Tuesday, February 7, 2012

ஸ்ரீ நாக சாயி மந்திர் - சாய்பாபா கோவில் கோவை

கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் இக்கோவில் அமைந்துள்ளது.ஆரம்ப காலத்தில் ஒரு குடில் போல செயல் பட்டு வந்த இக்கோவில் தற்போது மிக விஸ்தாரமாக அமைக்கப்பட்டு இருக்கிறது.
இங்கு  துனி எனப்படும் ஹோம குண்டம் எப்போதும் அணையாமல் எரிந்து கொண்டு இருக்கும்.அப்புறம் நாக மண்டபத்தில் பொன் மற்றும் வெள்ளியில் ஆன தகடுகள் பதிக்கப்பட்ட மண்டபத்தில் சாயி அவர்களின் திருவுருவ சிலை அமைக்கப்பட்டு பூஜிக்கபடுகிறது.



வியாழக்கிழமை அன்று நடைபெற்ற பூஜையில் ஒரு நாகம் வந்ததால் ஸ்ரீ சாயி பகவான் அவர்களின் லீலை என்று பக்தர்கள் வணங்கி பின்னர் அந்த நாகம் மறைந்த இடத்தில்தான் மண்டபம் கட்டி சாய்பாபாவின் திருவுருவ சிலை வைத்து வணங்கு கின்றனர்.இதனால் தான் நாக சாயி மந்திர் என இக்கோவில் அழைக்க படுகிறது.

(ஒரு காலத்தில் இவரும் ரொம்ப எளிமையா தான் இருந்தாரு .ஆனா இப்போ ரொம்ப பணக்கார கடவுளா மாறி விட்டார்.நான் 1998  ம் வருடத்தில் எதேச்சையாக இக்கோவிலுக்கு சென்றபோது ரொம்ப எளிமையாக இக்கோவில் இருந்தது.அதில் இருந்து நான் இவரின் பக்தனாக மாறி போனேன்.வருடங்கள் உருண்டோட இப்போ இந்த கோவில் ரொம்ப பணக்கார கோவிலா ஆகி விட்டது .தங்க முலாம், வெள்ளி முலாம் பூசப்பட்ட தகடுகள் கொண்ட மண்டபம், கோவில் உள்ளே CCTV  கேமரா, பிரமாண்ட கட்டிடங்கள், மார்பிள் தரை என ரொம்ப முன்னேற்றம்.இப்போ இருக்கிற இந்த சூழ்நிலைகளில் இதெல்லாம் அவசியம் என்றே தோணுகிறது.என்ன பண்றது ....திருப்பதி கோவில் வருட வருமானம் அதிகம் , அப்புறம் இப்போ பத்ம நாபா கோவில் என எல்லா கோவில்களும் இப்படி இருக்கிறப்ப பாவம் இவரு மட்டும் என்ன பண்ணுவாரு)







இங்கு தினமும் காலை 5 மணி முதல் ஆரத்தி யும் அபிசேகம் 11 மணிக்கும்  நடைபெறும்.வியாழன்தோறும்இங்குசிறப்புபூஜைசெய்யபடுகிறது.அன்னதானம் மதிய வேளைகளில் நடை பெறும்.
இக்கோவிலை அடுத்து விநாயகர், முருகன், ஆஞ்சநேயர் மற்றும் நவகிரககங்கள் சந்நிதி களும் இருக்கின்றன.ஒரு அரசமரமும் இருக்கின்றன.

இக்கோவிலுக்கு செல்லும் வழி : காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் இல் இருந்து மருதமலை, துடியலூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் சாய்பாபா கோவில் செல்லும்.3 கிலோ மீட்டர் தூரம் தான்.

கோவிலுக்கு உள்ளே சாய் பகவான் பாடல்கள் , போட்டோக்கள் கிடைக்கும்.அப்புறம்அதிகமா போட்டோ எடுக்க முடியல ..கோவிலுக்கு உள்ளே கேமரா அனுமதி இல்லை .வெளியில் இருந்து எடுத்தேன் 

குறிப்பு : இக்கோவிலில் தான் எனது திருமணம் நடைபெற்றது.( அது ஒரு பெரிய கதை ....பின்னாளில் ஒரு பதிவா போடலாம் .ஹி..ஹி ஹி ஹி )

2 comments:

  1. இங்கு துனி எனப்படும் ஹோம குண்டம் எப்போதும் அணையாமல் எரிந்து கொண்டு இருக்கும்.அப்புறம் நாக மண்டபத்தில் பொன் மற்றும் வெள்ளியில் ஆன தகடுகள் பதிக்கப்பட்ட மண்டபத்தில் சாயி அவர்களின் திருவுருவ சிலை அமைக்கப்பட்டு பூஜிக்கபடுகிறது

    அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. நன்றி...ராஜ ராஜேஸ்வரி அவர்களே

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....