மூணாறு
கொச்சின் ல வேலையை முடிச்சிட்டு மதுரை
போலாம்னு முடிவு பண்ணி மூணாறு வழியை தேர்ந்தெடுத்தோம்.வளைந்து வளைந்து
செல்லும் பாதை.பசுமை இருபுறமும்.வழியெங்கும் இயற்கை கொட்டி கிடக்கிறது.
ரோட்டின் ஓரத்திலேயே நுரை பொங்கி வரும் அருவியின் ஆர்பாட்டம்.பசுமை
மேலாடையை போர்த்தி வைத்து இருக்கிற நிலப்பரப்புகள்.தேயிலை தோட்டங்களின் பசுமை
புரட்சி...என எங்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை..பசுமை..
நாங்க போன நேரம் வானம் பொத்து கிட்டு ஊத்தியதில் எதையும் பார்க்க முடியாமல் போய் விட்டது.கிடைத்த கேப்பில் எடுத்த படங்கள் கொஞ்சமே..
மேகங்கள் சூழ்ந்த மழையின் சாரலில் பயணித்த படியே மூனாறுல இருந்து மலைப்பாதை வழியா போடி மெட்டு வந்து சேர்ந்தோம்.
அதிகமா போட்டோ எடுக்க முடியல..அவ்ளோ மழை.நல்ல இதமான சூழ்நிலையில் திரும்ப செல்லவேண்டிய ஆவலை ஏற்படுத்தி விட்டது...
நேசங்களுடன்
ஜீவானந்தம்
வாவ் ரம்மியமான படங்கள்...அருமை..
ReplyDeleteஅருமையான படங்கள்... மூணாறு சென்று வந்தது மாதிரி இருந்தது...
ReplyDeleteதொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…
நாங்களும் மூனாருக்கு ஒரு ஷார்ட் விசிட்டில் திரும்பிட்டோம் இன்னொரு முறை போகணும்
ReplyDeleteகொஞ்சமா எடுத்த போட்டோக்கள்னாலும் ரொம்ப அழகாவே இருக்கு நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாய் சைக்கிள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html
நல்ல படப்பிடிப்பு,நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமை நண்பா
ReplyDeleteபடங்களை பார்க்கும் போதே மூணாறு போக வேண்டும்போல் உள்ளது.
ReplyDeleteமூணாறு தமிழ்நாடா கேரளாவா?
ReplyDelete