Sunday, February 27, 2011

கோவை மெஸ் - கரம்

கரம்



கரூர்ல டெக்ஸ்டைல், பைனான்ஸ் இது மட்டுமல்ல கரமும் பேமஸ்.எல்லா இடங்களிலும் தள்ளு வண்டியில வச்சி இருப்பாங்க.முட்டை கரம் ரொம்ப பேமஸ்.வெங்காயம், 5 வகை சட்னி, மிக்சர், முறுக்கு , அவிச்ச முட்டை, பொரி போட்டு கொடுப்பாங்க .ரொம்ப அருமையா இருக்கும்.வெஜ் கரமும் உண்டு.அப்புறம் செட் . இது ரெண்டு தட்டு வடையின் இடையில வெங்காயம், 3 சட்னி வச்சி கொடுப்பாங்க .அப்படியே வாங்கி லபக் குனு வாய்ல போட்டு கடிச்சு தின்னா ஐயோ...இப்பவே எச்சில் ஊறுதே ....நான் எப்போ போனாலும் மறக்காம சாப்பிட்டு தான் வருவேன் .அவ்ளோ அடிமை. 1987 ல சாப்பிட ஆரம்பிச்சேன்..இப்போ வரைக்கும் தொடருது ...

நேசங்களுடன்
ஜீவானந்தம்  

இன்னும் கொஞ்சம்...

Friday, February 25, 2011

கோவை மெஸ் - பணியாரம், செம்பட்டி.

பணியாரம்



இது மதுரை போகும் போது செம்பட்டி பக்கம் ஒரு சின்ன கடையில பணியாரம் வித்துட்டு இருந்தாங்க.ரொம்ப நல்லா இருந்தது .விலையும் ரொம்ப கம்மியா இருந்துச்சு.என்ன ...கொஞ்சம் சைஸ் பெரிசு ..மூணுக்கு மேல சாப்பிட முடியல.இதுக்கு கொத்தமல்லி சட்னி அப்புறம் சாம்பார் தந்தாங்க ...அருமை ..விறகு அடுப்புலதான் பண்றாங்க..ஒரு ஈட்டுக்கு 19 பணியாரம் கிடைக்குது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, February 23, 2011

தஞ்சை

தஞ்சை ...நம்ம பெரிய கோவில்


...உங்களுக்கு இதை பத்தி எல்லாம் தெரியும் ..நான் போனது ஆயிரமாவது ஆண்டு விழா எடுக்க முடிவு செஞ்ச பின்னாடி ...ரொம்ப சுத்தமா இருந்தது.அப்புறம் நம்ம கலைஞர் கொல்லை புற வழியா போயி இந்த விழாவுல கலந்து கிட்டாருனு கேள்வி பட்டேன் .எப்படியும் அவர் அடுத்த ஆட்சிக்கு வரமாட்டார்.பின்ன ஏன் கொல்லை புற வழியை தேர்ந்தெடுத்தார் ன்னு தெரியல .
இன்னும் கொஞ்சம்...

முக்கொம்பு

இந்த அணை முக்கொம்புல இருக்கு


.திருச்சி டு கரூர் செல்லும் சாலையில் காவிரி கரை ஓரமாய் இந்த பிக்னிக் ஸ்பாட் இருக்கு . ரொம்ப முக்கியமான சுற்றுலா தலம்.திருச்சி மக்களுக்கு ஒரு வரப்ரசாதம்.அதே மாதிரி நம்ம காதல் ஜோடிகளுக்கு ஏத்த இடம் ...
இன்னும் கொஞ்சம்...

Monday, February 14, 2011

வ.உ.சி பார்க்

போன வாரம் நம்ம வ.உ.சி பார்க் போனோம்.
எப்பவும் போல காதலர் கூட்டம் தான்.அப்புறம் அங்க இருக்கிற விலங்குகள் எல்லாம் பார்த்தோம்.


பாவமா இருந்துச்சு.அடைச்சு வச்சு ரொம்ப கொடுமை படுத்துறாங்க.
சிங்கம் புலி காண்டா மிருகம் தவிர எல்லாம் இருக்கு



சரியான பராமரிப்பு இல்ல.டிக்கட் விலை 3 ரூபாதான்.கொஞ்சம் கூடுதல் பண்ணி நல்லா பராமரிக்கலாம் ...
இன்னும் கொஞ்சம்...

கோவை மெஸ் - திண்டுக்கல் வேணு பிரியாணி, 100 அடி ரோடு,, கோவை

திண்டுக்கல்  வேணு பிரியாணி - நூறடி ரோடு, கோவை

இந்த ஹோட்டல்ல எப்பவுமே கூட்டமா இருக்கும்.ரொம்ப டேஸ்டா இருக்கும்.இன்னிக்கு மதியம் அங்கதான் சாப்பிட்டேன்.
கோலா உருண்டை இங்க ரொம்ப நல்லாருக்கும்


இந்த கடை கோவைக்கு வந்து ஒரு வருடம் தான் ஆயிருக்கும்.நல்லா பேமஸ் ஆயிடுச்சு.இன்னும் நிறைய ஹோட்டல் இருக்கு ஆனா நல்லாருக்காது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

அருவி - மூணாறு

ஆலுவா லிருந்து மூணார் போற வழியில ஒரு அருவி இருக்கு.ரோட்டு ஓரத்திலேயே இருக்கு.



தண்ணீர் சும்மா சில்லுனு முகத்தில பட்டு தெறிக்கும்.அவ்ளோ நல்லா இருக்கும்.
அருவி பேரு என்னனு தெரியல.ஆனா 50 கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.அங்க இறங்கி நின்னு போட்டோ எடுத்து கிட்டேன்.ரொம்ப கடை இல்ல. மொத்தம் 3 கடை தான் இருக்கு. கூட்டம் அதிகமா இல்ல.அங்க அன்னாசி பழ துண்டுகள், அப்புறம் மாங்காய் போட்டு வச்சிருந்தாங்க .ரொம்ப டேஸ்டா இருந்துச்சு.குளிருக்கு இதமா இருந்தது.


அங்க இருக்கிற மக்கள் யாரும் இயற்கையை விரும்பல போலிருக்கு.ஒருவேள அவங்களுக்கு பழகி போய் இருக்கலாம்

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...