கொக்கரக்கோ--சேவக் கோழி கூவுற பாஷையிலே ஒரு ஹோட்டல்...
இந்த ஹோட்டல் நம்ம ஏரியாவுல (கவுண்டம்பாளையம்) இருக்கு.ரொம்ப பேமஸ் ஆன ஹோட்டல்.சிக்கன் மட்டுமே கிடைக்கிற ஹோட்டல்.
இங்கு தந்தூரி சிக்கன் ரொம்ப பேமஸ்.ரொம்ப சுவையா இருக்கும்.நான் போனது வெள்ளிக்கிழமை அன்று.ஆனா அன்னிக்குத்தான் நம்ம அம்மணிகள் கூட்டம் அதிகமா இருக்கு(இப்போலாம் யாரும் வெள்ளிகிழமை விரதம் இருக்கிறது கிடையாது போல).கடையில உரிச்ச கோழிகள் தொங்கிட்டு இருக்கு.அதை வாங்க உரிக்காத கோழிகள்.(அட நம்ம அம்மணிகள் தான் ).எவ்ளோ பேரு....எல்லாரும் குடும்பத்துடன் வந்து இருக்காங்க.ஆள் ஆளுக்கு இஷ்டம் போல ஆர்டர்.அப்புறம் இப்போ கொஞ்சம் விலை ஏத்தி இருக்காங்க.ஆனாலும் அதே சுவை.தந்தூரி, கிரில் சிக்கன் இங்கு எப்போதும் கிடைப்பது உறுதி.அதே போல் இப்போது புதிதாய் அறியாலி சிக்கன் ( கிரீன் சிக்கன் ) என்று அறிமுக படுத்தி இருக்கிறார்கள்.அங்க இருக்கிற வேலை ஆட்கள் அனைவரும் வட இந்தியாவை சேர்ந்தவர்கள்.அதனால் அவர்களின் மொழியில் ஒரு வகை தந்தூரி சிக்கன்.பச்சை பசேல் என்று.நிறம் மட்டுமே பச்சை.அதுவும் சாப்பிட்டு பார்த்தோம் சுமார் தான்.ஆனால் தந்தூரி சிக்கன் ரொம்ப சுவை..
இப்போ தந்தூரி சிக்கன் விலை 240 என இருக்கிறது.சமீபத்தில் தான் விலை ஏத்தி இருக்கிறார்கள்.ஆயினும் இங்கு இரவு நேரம் எப்போதும் செம கூட்டம்.பார்சல் மற்றும் சாப்பிடுவர்களின் எண்ணிக்கை இரவில் மட்டுமே அதிகமாக இருக்கிறது..அதுவும் அம்மணிகளின் கூட்டம் சொல்லவே வேணாம்.இங்கு பிரியாணிலாம் அவ்ளோ டேஸ்ட் இருக்காது.தந்தூரி மட்டும் நன்றாக இருக்கும்.அனைத்து வகை சைனீஸ் உணவுகள் கிடைக்கும்.AC ரெஸ்டாரன்ட் இருக்கிறது.
இதன் இன்னொரு கிளை R.S.புரத்தில் இருக்கிறது.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
நேசங்களுடன்
ஜீவானந்தம்
கொக்கொரக்கோ நேரடி அனுபவம் மனசாட்சிக்கும் உண்டுங்கோ - அதன் சுவையே அலாதிங்க.
ReplyDeleteதந்தூதூதூ,,,,,,,,ரி.
ReplyDeleteஉரிச்ச கோழி - உரிக்காத கோழி, கலைநயமிக்க குசும்பான ஆளுய்யா நீங்கள்.
ReplyDeleteபடிக்கும் போதே எச்சில் ஊறுதே, கோவையில் பதிவர் சந்திப்பு தயாராகிக் கொண்டிருக்கிறதாம், கோவை விசிட்டில் புகுந்து விட வேண்டியது தான்.
ReplyDeleteஅறிமுகத்து நன்றி நண்பரே..
ReplyDeleteஅப்புறம் உங்கள் பதிவுகள் எனது DashBoard யில் வர ஆரம்பித்து விட்டன.
அதை வாங்க உரிக்காத கோழிகள்.(அட நம்ம அம்மணிகள் தான் ).எவ்ளோ பேரு..////
ReplyDeleteயோவ்......
உரிச்ச கோழியை மட்டும் பாருங்க......
உரிக்காததை ஏன்யா பாக்கறிங்க?????
அருமை அருமை எனக்கும் இங்கு சாப்பிட்ட அனுபவம் உண்டு...
ReplyDeleteவீட்டை விட்டு எங்க சாப்பிட போனாலும் கேமரா கொண்டு போவீங்களா சகோ?
ReplyDelete