Thursday, August 9, 2012

கோவை மெஸ் - ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரி சங்கர், கோர்ட் கிளை , கோவை


  கோவையில் இருக்கிற ரொம்ப புகழ் பெற்ற ஹோட்டல் ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர்.இந்த ஹோட்டல் நிறைய கிளைகளை கோவையில் வைத்து இருக்கு.நான் போனது கே ஜி மருத்துவமனை, கோர்ட் அருகில் இருக்கிற ஹோட்டலுக்கு..அந்த பக்கம் நம்ம வேலை நடக்கிறதால் ஒரு மத்தியான நேரம் அந்த ஹோட்டலுக்கு போனோம்.வாழை இலையில் சாப்பாடு என்று விளம்பரம் வேற...
    சாப்பாடு மற்றும் டிபன்க்கு என்று தனித்தனி ஏரியாக்கள்.டயட்ல இருக்கிற நிறைய அம்மணிகள் டிபன் பக்கம் அமர்ந்து இருந்ததால் அந்த பக்கம் தாவினோம்.அன்னபூர்ணால என்ன பேமஸ் அப்படின்னா சாம்பார் இட்லியும், தயிர் சேமியாவும்தான்.மத்த டிபன் எல்லாம் நல்லா இருந்தாலும் நம்ம வோட்டு இதுக்கு மட்டும்தான்.மதிய நேரம் ஆதலால் சாம்பார் சாதமும், தயிர் சேமியாவும் ஆர்டர் பண்ணினோம்.

    பிரிட்ஜ்ல வச்ச குளிர்ச்சியோட தயிர் சேமியா...முந்திரி, மாதுளை, உலர் திராட்சை என ரொம்ப சுவையுடன் கொஞ்சம் கூட புளிப்பு இல்லாமல் அவ்ளோ அருமையாக இருந்தது.அதற்கு தொட்டு கொள்ள ஊறுகாய். சத்தியமா மட்டை ஊறுகாய் இல்லை.இரண்டும் இணைகையில் நம்ம கேபிள் சொல்வாரே டிவைன்...அதுதான்...அப்புறம் நெய் மணக்கும் வாசத்துடன் கொஞ்சம் குழைந்த சாதத்துடன் சாம்பார் இருக்க செம...டேஸ்ட்.கூட நொறுக்கி கொள்ள சின்ன சின்ன அப்பளம்...(என்ன....எல்லாம் அளவுல ரொம்ப குறைவா இருக்கு...ஆனா விலை அதிகமா இருக்கு.)
   இன்னமும் கொஞ்சம் இடம் இருப்பதால் தயிர் வடையும், சில்லி பரோட்டாவும் ஆர்டர் பண்ணினோம்.பண்ணியது வீண் என்று சாப்பிட்டு பார்க்கையில் தான் தெரிந்தது.தயிர் வடை செம புளிப்பு.நான் சாப்பிட்டு பார்க்கையில் என் முகத்தில் தெரிந்த ஒளிவட்டத்தினை நண்பர் கண்டு பிடித்து விட்டார். அப்புறம் சில்லி பரோட்டா...நம்ம ஊருல தள்ளுவண்டியில போடற மசால் பூரி டேஸ்ட்டில் இருக்கிறது.சில்லி பரோட்டா என்றால் நல்ல செவ செவன்னு, குண்டு மிளகாய் போட்டு, தக்காளி சாஸ் லாம் போட்டு ரொம்ப சுவையா த்ருவாங்கன்னு பார்த்தா மசாலாவுல முக்கி கொடுத்து இருக்காங்க. சர்வரை கேட்டால் ஒவ்வொரு மாஸ்டர் ஒவ்வொரு மாதிரி போடுவாங்களாம் அப்படின்னு பதில் வேறு..
 

      அப்புறம் உள்புறம் போட்டோ எடுக்க முடியல.ஏன்னா பக்கத்துல கோர்ட் இருக்கிறதால் நிறைய வக்கீல்கள், போலீஸ் என எல்லாரும் வந்து சாப்பிட்டுகிட்டு இருக்காங்க.நாம போட்டோ எடுக்க போயி ஏதாவது நியுசன்ஸ் கேஸ்ல உள்ள தள்ளிட்டாங்கன்னா என்ன பண்றது...அதுவும் இல்லாம ஏதாவது கொலை கேஸ்ல மாட்டி ஜாமீன்ல வந்து சாப்பிட்டு இருக்கிற ஆளு யாராவது கோவப்பட்டு நம்மளை போட்டுட்டா... அதுனால எஸ்கேப்..
    விலை எப்பவுமே ரொம்ப அதிகமா இருக்கும்.உணவுகள் ரொம்ப தரமா இருக்கும்.அதே சமயம் கூட்டம் எப்பவும் இங்க இருந்துகிட்டே இருக்கும்.
சாம்பார் சாதம் - 30.00 தயிர் சேமியா- 35.00 தயிர்வடை - 21.00 சில்லி பரோட்டா – 55.00.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

16 comments:

  1. சாப்பாட்டு கடை பதிவுகளில் நம்பர் ஒன் இடம் பிடித்த ஜீவா..வாரே வா.

    ReplyDelete
  2. அதற்கு அருகில் முன்பு கோர்ட் கான்டீன் ஒன்று இருந்தது.

    விலையும் குறைவு. தரமும் நன்றாகவே இருந்தது.

    இப்போது அதை மூடி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

    ஊம்ம், அதெல்லாம் ஒரு காலம்.

    - விமல்

    ReplyDelete
  3. அன்னபூரணாவில் சாப்பாடு அருமை...

    விலையும் அருமை...

    இந்த வார அஞ்சறைப்பெட்டியில் உங்களை அறிமுகப்படுத்தி உள்ளேன்...

    ReplyDelete
  4. நல்ல அறிமுகம்!

    ReplyDelete
  5. நல்ல அறிமுகம்!

    ReplyDelete
  6. பயபுள்ளைக காசதான் உருவிடறாங்க..

    ReplyDelete
  7. இழுக்கும் படங்கள்!

    ReplyDelete
  8. சூப்பரப்பு

    ReplyDelete
  9. நல்லதொரு ஹோட்டல் அறிமுகம்...

    படங்களும் விளக்கங்களும் அருமை...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete
  10. தயிர் சேமியாவா? கேள்விப்பட்டது கூட இல்லையே? படத்துக்கு நன்றி.
    கோவையில் ஒரு வாரம் கேம்ப் போட வேண்டும்.

    ReplyDelete
  11. சுவையான அறிமுகம்! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    ஒண்ணொன்னு .. ஒண்ணொன்னு வேணும்!
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  12. ! சிவகுமார் ! said...
    சாப்பாட்டு கடை பதிவுகளில் நம்பர் ஒன் இடம் பிடித்த ஜீவா..வாரே வா.

    இவரே சொல்லிட்டாரா? ரைட்டு !

    ReplyDelete
  13. கோவை போனால் ட்ரை பண்ணி பார்க்கிறேன்.. படங்களை பார்த்தாலே நாவில் நீர் ஊறுகிறது

    ReplyDelete
  14. ம்ம்ம்ம்..... வாசிக்கும் போதே வாயில் நீர் ஊறுகிறது. குட்டிக் கவிதைகளின் தளம் இது. ஒரு முறை வரலாமே?
    http://skaveetha.blogspot.com

    ReplyDelete
  15. Wow. Nice post boss. Naanum sumaaraa eludhuven. Konjam vandhu paarungalen?
    http://newsigaram.blogspot.com

    ReplyDelete
  16. ஜீவா சார் நல்ல படைப்பு. பழைய நினைவுகளை நியபகபடுத்திநீர்கள் nandri. அங்கே எப்பவும் விலை அதிகம் தான் 90 களில் அங்கே சாப்பிடுவோம் விலையை பார்த்து யோசித்துகிட்டே. சேரன் டவர் அருகில் கீதா கபே (ஓட்டல் ?) என்று நினைகிறேன். அங்கே சாப்பாடு நியாயமான விலையில் அளவிலாத சாப்பாடு கிடைக்கும். இப்போ அந்த கடை இருகிறதா என்று தெரியவில்லை.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....