கடா முடா பிரச்சினை வந்தால் தீபாவளி லேகியம் செஞ்சு சாப்பிடுங்க...
இஞ்சி, ஊறவைத்த தனியா மற்றும் சீரகம்  எல்லாவற்றையும் அரைச்சு வெல்லம் சேர்த்து கடாயில் கிளறி நெய் சேர்த்து லேகியம் பதம் வந்தவுடன் ஆறவச்சிடுங்க..அப்புறம் சாப்பிடுங்க...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...


நேசங்களுடன்
ஜீவானந்தம்


29 comments:

  1. இனிய நாளை என்றுமே மகிழ்வாய் இருக்க வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கவிஞரே...மிக்க நன்றி,,,

      Delete
  2. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தன்பாலன்

      Delete
  3. வணக்கம்
    கோவை நேரம்

    அந்த இனிய நாள் உங்கள் மனதில் இருந்து மறையாமல் இருக்க எனது வாழ்த்துக்கள்...... நண்பரே

    தனபாலன் அண்ணாவுடன் நீங்கள் சந்தித்த போது உங்களுடன் நான் பேசியது... மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... தொடரட்டும் என்றும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்..உரையாடியது மிக்க மகிழ்ச்சி....

      Delete
  4. இனிய நாள் என்றுமே இனிமையாய் இருக்கட்டும்....

    தீபாவளி வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி...இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  5. இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
    வருகிற நாளெல்லாமும் தொடர்ந்து இதுபோல்
    இனிதாகவே திகழட்டும்.
    வாழ்த்துக்களுடன்.....

    ReplyDelete
    Replies
    1. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சார்

      Delete
  6. அட, இஞ்சினியருக்கு படிச்சிருந்தும் அந்த பொண்ணுக்கு புத்தி வேலை செய்யாம போய்ட்ட நாள்ன்னு சொல்லுங்க!!

    ReplyDelete
    Replies
    1. ஏன்...ஏன்...இந்த கொலைவெறி.....

      Delete
  7. நல்ல வேளை ,அவள் கெமிக்கல் எஞ்சினீயரிங்க் படிக்க வில்லை ,,,படித்திருந்தால் ஆசிட்டை ஊற்றி இருப்பாள் ,இல்லையா ?
    த.ம 4

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா....இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  8. I am so glad I found your blog. Last two paras are timely advice. Thank you
    Happy Diwali

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்.இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  9. அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!///அருமையான டிப்ஸ்!

    ReplyDelete
  10. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. மறக்க முடியாத நாள்தான்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. இரும்பிலே ஒரு இதயம் இருக்குதோ....பாடல் வரிகள் மனதில் தோன்றியது. இன்பம் பொங்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. இந்த இனிமையான மலரும் நினைவுகள் பதிவு இன்றைய வலைச்சரத்தில். வாழ்த்துக்கள்.

    http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_29.html

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....