இன்று ( 31.5.2012) எப்படியோ ஒருவழியாக கோவை பதிவர்களின் சிறு பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற்று விட்டது.எதிர்பார்க்கவில்லை இத்தனை பேர் வருவார்கள் என்று.( மொத்தம் 19 பேருங்க )
கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள கார்டனில் சந்திக்க ஏற்பாடு முடிவு செய்யப்பட்டு இருந்தது.முதலில் சங்கவி வர அடுத்து நான் ஆஜரானேன்.அடுத்து எனக்கு ஒரு போன் கால் வர அது மனசாட்சி (என்னோட மனசாட்சி இல்லீங்கோ) எந்த இடம் என்று விசாரித்து விட்டு எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டு விட்டு தானும் அங்கு தான் உள்ளதாக சொன்னது.அப்புறம் என்னை பார்த்து விட்டு, என்னை எழுந்திருக்க சொல்ல, அப்புறம் உட்கார சொல்ல, இப்படி திரும்பு, அப்படி திரும்பு என ட்ரில் மாஸ்டர் வேலை எல்லாம் செய்ய சொல்லி விட்டு தன் முகத்தை காட்டியது மனசாட்சி. (என்னா ஒரு வில்லத்தனம்). அதன் பின் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். சந்தன சிதறல் சேகர், சாமியின் மன அலைகள் பழனி கந்தசாமி, கலா குமரன் ,மரவளம் வின்சென்ட், மூலிகை குப்புசாமி என பழம் பெரும் பதிவர்கள் (ஹி ஹி ஹி மூத்த பதிவர்கள்) வந்தனர்.
(சேகர், மனசாட்சி, சங்கவி, பழனி கந்தசாமி )
அடுத்து தமிழ் பேரன்ட்ஸ் சம்பத், கோவை மு சரளா (பெண் எனும் புதுமை) கோவை சக்தி, வீடு சுரேஷ் குமார், இரவு வானம் சுரேஷ் என இளம் பதிவர்கள் வருகை புரிந்தனர். விஜி ராம், உலக சினிமா ரசிகன், அகிலா, மு ராமநாதன் இவர்களும் இடையில் வந்து கலந்து கொண்டனர்.
(கோவை சக்தி, சேகர், கலாகுமரன், பழனி கந்தசாமி )
(வின்சென்ட் , குப்புசாமி, விஜி ராம் இவர்களுடன் சங்கவி )
கொஞ்ச நேரத்தில் இடம் மாற்றம் செய்து அனைவரும் உட்கார்ந்து கொள்ள கிருஷ்ணா ஸ்வீட்ஸின் தித்திக்கும் மைசூர்பா சுவையுடன் அறிமுக படலம் இனிதே நடந்தேறியது.
ஒவ்வொருவரும் தத்தம் வலைத்தளம், பதிவு பற்றி அறிமுகம் கொடுத்தனர்.ஒரு சில ஆலோசனைகள், கருத்துக்கள், ஆக்கபூர்வ செயல்கள் பற்றி தீவிரமாக விவாதித்து கொண்டனர்.இடையில் பிஸ்கட், குளிர்பானம் வழங்கி சிறப்பித்தனர்.(அந்த மகராசன் யாருப்பா...ரொம்ப நன்றி )
(இயற்கை சரியான முறையில் ஒத்துழைக்காததால் சரியான முறையில் புகைப்படம் எடுக்க முடியவில்லை)
இனிதே இன்முகத்துடன் அடுத்த பதிவர் சந்திப்பில் சந்திப்போம் என கூறி அனைவரும் பிரிந்து சென்றோம்.
இந்த சந்திப்பு சிறப்பாக நடக்க உதவி புரிந்தவர்கள்
சங்கவி
சம்பத்
கோவைநேரம்
வீடு சுரேஷ்குமார்
மற்றும் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களும்...
மற்றும் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களும்...
இன்னிக்கு நடந்த இந்த சந்திப்பு ஒரு ட்ரைலர் தான்...ஜூன் 10 அன்று தான் மெயின் பிக்சர்....
கண்டிப்பாக கோவை பதிவர்கள் அனைவரும் கலந்து கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்ள படுகிறார்கள்.
கிசுகிசு:ரேஸ் கோர்ஸ் சாலையில் காலை மற்றும் மாலையில் வாக்கிங் செல்பவர்கள் தான் அதிகம். அதிலும் அம்மணிகள் இருக்காங்களே.ரொம்ப கண்ணுக்கு குளிர்ச்சியா இதமா...பதமா..வித விதமா....அவங்க தங்களோட உடம்பை குறைக்கிறாங்களோ இல்லையோ....பார்க்கிற நம்ம மனசை குறைச்சு விடுவாங்க...இங்க நம்ம பதிவர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும் போது அப்பப்ப கொஞ்சம் நம்மாளுங்க இளைப்பாரலுக்கு திரும்பி திரும்பி பார்த்து கொண்டே....மனசை தேத்திக் கொண்டே ......
அப்புறம் ஒரே ஒரு அம்மணி மட்டும் டவுசர் டி ஷர்ட் லாம் போட்டு காதுல ஹெட் போன் மாட்டிகிட்டு ரொம்ப தீவிரமா வாக்கிங் போய்ட்டு இருந்தாங்க..நாங்க ஆரம்பிக்கிறதில் இருந்து முடியற வரை நாலு ரவுண்டு போனாங்க. இதை இவங்க கிட்டா சொன்னா ......எல்லாரும் கரக்டா சொல்றாங்க...நாங்களும் தானே எண்ணிகிட்டு இருந்தோம் அப்படின்னு.........(கணக்குல புலி போல) அடப்பாவிகளா..... விளங்கிடும்......
நேசங்களுடன்
ஜீவானந்தம்
அருமையான வர்ணனை ஜீவா சார் ,
ReplyDeleteஅனைத்து கோவை பதிவர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்த சங்கவி ,சம்பத் ,ஜீவா ,மற்றும் நண்பர்களுக்கும் நன்றிகள் கோடி ,கலந்துகொண்ட அனைத்து பதிவர்களுக்கும் நன்றிகள் . மிக அருமையான மாலை நேர இனிய சந்திப்பு .
கிசு கிசு :
அப்போ இனிமேல் அடிக்கடி அங்கேயே சந்திப்போமா
சிறு குறிப்பு : இளம் இளைஞர் பதிவர்கள் மட்டும்
நட்புடன் ,
கோவை சக்தி
//ரேஸ் கோர்ஸ் சாலையில் காலை மற்றும் மாலையில் வாக்கிங் செல்பவர்கள் தான் அதிகம். அதிலும் அம்மணிகள் இருக்காங்களே.ரொம்ப கண்ணுக்கு குளிர்ச்சியா இதமா...பதமா..வித விதமா....அவங்க தங்களோட உடம்பை குறைக்கிறாங்களோ இல்லையோ....பார்க்கிற நம்ம மனசை குறைச்சு விடுவாங்க..//அடடா...நான் சரியா கவனிக்கலயே...மனசை குறைச்சிருக்கலாமே....
ReplyDelete@சக்தி
ReplyDelete// இளம் இளைஞர்
பதிவர்கள் மட்டும் //
சக்தி...இப்படியெல்லாம் பயமுறுத்தி என்னை கழட்டி விட முடியாது.
வாழ்த்துக்கள் சந்திப்புக்கும்....கணக்கெடுப்புக்கும் ஹிஹி!
ReplyDeleteபதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! வாக்கிங் போனவர்களை நான் சத்தியமா கவனிக்கலை....டிசர்ட் சார்ட்ஸ் காதுல ஹெட்போன் அவிங்க வெச்சிருந்த ஆண்ட்ராய்டு மொபைல் எதையும் பார்க்கல.....
ReplyDeleteகண்டிப்பா சக்தி..நாம மீட் பண்ணலாம்.கூட அப்படியே நம்ம உலக சினிமா ரசிகனையும் கூப்பிட்டுக்குவோம் ...
ReplyDeleteஇவ்ளோ உன்னிப்பா உத்து பார்த்துவிட்டு ஒண்ணுமே பார்க்கலைன்னு சொல்றீங்களே சுரேஷ்...
ReplyDeleteஉலக சினிமா ரசிகன் .....கண்டிப்பா வாங்க நாம மனசை குறைக்க போலாம்...
ReplyDeleteநன்றி விக்கி...
ReplyDeletegood. coming 10th i will be there to mingle with my native bloggers.
ReplyDeleteகலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..
ReplyDelete//// ஒட்டக்கூத்தன் said...
good. coming 10th i will be there to mingle with my native bloggers.////
அன்பின் நண்பரே..
அடுத்த சந்திப்பில் எதிர்பார்க்கின்றோம்
சூப்பர்,கலக்கல் சந்திப்பு.என்னால் வர முடியல........ஓகே அடுத்த தடவை பார்கலாம்........
ReplyDeleteவர்ணனைகள் விவரணைகள் அருமை .............ஜீவா ........ஆனாலும் இப்படி தசாவாதாநியாக இருப்பீர்கள் எல்லோரும் என்று உங்களின் கணக்கெடுப்பில் அறிந்தேன் ....வாழ்த்துக்கள்
ReplyDeleteஆஹா..கிளம்பிட்டாங்க..ஏதோ ஒரு படத்தில் விவேக்கின் தமிழ் பேச்சை சென்னை பேச்சாக மொழி பெயர்ப்பு செய்வாங்களே...அந்த மாதிரி தேவை படும் போல ..இப்ப எனக்கு ...
ReplyDeleteஹி ஹி நான் யாரையும் பார்க்கல பாஸ், நீங்க சொன்னீங்களே பச்சை டீசர்ட் அவங்கள மட்டும்தான் :-)
ReplyDeleteஅவங்க மட்டும் தான் தேறினாங்க போல...
ReplyDeleteLast para kilu kiluppaa irukku. I also want to attend a Pathivar santhippu in Coimbatore :))
ReplyDeleteவாங்க மோகன் சார்...உங்களுக்கு செம கவனிப்பு பண்றோம்.
ReplyDeletei missing this meeting
ReplyDeleteநடை பாதை மேடையில் ஒரு புதிய படை
ReplyDelete