Sunday, July 3, 2011

மூன்று ஆறுகளின் சங்கமம் -- திருமுக்கூடலூர் (THIRUMUKKUDALUR)

திருமுக்கூடலூர் (THIRUMUKKUDALUR
இந்த ஊர் கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோரம் அமைந்த ஒரு கிராமம்.பச்சை பசும் வயல்கள் கொண்ட ஒரு கிராமம்.இந்த ஊருக்கு ஒரு சிறப்பு உள்ளது.மூன்று ஆறுகள் கூடும் இடம் ஆதலால் இந்த பெயர் காரணம்.அகண்டு விரிந்த காவிரி, அமராவதி மற்றும் அமராவதி ஆறிலிருந்து பிரிந்து ஒரு சில கிராமங்களை அடைந்து பின் வந்து இந்த இடத்தில கலக்கும் ஒரு சின்ன முத்துமணி ஆறு, இந்த மூன்று நதிகளும் கூடும் இடம் இந்த ஊர்தான்.




இங்கு ராஜராஜ சோழன் காலத்தில் கட்டிய ஒரு புராதன ஈஸ்வரன் கோவில் உள்ளது.அகஸ்தீஸ்வரர் கோவில்.1978 இல் வந்த கடும் வெள்ளத்தில் இந்த கோவில் இப்போது சிதில மடைந்து உள்ளது.மேலும் கரூர் ஈஸ்வரன் கோவில், தஞ்சை பெரிய கோவில், மற்றும் இக்கோயில் அனைத்தும் ஒரே கால கட்டத்தில் கட்டப்பட்டதாம்.இந்த கோவிலில் சுரங்கப் பாதை ஒன்றும் உள்ளது.இங்குள்ள மக்கள் விவசாயம் மற்றும் டெக்ஸ்டைல் பணியில் உள்ளனர்.
ஒவ்வொரு அமாவாசை அன்றும் இந்த கூடு துறையில் வெளியூர் மக்கள் வந்து குவிவார்கள்.ஆடி மாதம் புதுமண தம்பதிகளின் வருகை அதிகமாக இருக்கும்.இந்த ஊரிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் சதாசிவ பிரம்மேந்திரள் கோவில் உள்ளது.இங்கும் அதிக மக்கள் வருவார்கள்.கரூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது. 4 ம் நம்பர் பஸ் இந்த ஊருக்கு செல்லும் பேருந்து.
ஆற்று மணல் வெளியில் ஒருவகை செடி உள்ளது.இது பார்க்க குதிரை கால் குளம்பு போலவே இருக்கும்.அறிவியல் பெயர் காரணம் தெரியாது.ஆனால் குதிரை குளம்பு செடி என்று வட்டார மொழியில் சொல்லுவர்.
 



நேசங்களுடன் 
ஜீவானந்தம்

2 comments:

  1. அழகான படங்கள். அருமையான பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்,

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....