சி எஸ் ஹோட்டல் சைவம்
ரயில்வே ஸ்டேசன் , சாந்தி தியேட்டர் , கமிஷனர் ஆபிஸ்அருகில் இருக்கிறது.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
ரயில்வே ஸ்டேசன் சாந்தி தியேட்டர் அருகில் உள்ள இந்த சைவ ஹோட்டலுக்கு போனோம்.ஹோட்டலுக்கு உள்ளே நுழைந்ததும் எல்லாரும் நின்னுட்டு சாப்பிட்டுகிட்டு
இருக்காங்க.அப்புறம் தான் தெரியுது இது செல்ப் சர்விஸ் ஹோட்டல் அப்படின்னு..சரி
நாமும் இன்னிக்கு நி(தி)ன்னு பார்ப்போம் அப்படின்னு நினைச்சு சாப்பிட வேண்டியதுக்கு
பில் வாங்கினோம். ஆனியன் ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட் அப்புறம் ஒரு ஸ்வீட்... ஜீரா
பூரி, மைசூர்பா.பில்லை வாங்கி சப்ளையர் கிட்டே கொடுத்து விட்டு கொஞ்ச நேரம் காந்திருந்ததில் சூடான ஊத்தாப்பம், ரோஸ்ட் வந்தது.தொட்டுக் கொள்ள சாம்பாரும் சட்னியும்
தனி தனி கிண்ணியில் வாங்கி கொண்டு நமக்குண்டான இடத்தை தேடி நின்றோம்.
ஆனியன் ஊத்தாப்பம் அப்புறம் ரோஸ்ட்
இரண்டும் செம டேஸ்ட்.
கொடுத்த காசு ஆகல வேஸ்ட்.
(அட...அடுக்கு மொழிலாம்வருதே...நன்றி டி ஆர் ).
ஊத்தாப்பத்தில் ஆனியன் நிறைய இருப்பதால் நல்ல சுவையுடன் இருக்கிறது.நல்ல பதத்துடன்
வெந்தும் இருக்கிறது.அதற்கு மேட்சாய் சாம்பாரும் சட்னியும்.இரண்டும் நல்ல சுவையில்
இருக்கிறது.ரோஸ்ட் அதுபோலவே நல்ல மொறு மொறு பதத்தில் ஆனியன் சுவையில் நன்றாக இருக்கிறது.
அப்புறம் ஜீரா பூரி..இது ஜீராவிலே நல்லா ஊறி சாப்பிட நன்றாக
இருக்கிறது.உள்ளே தேங்காய் வைத்து செய்து இருக்கின்றனர்.நல்ல இனிப்பு.சாப்பிட
சாப்பிட திகட்டுகிறது.முழுதாய் ஒன்றை சாப்பிட முடியவில்லை.அவ்ளோ இனிப்பு. அப்புறம்
மைசூர்பா...இதுவும் அப்படியே.. முழுக்க முழுக்க நெய்யினால் செய்து
இருக்கிறார்கள். திகட்டுகிறது.கொஞ்சநேரம் வெய்யிலில் வைத்தால் நெய்யாறு ஓடும்.அவ்ளோ
நெய்....
அப்புறம் இங்க நிறைய பேரோட விருப்பம் மினி இட்லியா இருக்கு.குட்டி குட்டி இட்லிகள் சாம்பாரில் மிதந்து சாப்பிட தூண்டும் வகையில் இருக்கு.பக்கத்துல ஒருத்தர் இட்லிய பிடிக்க தூண்டில் போட்டுட்டு இருந்தாரு.அடுத்த முறை செல்லும் போது நாமும் தூண்டில் போடணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்.
அப்புறம் இங்க விலை எப்பவும் போல கோவைக்கு ஏற்றார் போல அதிகமாவே இருக்கு.நல்ல டேஸ்ட் இருப்பதால் இங்க கூட்டம் இருந்துகிட்டே இருக்கு.இந்த ஹோட்டல்ல எப்பவும் டிபன் மட்டும் தான் கிடைக்கும்.7.30 to 9.30 வரை டிபன் மட்டுமே..பக்கத்துல இன்னொரு சி.எஸ்.இருக்கு அங்க மீல்ஸ் கிடைக்கும்.
விலைய பத்தி கவலை படாம கண்டிப்பா போய் சாப்பிடலாம்.ரயில்வே ஸ்டேசன் , சாந்தி தியேட்டர் , கமிஷனர் ஆபிஸ்அருகில் இருக்கிறது.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
மாப்ள ஏதோ கோவை ஹோட்டல்ல பூனைக் கரி கிடைக்குதாம் பதிவு போடறது!ஹிஹி!
ReplyDeleteஇம்புட்டையும் ஒரே நாளில் ஒரே ஆளாவா சாப்பிட்டீங்க?
ReplyDeleteபடங்களுடன் தகவல் அருமை...
ReplyDeleteதொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...
சுவை அழைக்கிறது...
ReplyDeleteஎச்சில் ஊற வைத்துவிட்டீர்கள்! அருமையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
http://thalirssb.blogspot.in/2012/08/17.html
என் விகடனில் வந்ததற்கு வாழ்த்துகள்
ReplyDeleteஎன் விகடனில் இடம்பெற்றமைக்கு என்னுடைய வாழ்த்துகள்..! மிக்க மகிழ்ச்சி நண்பரே..!
ReplyDeleteசெம 'டேஸ்டான' பதிவு...
ReplyDeletesuper boss
ReplyDeleteஎன் விகடனில் வந்ததற்கு வாழ்த்துகள் , பார்ட்டி வைக்கும் இடம், நேரம் சொன்னால் ஆஜர் ஆவேன்;-0
ReplyDelete>>ரயில்வே ஸ்டேசன் சாந்தி தியேட்டர் அருகில் உள்ள இந்த சைவ ஹோட்டலுக்கு போனோம்.
ReplyDeleteயோவ், கோவைல மொத்தம் 135 ஹோட்டல்களும், 248 மெஸ்களூம் இருக்கு, அது ஏன் லேடீஸ் பேர் போட்ட ஹோட்டல்க்கே போறீங்க ?;-0