Friday, May 18, 2012

கரம் - பல்சுவை செய்திகள் அறிமுகம்


வணக்கம் ...
இந்த பதிவுலகில் நிறைய பேர் சிறு சிறு செய்திகளை, அனுபவங்களை தொகுத்து வழங்கி அதுக்கு ஒரு பேரும் வச்சி வாரா வாரம் பதிவா தந்துகிட்டு இருக்காங்க..
உதாரணத்துக்கு....

கேபிள் சங்கரின் கொத்து பரோட்டா

உண்மைத்தமிழனின் இட்லி தோசை பொங்கல் வடை சாம்பார்

ஜாக்கியின் சாண்ட்விச் அண்ட் நான்வெஜ்

அப்புறம் இன்னும்  பல பேரு....
அஞ்சறைப் பெட்டி, கதம்பம், மொறு மொறு மிக்சர்  இப்படி...
சுவையா தன்னோட பதிவுகளில் எழுதிகிட்டு வர்றாங்க.அதனால நமக்கும் ஒரு ஆசை.

கரூர்ல தான் நான் பொறந்து வளர்ந்து படிச்சது எல்லாம்.படிக்கும் போது  கரம் சாப்பிடுவேன்.இப்பவும் எனது ஊருக்கு போனால் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்.கரூர் மாவட்டத்தில் இது ரொம்ப பேமஸ். பொரி கூட பல வகை சட்னிகளுடன் வெங்காயம், பீட்ரூட், கேரட், மிக்சர், தட்டுவடை  முட்டை இதெல்லாம் போட்டு கலக்கி தருவாங்க.அவ்ளோ சுவையா இருக்கும்.கருர்ல இருக்கிற அனைத்து சந்து பொந்து களிலும் யாராவது ஒருத்தர் கரம் போட்டுக்கிட்டு இருப்பாங்க.அவ்ளோ பேமஸ்.

அதனால தான் கரம் போன்ற சுவையான விஷயங்களை உங்ககிட்ட பகிர்ந்துகிறேன்.சுவைத்து ஆதரவு தரும் படி கேட்டு கொள்கிறேன்.

முதல்  கரம் :
நம்ம ஊருல அண்ணாதுரை அப்படின்னு ஒருத்தர் இருக்காருங்க.கிராமத்துல இருக்கிற எங்க வயல்களில்   கூட மாட வேலை செய்வாருங்க. ஒருநாளு இவர்க்கு போன் வந்தபோது செல் போனை திருப்பி திருப்பி நம்பர் சொல்லிட்டு இருந்தார்.என்னன்னு இவர் கிட்ட இருக்கிற போனை பார்த்தேன்.இவரோட போன் நம்பரை எழுதி போன்ல வச்சி அதை சொல்லிட்டு இருந்தாரு.
எப்படி....


கேட்டதுக்கு நம்பரை ஞாபகம் வச்சிக்க முடியலையாம்.எப்பூடி....
------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோவை  பதிவர் சந்திப்பு :
நம்ம ஏரியா பக்கம் இருக்கிற பதிவர்களை இனம் காண்கிற முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம்.அதனால் கோவையில் உள்ள பதிவர்கள் தங்கள் வலைப்பூவையும், தொடர்பு எண்ணையும் இநத் மின்மடலுக்கு kovaibloggers@gmail.com மடல் அனுப்பவும்.

நமது பதிவர் தளமாய் கோவை பதிவர்கள் இருக்கிறது. கண்டிப்பாக வரவேற்கிறோம்..

-------------------------------------------------------------------------------------------------------------

இனி  அடுத்த கரத்துக்கு மேட்டர யோசிக்கணும்...இருங்க வாரேன்...


நேசங்களுடன்
ஜீவானந்தம்

9 comments:

  1. கரம் காரம் கம்மியா இருக்கே.....

    முதல் கரம் டிஷ்.... அதனால அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்....

    ReplyDelete
  2. அவசரமா செஞ்ச கரம் போல இருக்கே. அடுத்து செய்யும்போது பொறுமையா பதறாம செய்யுங்க சகோ. அப்போதான் சூப்பர் டேஸ்டா கரம் வரும்

    ReplyDelete
  3. ம்ம்ம்ம்..அசத்துங்க பாஸ்.

    ReplyDelete
  4. கரம்...வெற்றிகரமாக வர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  5. பிரகாஷ்...காரம் அடுத்த முறை கொஞ்சம் அதிகமா போட்டு விடுவோம்

    ReplyDelete
  6. ராஜி...மெதுவா தான் கரம் செஞ்சேன் அடுத்த முறை மெதுவா பண்ணிடுவோம்

    ReplyDelete
  7. மணிமாறன்,....அசத்திடலாம் நண்பரே..

    ReplyDelete
  8. நன்றி உ சி ர ...அவர்களே..

    ReplyDelete
  9. முதல் கரம் வாழ்த்துக்கள் தொடரவும்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....