Monday, May 21, 2012

கோவை மெஸ் - ஸ்ரீ ஜெய் கிருஷ்ணா - ஸ்வீட் ஸ்டால் , கணபதி


கணபதி டூ கவுண்டம்பாளையம் செல்லும் வழியில் ஒரு சில பலகார கடைகள் இருக்கின்றன.அனைத்தும் குறைந்த விலையில் கார மற்றும் இனிப்பு வகைகள் செய்கிற கடைகள்.நிறைய கடைகள் இருந்தாலும் ஸ்ரீ ஜெய் கிருஷ்ணா என்கிற ஒரு கடை நல்ல சுவையுடன் இருக்கிறது.அங்கு காரம் மற்றும் இனிப்பு வகைகள் கிடைக்கின்றன.
இவர்களே அனைத்தும் செய்கின்றனர்.காரம் விலை 120 , இனிப்பு வகை 120, மற்றும் பால் சம்பந்த பட்ட இனிப்பு வகை 200 என்ற விலையில் இருக்கிறது.ரொம்ப விலை குறைவாக அதே சமயம் மிகவும் சுவையுடன் இருக்கிற கடை.எப்போதும் நல்ல விற்பனை.





அனைத்து வகை இனிப்புகள் மற்றும் கார வகைகள் இங்கு கிடைக்கின்றது.நல்ல சுவையுடன் இருப்பது தனித்தன்மை.மற்ற பிரபல கடைகளோடு ஒப்பிட முடியாது.ஆனால் குறைந்த விலையில் நிறைந்த சுவை.நல்ல தரமும் கூட.நான் கிட்ட தட்ட பத்து வருடங்களாக இங்கு வாங்கி வருகிறேன்.நல்ல சுவை இங்கு இருப்பதே காரணம்.
கணபதி பாரதிநகர் தாண்டி ராமகிருஷ்ணா மில் இருக்கிறது.அங்கு இருந்து கவுண்டம்பாளையம் செல்லும் வழியில் இக்கடைகள் இருக்கின்றன.ரொம்ப ஸ்பெஷல் என்னவென்றால் கை முறுக்கு, சீடை, ஓம பொடி இங்கு நல்ல சுவையுடன் கிடைக்கும்.அதே மாதிரி பூந்தி  லட்டு நல்ல சுவையுடன் இருக்கும்.
கணபதி  ஒரு இன்டஸ்ட்ரி ஏரியா.அதுவும் இந்த கடை இருக்கிற இடத்துல நிறைய இரும்பு பட்டறைகள் இருக்கு.இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை ..அப்படின்னு ஒரு வட்டார வழக்கு மொழி இருக்கு.ஆனா இங்கு இருக்கிற கடைகள் கொடுக்கிற சுவையால் இங்கு மக்கள் மொய்க்கிற மாதிரி  இருக்கு.


நேசங்களுடன்
ஜீவானந்தம்


3 comments:

  1. வாவ்... பாக்கும் போதே சாப்டனும் போல இருக்கே...கலக்கல் பாஸ்

    ReplyDelete
  2. அப்படிங்களா

    தகவலுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  3. கோவை மாவட்டத்துல இருக்குற எல்லா ஹோட்டல், ஸ்வீட் ஸ்டால், பேக்கரி மற்றும் டீககடை விடாம விசிட் பண்றீங்களே, உடம்பை பார்த்துக்கோங்க சகோ

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....