பாண்டிச்சேரி குடிமகன்களின் தேசம் - 1
எச்சரிக்கை குடி குடியை கெடுக்கும் இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....இது கண்டிப்பாக குடிமகன்களுக்கு மட்டும். |
வணக்கம் (குடி)மக்களே.......
இது கொஞ்சம் மப்பான பதிவு...
ஏதோ...... படம் ஆரம்பிக்கும் போது சர்டிபிகேட் காட்டுவாங்களே அது மாதிரி நம்ம நிலைமை ஆயிடுச்சு..ம்ம்ம்...எப்படியெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு.
ஓகே...மேட்டருக்கு வருவோம்....
பாண்டியில் இருந்து ஈ சி ஆர் ரோட்டில் கிளம்பினோம்.செல்லும் வழியில் கொஞ்ச தூரம் எங்கும் நம்ம கடைகளை காணோம்...கேட்டால் இது தமிழ்நாடு பார்டராம்.....கொஞ்ச தூரம் சென்றவுடன் மீண்டும் பாண்டி நம்மை வர வேற்றது..முதல் வேலையாக நம்ம கடையை தேடி சென்றோம்..அருகிலேயே சாராய கடையும்.அரசு நடத்தும் சாராய கடை....தகர சீட் ஷெட் போட்டு எந்த ஒரு உட்காரும் வசதியோ இல்லாமல் இருக்கிறது.
உள்ளே நுழைந்தால் ஏகப்பட்ட ஏழைகளின் சொர்க்கமாக இருக்கிறது. சீல் வைக்கப்பட்ட இரண்டு கேனில் சாராயம்.அதை அளந்து கொடுக்க கேனுக்கு ஒருவர். ஐந்து ரூபாயில் இருந்து தொடங்குகிறது. சாராயத்துடன் சோடா கலந்தே தருகிறார்கள்.தொட்டு கொள்ள சத்தியமாய் மட்டை ஊறுகாய் இல்லை.(எடுத்து செல்ல மறந்து விட்டேன்)சரக்குக்கு சைட் டிஷ் கொடுக்கும் இரண்டு மூதாட்டிகளின் வாழ்வாதாரமாக இந்த கடை இருக்கிறது.மாங்காய், சுண்டல், அவிச்ச முட்டை, மீன், கிழங்கு, கருவாடு என அனைத்தும் இருக்கிறது.கொஞ்சம் சுகதாரமற்று சாராயக்கடைக்கே உரித்தான அம்சங்களுடன் இருக்கிறது.
பாண்டிச்சேரி அரசே வில்லியனூர் என்கிற ஊருக்கு அருகில் சாராய ஆலை வைத்து இருக்கிறதாம்.மூன்று டாக்டர்களின் மேற்பார்வையில் இது தயாரிக்க படுகிறதாம்.சொன்னது அங்குள்ள ஒரு பங்காளி...நம்ம பங்குக்கு நாமும் கொஞ்சம் (ஹி ஹி ஹி ) டேஸ்ட் பார்த்து விட்டு வெளியேறினோம்.அப்படி ஒன்றும் பெரிதாய் இல்லை.வோட்கா போன்று வாசமில்லாமல் இருக்கிறது....அப்புறம் இன்னும் திருப்தி அடையாமல் அடுத்து சென்றது அருகில் உள்ள ஈ சி ஆர் ஒயின்ஸ்...
நல்ல விசாலமாக பீச்சுக்கு அருகில் இருக்கிற இந்த கடையில் தஞ்சமடைந்தோம்.ரொம்பவும் பிடித்த போஸ்டர் பீரினை ஆர்டர் செய்து விட்டு காத்து இருந்தோம்.(இந்த பீர் கொஞ்சம் கூட கசப்பே இல்லாமல் குடிக்க குடிக்க சுவையாய் இருக்கிறது)...கூடவே சைடு டிஷ் ஆக கணவாய் மீன், பீப் வறுவல் நெத்திலி 65....என....
கணவாய் மீன் கொஞ்சம் ரப்பர் மாதிரி இருக்கிறது.முதல் முறை சாப்பிடுவதால் என்னவோ நெத்திலி அளவுக்கு மீன் பிடிக்கவில்லை.நன்றாக இருந்தது என்று நண்பர் சொன்னார்.ஆனால்.பீப் பெப்பர் வறுவல் செம டேஸ்ட்...நல்ல மிருதுவாக இருக்கிறது இந்த வறுவல்...அப்புறம் நெத்திலி மீன்...சொல்லவே தேவையில்லை..அவ்ளோ சுவை....சரியான பதத்தில்..உப்பும் மசாலாவும்...நாக்கில் இன்னும் எச்சில் ஊறுகிறது...சரியான சைடு டிஷ்...
எப்படியோ...போதும் போதும் என்கிற அளவுக்கு.....சாப்பிட்டு விட்டு வேணும்கிற அளவுக்கு பார்சல் வாங்கிட்டு செங்கல் பட்டு கிளம்பினோம்.....
கிசுகிசு : இதை படித்து விட்டு உங்களுக்கு ஞாபகம் எடுத்தால் கம்பெனி பொறுப்பாகாது..அப்புறம் இது என்னோட 200வது பதிவு.ரொம்ப மப்பான பதிவு,,,
நேசங்களுடன்
ஜீவானந்தம்
200வது பதிப்புக்கு முதல் வாழ்த்துக்கள்
ReplyDeleteமாப்ளே மப்பாதான் இருக்கு மதமதன்னு
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா,
ReplyDeleteபடிச்சதே மப்பா தான் இருக்கு .இலவச மப்பு வழங்கிய தாணைய தலைவன் வாழ்க !
200க்கு வாழ்த்துக்கள்!
ReplyDelete#மச்சி. யாரு யாரெல்லாம் போனீங்க?
என்னையெல்லாம் ஒரு வார்த்தை கூப்பிட்டு இருந்தா, ஓடோடி வந்திருப்பனே!
சிவனேன்னு இருக்கவனைத் தூண்டிவிட்டீங்க...! ம்ம்ம்... நல்லா இருங்க!!
ReplyDeleteவாழ்த்துக்கள் 200-க்கு :)
ReplyDeleteada krathagaa...sollavey illa..
ReplyDeleteவந்து மப்பாகி போன அனைவருக்கும் நன்றி...
ReplyDeleteஇந்த வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.
ReplyDeleteபதிவ படிச்சதுக்கப்புறமும் வீக் எண்டு பாண்டி போவலேன்னா சாமி குத்தம் ஆயிடாது !?
ReplyDeleteபதிவ படிச்சதுக்கப்புறமும் வீக் எண்டு பாண்டி போவலேன்னா சாமி குத்தம் ஆயிடாது !?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதலைவா இந்த கடை எங்கள் வீடு அருகில் உள்ளது
ReplyDelete200-க்கு வாழ்த்துக்கள் !
ReplyDeleteஹோட்டல் ஹோட்டெலா போயிட்டு இருந்தீங்க...இப்ப பார் பாரா போக ஆரம்பிச்சிடீங்க....ம்ம்....என்ஜாய்....சாப்ட போற நேரத்தில இப்படி கணவாய் மீன் வறுவலை காமிச்சா எப்படி?....நடத்துங்க....
ReplyDelete200வது பதிப்புக்கு வாழ்த்துக்கள்
மச்சி டபுள் சதத்துக்கு வாழ்த்துக்கள், அந்த பீர் பாட்டில பார்த்தாலே நெஞ்சம் கொள்ளை போகுதே
ReplyDelete