Tuesday, August 28, 2012

மெரீனா பீச், சென்னை


பதிவர் சந்திப்பு விழாவிற்கு கொஞ்சம் முன் கூட்டியே வந்ததினால் எங்கயாவது போய்ட்டு ஒரு பதிவ தேத்தணும் அப்படின்னு முடிவு பண்ணி போனது உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா பீச்.......சத்தியமா நான் மட்டும் தான். (அம்மணிகள் யாரும் வரல..) எப்படியாவது முக்காடு போட்டுக்கிட்டு சில பேரு இருப்பாங்க...அவங்கள பார்த்தாவது கொஞ்சம் மனசு ஆறிடுமே..அப்டிங்ன்கிற நல்ல எண்ணத்துல தான் போனேன்). நான் வந்தது கார்ல என்றாலும் சென்னையின் முக்கிய அடையாளமாய் இருக்கிற சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ஐ கடக்கும் போது கோவையில் இருந்து வந்துகிட்டு இருக்கிற நண்பர்களோட ஞாபகங்கள்....
அப்புறம் வர்ற வழியெல்லாம் மெட்ரோ ரயில் வொர்க் நடந்திட்டு இருக்கிறதால் கொஞ்சம் ட்ராபிக்..கொஞ்சமென்ன... அதிகமாவே ட்ராபிக் தான்... பை பாஸ்ல 160 கிமீ வேகத்துல வந்தாலும் சென்னையில் நுழையும் போது 20க்கும் அதிகமாய் போகமுடியல...தட்டு தடுமாறி....கொஞ்ச கொஞ்சமாய் ஊர்ந்து கிட்டே எப்படியோ மெரீனா போய் விட்டோம்..

நல்ல மொட்டை வெயிலில் நிறைய பேர் முக்காடு போட்டு கிட்டு கடலை வருத்ததில் பொசுங்கி போனது நம்ம மனசும் தான்...(எங்க படம் அப்படின்னு கேட்க கூடாது....)
நேரம் குறைய குறைய மக்களின் கூட்டம் அதிகமாகி கொண்டே போனது.வெட்ட வெளியாய் இருந்த பீச் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் நிறத்திற்கு மாறிக் கொண்டு இருந்தது..பீச் மணலில் காலாற நடப்பதில் ஒரு சுகம்..அதுவும் கை கோர்த்து கொண்டு......சத்தியமா நமக்கு அந்த கொடுப்பினை இல்லை......பக்கத்துல போன ஜோடியை கண்டதால் காதோரத்தில் கொஞ்சம் புகை வாசனை வந்ததென்னவோ உண்மைதான்...
     எப்பவும் போல கிளி ஜோசியம், மாங்கா பட்டாணி, சுண்டல், பலூன்கடை, பஜ்ஜி கடை, குடை ராட்டினம் என அனைவருக்கும் ஆங்காங்கே வாடிக்கையாளர்கள்......கடலின் அலையை ரசித்ததில் நேரம் போனதே தெரியவில்லை..(கூடவே கடலலையில் கால்களை நனைத்து விளையாடிய அம்மணிகளையும்...)
 
யாராவது வந்து என்கூட நின்னு போட்டோ எடுத்து கொள்வார்களா என ஏங்கி நிற்கும் திரையுலக நட்சத்திரங்கள் வரிசை கட்டி நின்றது ரொம்ப அதிசயம்...(நான் நம்ம கேப்டன் கூட நின்னு எடுத்துகிட்டேன்...வரலாறு முக்கியம்...)
அப்புறம் நண்பர்கள் வந்தடைந்த சேதி வந்ததால் மெரீனாவை விட்டு விலக மனமில்லாமல் (சே.... நல்ல படம் ஓடிட்டு இருந்துச்சு,.....கொஞ்ச நேரம் நல்லா இருந்தா பிடிக்காதே நம்மாளுங்களுக்கு.....ரொம்ப சீக்கிரத்துலேயே வந்துட்டாங்களே என்று புலம்பிய படியே. .....) விலகினேன்.
அப்புறம் பதிவர் சந்திப்பு நடந்த இடம் போனது, வந்தது, நடந்தது எல்லாம் நிறைய பேரு எழுதிட்டதால் இங்க இருந்து ஜகா வாங்கிக்கிறேன்.....

கிசுகிசு: அம்மணிகள் எல்லாரும் என்னமா இருக்காங்க. சென்னை சென்னைதான். அட்டு பிகருக்கு good boyம்   good பிகருக்கு அட்டு boy ம்
கிடைக்கிறது இங்கதான்... ஹி ஹி ஹி

நேசங்களுடன்
ஜீவானந்தம்

23 comments:

  1. ஓய் ஹீரோ தூங்கறதே இல்லியா?

    //(நான் நம்ம கேப்டன் கூட நின்னு எடுத்துகிட்டேன்...வரலாறு முக்கியம்...)//

    அண்ணே நீங்க தான்னே அடுத்த கேப்டன். சீரியஸா நடிக்க பாருங்க ! சீரியஸ் !!

    ReplyDelete
  2. வணக்கம்.மோகன் சார் .இப்படி எல்லாம் தூங்காம வேலை செய்ய கூடாது...நீங்க வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்கும் போதே நினைச்சேன்.ஒரு மாசம் போஸ்ட் போட போறீங்க அப்படின்னு....

    ReplyDelete
  3. மச்சி எனக்கு ஒரு சுண்டல் சொல்லேன்...

    ReplyDelete
  4. சுண்டல் மட்டும் போதுமா மச்சி....

    ReplyDelete
  5. மச்சி பல்லு இருக்கவ பக்கோடா சாப்பிடலாம்..

    நமக்கு சுண்டல் தான் மச்சி...

    மச்சி அங்க கலக்கல் பிகர் இருந்த மேட்டரை ஏன் மச்சி எனக்கு சொல்லல...

    எத்தனை நாளைக்குத்தான் சுமாரைய பார்ப்பதுன்னு ஒரு ஏக்கம் தான்...

    ReplyDelete
  6. அந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டோவை போடாததற்கு எனது கண்டனங்கள்.

    ReplyDelete
  7. கடல் படத்தைப் போட்ட நீங்கள் கடலை போட்ட படத்தைப் போடவில்லையே... அபபடி ஒன்றும் சிக்கவில்லைதானே...! சென்னையின் சாலைப் போக்குவரத்து நெரிசல் எரிச்சல் தருவது!

    ReplyDelete
  8. யோவ், காலங்காத்தால பொய் சொல்லாதேய்யா, நான் ஃபோன் பண்ணுனப்ப பீச்ல ஃபேமிலியோட இருக்கறதா சொன்னீங்க.. எந்த ஃபேமிலின்னு கேட்க மறந்துட்டேன், ம் ம் நடக்கட்டும் நடக்கட்டும்

    ReplyDelete
  9. பொதுவாக பயனங்கள் கற்றுத்தருவது நிறையவே,உன்ங்களுக்கு கடலை போட கற்றுத்தந்திருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. மாப்ளைய்ய்....!பீச்சுக்கு வேட்டியோடதான் போனீங்களா...? இல்லை காத்து அதிகம்ன்னாங்க.....!

    ReplyDelete
  11. கலக்கல்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. நிறைய புகை இங்க...சூ...சூ !! :-) ரொம்ப சந்தோசம். நம்ம கேப்டன் கூட நீங்க போட்டோ எடுத்துகிட்டது அவருக்கு எவ்வளவு பெருமை !

    ReplyDelete
  13. எஞ்சாய் பண்ணியிருக்கீங்க.

    ReplyDelete
  14. அம்மணிகள் எல்லாரும் என்னமா இருக்காங்க. சென்னை சென்னைதான். அட்டு பிகருக்கு good boyம் good பிகருக்கு அட்டு boy ம்
    கிடைக்கிறது இங்கதான்... ஹி ஹி ஹி

    சென்னையிலிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கே ஒரு ஆழமானப் பார்வையை உங்களின் கட்டுரை ஏற்படுத்துகிறது. அருமை.
    இருந்தாலும் இறுதியில் உங்களின் கோவையை நினைவுப்படுத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
  15. //சே.... நல்ல படம் ஓடிட்டு இருந்துச்சு,.....கொஞ்ச நேரம் நல்லா இருந்தா பிடிக்காதே நம்மாளுங்களுக்கு.....ரொம்ப சீக்கிரத்துலேயே வந்துட்டாங்களே என்று புலம்பிய படியே.// மனதில் இருப்பதை அம்பலபடுதிய நல்லவர் ஜீவாவிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. முக்காடு போட்டுக்கிட்டு சில பேரு இருப்பாங்க...அவங்கள பார்த்தாவது கொஞ்சம் மனசு ஆறிடுமே..அப்டிங்ன்கிற நல்ல எண்ணத்துல தான் போனேன்// நல்ல எண்ணந்தான், ஆனா மனசு ரொம்ப ஆறிருக்குமே!!!

    ReplyDelete
  17. மெரீனாவை ரசித்து எழுதி இருக்கிறீர்கள்! நான் பீச்சை சொன்னேன்!

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
    http://thalirssb.blogspot.in/2012/08/6.html
    மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html

    ReplyDelete
  18. //
    சி.பி.செந்தில்குமார் said...
    யோவ், காலங்காத்தால பொய் சொல்லாதேய்யா, நான் ஃபோன் பண்ணுனப்ப பீச்ல ஃபேமிலியோட இருக்கறதா சொன்னீங்க.. எந்த ஃபேமிலின்னு கேட்க மறந்துட்டேன், ம் ம் நடக்கட்டும் நடக்கட்டும்
    //

    என்னவொரு வில்லத்தனம் ஹி ஹி ஹி!

    ReplyDelete
  19. மச்சி....
    பீச்சுல ஒரு பிகரு போட்டோ கூட போடாம ஏமாத்திபுட்டியே...

    அட்டா இருந்தா என்ன? குட்டா இருந்தா என்ன?

    ReplyDelete
  20. பதிவு எனக்கு ஏமாற்றத்தையே தந்தது......
    மெரினா மெரினா என்னு ...(இரண்டு மெரினா இல்ல ஒன்னுதான் )

    கேள்விப்பட்டிருக்கிறன் ஏன் ஒரு படம் கூட வெளிவந்தது (அது இன்னமும் பார்க்கல்ல ) உங்க பதிவுலயாவது அதன காட்டுவீங்க என்னு வந்தேன் எனக்கு கொடுப்பினை இல்ல போல... :(

    ReplyDelete
  21. வெள்ளை வேட்டி சட்டை யில் செம கலக்கலா இருந்திங்க நண்பா ஆனா அப்புறம் மாத்திட்டிங்க அதுவே நல்லா தான் இருந்துச்சி ... நீங்கள் தான் அன்று தனியாக தெரிந்திர்கள் ...தொடர்வோம் நன்றி

    ReplyDelete
  22. தங்களை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி தோழரே..

    விரைவில் உங்கள் அறிமுக புகைப்படத்தை அனுப்பி வைக்கிறோம்.. மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்

    தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி

    ReplyDelete
  23. அடிக்கடி சந்திப்பு வச்சுடலாம் அந்த சாக்குல பீச்சுக்கு வந்து என்ஜாய் பண்ணுங்க

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....