Friday, August 3, 2012

அண்ணா உயிரியல் பூங்கா- வண்டலூர்

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா...
போன  முறை சென்ற போது விரிவாக்கம் செய்யப்பட்டு திறப்பு விழாவிற்காக ஏதோ ஒரு அரசியல்வாதியின் வருகைக்கு காத்திருந்த இந்த பூங்கா இப்போது  திறக்கப்பட்டு இருக்கிறது.உள்ளே நல்ல முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.பாறை குகை போன்று செட்டிங்க்ஸ் நம்மை வரவேற்கிறது.டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே நுழைந்தோம்.
 

வாடகைக்கு சைக்கிள் எடுக்கலாம் என்று நினைத்த போது சர் என்று வந்து நின்றது பாட்டரி கார்.கஷ்டப்பட்டு சைக்கிளை மிதித்து இருக்கிற கொஞ்ச நஞ்ச பூஸ்டும் போய் விட்டால் என்ன பண்றது..... என்றெண்ணிய படியே பாட்டரி காருக்கு டிக்கெட் வாங்கி பயணித்தோம்...
அங்க இருக்கிற விலங்குகளை பார்க்கிறோமோ இல்லையோ நிறைய ஜோடி மனித விலங்குகளை கண்டோம்.எவ்ளோ பேரு..உள்ள இருக்கிற விலங்குகளை விட இவங்கதான் அதிகமா இருக்காங்க போல...(நமக்கு ஒண்ணும் சிக்கமாட்டேங்குதே....) சரி போனால் போகட்டும்.. என்ற நல்லெண்ணத்தில் அவர்களை விட்டு விட்டு நம்மை எதிர் நோக்கி காத்திருக்கிற விலங்குகளை கவனிக்க ஆரம்பித்தேன்..










சிங்க வால் குரங்கு, புலி, சிங்கம், கரடி, யானை, முதலை, பாம்பு என அனைத்து விலங்கினங்களும் இயற்கை சூழலோடு இருக்கிறது.பார்க்க தான் நேரம் இல்லை.கொஞ்ச நேரம் வண்டி நிற்கிறது.உடனே பார்த்து விட்டு வரவேண்டும்.
நடந்து போகலாம் ஆனால் ரொம்ப தூரம் பயணிக்க வேண்டும். ஜோடிகளுக்கு ஓகே...கடலை போட்டபடி சென்று விடலாம்.குடும்பம் குழந்தைகளுடன் வருபவர்கள் ரொம்ப தூரம் நடக்க முடியாது.கஷ்டம் தான்.

கிசு கிசு: எங்கடா விலங்குகளை காணோம்னு கேட்க கூடாது.சாயந்திரம் போனதால் என்னவோ எந்த விலங்கும் கண்ணுக்கு சிக்கல.ஜோடிகளை தவிர...

கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்.விலங்குகளை மட்டும் ...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

13 comments:

  1. எங்கள் வீடு இங்கிருந்து சில பல கிலோ மீட்டர் தான். இங்கு வந்தும் என்னிடம் போன் பேசாத, எங்களை பார்க்காத கோவை நேரத்தை வன்மையாய் கண்டிக்கிறேன்

    வீட்டுக்கு வரும் குட்டி பசங்களை நான் பல முறை கூட்டி போன இடம் இது; பாட்டரி காரிலும் சுற்றியுள்ளோம்

    ReplyDelete
  2. படங்களுடன் பகிர்வு அருமை...
    முடிவில் செம பஞ்ச்...

    ReplyDelete
  3. நிறைய ஜோடி மனித விலங்குகளை கண்டோம்.எவ்ளோ பேரு..உள்ள இருக்கிற விலங்குகளை விட இவங்கதான் அதிகமா இருக்காங்க போல...
    ////////////////////////
    மாப்ள அதான் அடிக்கடி நம்மளை கண்ணாடியில பார்க்கக்கூடாதுங்கறது...!

    ReplyDelete
  4. மோகன் குமார்/// அடுத்த முறை வந்து விடுவோம்...

    ReplyDelete
  5. திண்டுக்கல் தனபாலன்/////நன்றி

    ReplyDelete
  6. வீடு சுரேஷ்///ஏன் மாம்ஸ்...பார்க்க கூடாது..?

    ReplyDelete
  7. விலங்குகளை படம் எடுக்க போன மாதிரி தெரியல .....

    ReplyDelete
  8. உடல் அசதியைவிட பேட்டரி காரை விட நடந்து போனால் இன்னும் நிறுத்தி நிதானமா நிறைய விலங்குகளை பார்த்துட்டு வரலாம். இப்போ விலங்குகள் இல்லாம பூங்கா காய்ஞ்சுதான் போய் இருக்கு. பிள்ளைகளை கூட்டிட்டு குடும்பத்தோட போறவங்க கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கனும் ஏன்னா காதல் ஜோடிகளோட அட்டகாசம் அப்படி.

    ReplyDelete
  9. மாப்ள, டிக்கெட் டிக்கெட்டா எடுத்து பாத்து இருக்கீங்க.. ம்

    ReplyDelete
  10. எங்கய்யா விலங்குகள்... ஆன நீர் தேடியது எல்லாம் மனித விலங்குகள் என்பது தெரியுது...

    ReplyDelete
  11. மாப்ள, உண்மை தெரிஞ்சாகனும் ஜோடி படங்கள் எடுத்தது காருக்குள்ள இருந்தா? இல்லா ஜூம் போட்டா?? ஹி ஹி ஹி

    ReplyDelete
  12. கல்லூரியின் கடைசி நாளில் நாங்கள் இங்கு தான் சுற்றினோம்.

    ஜோடி பிரச்சனை வண்டலூர் என்று இல்லை, இங்கு தில்லியிலும் (ஜூ என்று இல்லை அனைத்து பொது சுற்றுலா இடங்களிலும்) ஒரே தொந்தரவுதான்.

    ReplyDelete
  13. ஜோடிப்பறவைகள் மட்டும் கண்ணுல சிக்கிச்சா? அட்டகாசம்!

    இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....