Monday, May 28, 2012

முக்கொம்பு - சுற்றுலா தளம் - திருச்சி


முக்கொம்பு

திருச்சி அருகில் இருக்கிற ஒரு சுற்றுலா தளம் தான் இது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறாக இங்கு பிரிந்து செல்வதால் முக்கொம்பு என்று பெயர்.காவிரி ஆற்றின் குறுக்கே மேலணை என்ற அணை கட்டப்பட்டு இருக்கிறது. நீர் நிலையுடன் கூடிய ஒரு பொழுது போக்கு இடம்.காசு செலவில்லாமல் பொழுது போக்க கூடிய இடம்.அதனால தான் என்னவோ அதிக காதலர்கள் (இவங்க மட்டுமா...) கூடும் இடமா இருக்கு போல.சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பும் இடமாக இது இருக்கிறது.இரண்டு ஆறுகளுக்கு இடையில் பூங்கா வேற இருக்கிறது. இந்த பூங்காவில் இளவட்ட கல் ஒன்று இருக்கின்றது என நினைக்கிறேன். சிறுவயதில் கண்டு இருக்கிறேன்.இப்போ எங்கேனு தெரியல.அணையின் மறுபக்கம் வாத்தலை என்ற ஊர் இருக்கிறது. ஓடும் ஆற்றின் அழகை அணையில் நடந்து செல்லும் போது ரசிக்கலாம்.

நிறைய மரங்கள் பசுமையுடன் ..அதுவும் நம்ம முன்னோர்களுடன்.நம்மள விட இவங்க தான் அதிகமா இருக்காங்க.அப்புறம் கட்டுசோறு கட்டி இங்க வந்து சாப்பிடற ஆளுகளை இம்சை பண்றதே இவங்களுக்கு வேலையா போச்சு..ஆனாலும் இதுவும் ஒரு அனுபவமே..



திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் முக்கொம்பு இருக்கிறது இருபது கிலோமீட்டர் இருக்கும்.நல்ல அருமையான சுற்றுலா தளம்..

கிசுகிசு: எங்க குலதெய்வ கோவில் முக்கொம்பு பக்கத்துல தான் இருக்கு.எப்போலாம் கோவிலுக்கு போறோமோ அப்போலாம் கண்டிப்பா போய்ட்டு வருவோம்.அப்புறம் திருச்சில இருந்த போது நண்பர்களுடன் வந்து சென்றது எல்லாம் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.போன வாரம் திருச்சி செல்லுபோது ஒரு விசிட் விட்டேன் எதுக்குன்னா...ஒரு பதிவு தேத்த...
ஏன்னா.....இன்னிக்கு நான் ஒரு பதிவர் (.....?) ஹி..ஹி ஹி ......அதான் ஒரு பதிவ போட்டுட்டேன்...

நேசங்களுடன்
ஜீவானந்தம் 







12 comments:

  1. போட்டோக்கள் அனைத்தும் கண்ணுக்கு பசுமையாக இருக்கிறது, ஆமாம் இந்த அணை கட்டப்பட்டு எத்தனை வருஷம் ஆகிறது...?

    ReplyDelete
  2. Our college friends after doing 5 year law course had our last get together here. So we cant forget this place.

    ReplyDelete
  3. வாங்க காதலர் மனோ அவர்களே

    ReplyDelete
  4. கேள்வி கேட்கிறது ஈசி...அந்த அளவுக்கு நாலேஜ் இல்லீங்க மனோ..1974 என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  5. வாங்க மோகன் சார்..நீங்க திருச்சில தான் படிச்சீங்களா
    ..சந்தோசம்

    ReplyDelete
  6. முன்னோரிடம் இருந்து தப்பிக்கனுமா? கட்டுசோத்துல ஒரு பிடி சோறு அள்ளி பரவலா வீசனும் தனிதனியா விழுற மாதிரி ஒவ்வரு பருக்கைகளா பொறுக்குவாங்க ஆஞ்சநேயாஸ் அதுக்குள்ள சாப்பிட்டிறலாம்...ஹிஹி!

    ReplyDelete
  7. வீடு சுரேஷ் ,,,,உங்களுக்கு ரொம்ப அனுபவம் போல...

    ReplyDelete
  8. அழகான இடம். இந்த மாதிரி அமைதியும் அழகும் உள்ள இடங்களை பற்றி தெரியாமலே , பார்க்காமல் விடுகிறோம்!

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி....எவ்ளோ இடங்கள் இருக்கிறது..அதைக்கண்டுக்கொள்ள தான் ஆளில்லை....

      Delete
  9. என்னுடைய ஊர் திருச்சி ஆதலால் அடிகடி நானும் என் கணவரும் சென்ற இடம் ஆனால் இப்போது சென்னையில் வசிப்பதால் போக முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க..நானும் திருச்சிக்கு அருகில் தான் நேசனல் காலேஜில் படிக்கிற போது அடிக்கடி முக்கொம்பு வருவேன்.இப்போது கோவையில் இருந்தாலும் அடிக்கடி திருச்சி வந்து கொண்டு இருக்கிறேன்.எனது அண்ணன் திருச்சியில் தான் வசிக்கிறார்.
      நன்றி தங்கள் வருகைக்கு.....

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....