Wednesday, August 22, 2012

கிடா வெட்டு - அந்தியூர் வனம் - குருநாத சுவாமி கோவில்

அந்தியூர் வனம்
நண்பர் சங்கவி அவர்களின் கிடா வெட்டு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன்.கோவையில் இருந்து சத்தி வழியாக அந்தியூர் சென்றேன்.அந்தியூரை நெருங்க நெருங்க வண்டிகளில் கூட்டம் கூட்டமாய்...பெரும்பாலும் மினி டோர் வகை வண்டிகளே...ஒவ்வொரு வண்டியிலும் ஆடு, கோழி மற்றும் இன்ன பிற இத்தியாதிகள்...கூடவே மக்கள் கூட்டமும் ..
அதுவரை  வேகமாக சென்ற நம்ம வண்டி கூட்ட நெரிசலின் காரணமாக நடந்து செல்பவர்களே  ஓவர் டேக் பண்ணும் படி ஆகிவிட்டது..
நிறைய கடைகள்..அல்வா, தேங்காய் மிட்டாய், கரும்பு சாறு கடைகள், பேன்சி ஸ்டோர், அப்புறம் இரும்பு கடைகள் என இருபுறமும் நிறைந்து இருக்கிறது.
பொறுமையாய் ஒவ்வொன்றையும் பார்த்த படியே முன்னேறி கொண்டு இருந்தோம்.வனம் செல்லும் வழி வந்ததும் சங்கவி யை தொடர்பு கொள்ள அவர் காட்டிய (சொல்லிய ) வழியின் படி சென்றோம்.கடைசியில் கண்டே விட்டோம். கூட்ட நெரிசலில் தனியாய் தெரிவதற்காக மலையூர் மம்பட்டியான் போல அவர் ஏற்பாடு செய்து இருந்தார்.
எப்படின்னா அவரு சாலை போட்ட  இடத்தின் மீது ஒரு  நீண்டகம்பில் அடையாள குறிப்பை கட்டி தொங்க விட்டு இருந்தார்..
அந்த கம்பு இதுதான்..

அப்புறம் அவருடன் ,அவரது குடும்பத்தாருடன் பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு கிடா வெட்டும் இடத்துக்கு கிடாவை ஓட்டி கொண்டு சங்கவியுடன் சென்றோம்.
             (எப்படா கறி ஆவ அப்படின்னு ஏக்கதோட பார்க்கிற சங்கவி )

கிட்ட தட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் கிடா , கோழி வெட்டி நேர்த்தி கடன் செய்து கொண்டு இருந்தனர்..ஒரு பக்கம் கிடா வெட்டி கொண்டு இருக்க , மற்றொரு பக்கம் அதை உரித்து தொங்க விட்டு துண்டுகளாக்கி கொண்டு இருந்தனர்.அதே போல் கோழிகளும் குழம்பாவதற்கு முன்னரே கொதி நீரில் போட்டு வேக வைத்து கொண்டு இருந்தனர் முடி பிடுங்குவதற்காக....
சங்கவியின் கிடா ரொம்ப நேரம் துளிர்க்காமல் விளையாட்டு காட்டி கொண்டு இருந்தது.அப்புறம் அவர் குடும்பத்தோட போய் கும்பிட பெரிய மனசு பண்ணி உயிரை விட்டது ஒரே வெட்டில்...
இதே போல பல குடும்பத்தினரின் வேண்டுதல் நிறைவேறிக் கொண்டு இருந்தது தொடர்ச்சியாக...
மக்கள் கூட்டம் வரிசையில் நின்று கடவுளின் தரிசனம் கிடக்க காத்து கொண்டு இருக்கையில் நாங்கள் அந்த வனத்தினுள் காலாற நடை போட்டோம்........காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக...
காமாட்சி வனம், பெருமாள் வனம் என போர்டுகள் ..ஆங்காங்கே ஆண்களும் பெண்களும் இணைந்து சமையலில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.வனம் முழுவதும் நல்ல கறிக்குழம்பு வாசம்.கிடைத்த இடத்தில் அமர்ந்து சமைத்து கொண்டும் சாப்பிட்டு கொண்டும் இருந்தனர் மக்கள்..
கிட்ட தட்ட அந்த ஏரியா முழுக்க கூட்டம் ..கூட்டம்...100 ஏக்கருக்கும் மேல் இருக்கும்.கிடைக்கிற இடங்களில் வயல் வெளிகளில் ஒவ்வொரு குடும்பத்தினரும் தனி தனி சமையலறை கொண்டு......
வேண்டுதல் நிறைவேற முடி காணிக்கை செலுத்திய பக்தர்கள் நிறைய தங்களின் தலையை தடவிக் கொண்டே தத்தம் குடும்பத்தினரை தேடி கொண்டு இருந்தனர்...
அப்புறம் கிராமத்து திருவிழாவில் கண்டிப்பாய் இடம் பெரும் சிறு சிறு கடைகள், பாட்டு புத்தகம், வளையல் கடைகள், பலூன், ஐஸ் வண்டிகள், என நிறைய...
எல்லாவற்றையும் சுற்றி பார்த்து விட்டு சங்கவியின் கொட்டகைக்கு திரும்புகையில் ரெடியாகி கொண்டு இருந்த மட்டன் வாசம் நம்மை அழைத்தது...கூடவே சங்கவியும்....
 
பிரியாணி, மட்டன், சிக்கன், குழம்பு, என அனைத்தும் சுவையாய் இருக்க வயிறும் மனதும் நிறைய சாப்பிட்டு விட்டு எழுந்தோம்...
தாம்பூல தட்டுடன் வந்த சங்கவியிடமும் அவரது குடும்பத்தினரிடம் சொல்லி கொண்டு விடை பெற்றேன்...

இந்த நாளை இனிய நாளாக ஆக்கிய சங்கவி அவர்களுக்கு நன்றி..

கிசு கிசு:வெளியூர் அம்மணிகள் வருகை அதிகமா இருக்கு.ஆங்காங்கே கிராமத்து குயில்கள் நிறையவே சுத்திக்கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. 

நேசங்களுடன்  
ஜீவானந்தம் 


6 comments:

  1. உங்க பிளாக் போட்டிருக்குற புது சட்டை நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. விருது ஒன்றை உங்களுக்கு வழங்கியிருக்கிறேன் என் தளத்தில் அதை பெற்றுக்கொள்ள அழைக்கிறேன்
    http://kovaimusaraladevi.blogspot.in

    ReplyDelete
  3. விருதுபெற்ற சொந்தத்திற்கு என் வாழ்த்துக்கள்.
    மிக்க மகிழ்ச்சி.ஒரு வைபோகத்துக்கே கூட்டிப்போய் இருக்கிறீங்க என்னையும்.வாழ்த்துக்கள் சொந்தமே!சந்திப்போம்.!

    ஒரு தேநீரும் அவன் நினைவுகளும்.!!!!! !

    ReplyDelete
  4. ஆடு வெட்டும் ஸ்பாட்-லே படம் எடுத்திருக்கிறீங்க போல ....அருமை..

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு! அருமை!

    இன்று என் தளத்தில்
    அஷ்டமி நாயகன் பைரவர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

    ReplyDelete
  6. கலக்கல் போஸ்ட் மச்சி... இதை ரீ சேர் செய்கிறேன்...

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....