Tuesday, November 20, 2012

இந்த வாரம் பல் வலி வாரம் - அனுபவம் 2

இது புது பதிவு...

இன்னிக்கு ரொம்ப உபயோகமான பதிவு....ஞானப்பல் எனப்படும் விஸ்டம் டீத் எடக்கு மடக்கா முளைஞ்சதனால் வலி வரவே நேற்று இரண்டு மணி நேரம் போராடி பல்லை பிடிங்கியாச்சு...சத்தியமா நான் பிடுங்கல....ரெண்டு டாக்டர் அம்மணிகள் தான்...அங்க இருக்கிற வரைக்கும் வலியே தெரியல...(ரண களத்திலும் ஒரு கிளுகிளுப்பு....ஹி ஹி ஹி ).பல்லை பிடுங்கி கைல கொடுத்து வீட்டுக்கு அனுப்பவும் தான் ஒரே வலி...
32 பல்லு முளைச்சு இருக்கனும்.எனக்கு இதுவரைக்கும் 31 தான் இருக்கு.பல்லே வரல..அதுக்கு பதிலா வலி வரவும் தான் நம்ம பல்லு பையன் எங்கோ எடக்கு மடக்கா சிக்கி இருக்கான் அவனை வெளிய கொண்டு வரணுமே அப்ப்டின்னு நினைச்சி தான் டாக்டர்கிட்டே போனேன்...அவங்க நம்ம பல்லை பிடிங்கியே ஆகனும் அப்படின்னு கொக்கு மாதிரி அட....ஒத்தக் கால்ல நிக்கிறாங்க....
சரி...அம்மணிகள் கெஞ்சறது கண்டா மனசு தாங்காது..சரின்னு சொல்லவும் 

பல் பிடுங்கும் வைபவம் 

 நிகழும் மங்களகரமான ஸ்ரீ நந்தன வருடம் 
கார்த்திகை மாதம் 4ம் நாள் 19.11.12 திங்கள் கிழமை 
பஞ்சமி திதியும் பூராட நட்சத்திரமும் அமிர்த யோகமும்  
கூடிய சுபயோக சுப தினத்தில் 
மாலை 4 .30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் 
எனது பல் இரண்டு டாக்டர் அம்மணிகளின்
மேற்பார்வையில் பிடுங்கப்பட்டது...

பிடுங்கின பல்லோட வீங்கின வாயோட 
வந்து இந்த போஸ்ட் போட்டுட்டு இருக்கேன்...இது பழைய பதிவு:

பல் வலி எடுத்தால் நமக்கு ஒரே தீர்வு பல்லை புடுங்கிறது மட்டும்தான் அப்படின்னு நினைக்காதீங்க மக்களே .....( தேங்க்ஸ் விஜய்காந்த்) சாரி பதிவர்களே.....

பொதுவாக ப‌ற்களை ‌பிடு‌ங்க‌க் கூடாது.கீ‌ழ்‌ப் ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கினாலு‌ம் மே‌ல் ப‌ல்லை‌ப் பிடு‌ங்கவே‌ கூடாது. ஏ‌ன் எ‌னி‌ல் மே‌ல் ப‌ல் நேரடியாக மூளையுட‌ன் தொட‌ர்பு  ‌கொ‌ண்டிரு‌ப்பதாகு‌ம்.பல்லு தானே என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.பல்லில் ஏற்படும்  சொத்தை, கூச்சம், பற்குழி போன்ற பிரச்சினைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தால் உங்களின் பற்கள் பாதுகாக்கப்படும்.


இப்போ அதுக்கு எவ்வளவோ ட்ரீட்மென்ட் வந்து விட்டது.

எனக்கு ஏற்பட்ட அனுபவம் பத்தி கொஞ்ச நேரம்......

கடந்த ஒரு வாரமா பல் வலி ஏற்பட்ட காரணத்தினால் நம்ம வீட்டு பக்கம் இருக்கிற டென்டல் கிளினிக் போய் டாக்டரை பார்த்தேன்.எக்ஸ்ரே எடுத்து பார்க்கையில் கடைவாய் பல் ஒன்று எக்கு தப்பா முளைத்து பக்கத்து கடைவாய் பல்லை மோதி இருந்து இருக்கிறது. பக்கத்து பல்லும் சொத்தை ஆகி இருக்கிறது, அதனால் ஏற்பட்ட வலி தான் என்றெண்ணி அந்த பல்லை பிடுங்க சொன்னேன். இப்போதைக்கு இந்த பல்லை பிடுங்கி ஸ்டிச்சிங் போட்டு இது ஆறின வுடன் அந்த பல்லுக்கு ட்ரீட்மென்ட் எடுத்து கொள்ளலாம் என்றார்கள். 
மரத்து போகிற ஊசிலாம் போட்டு கொஞ்ச நேரம் கழித்து கத்தி கபடா இருக்கிற பெட்டியை கொண்டு வச்சு வாயை திறக்க சொல்லி பிடுங்க ஆரம்பிச்சாங்க..நான் கண்ணுல தண்ணீர் தெறிக்குதுன்னு கண்ணை மூடிகிட்டேன்...என்னை கண்ணை திறக்க சொன்னாங்க...ஓபன் பண்ணி பார்த்தால் என் வாய் ஒரு ஸ்டாண்ட் போல...ஏகப்பட்ட கருவிகளை வச்சி இருக்காங்க.நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்....என்னென்னமோ பண்ணி முடியல. கடைவாய் பல் ரொம்ப ஸ்ட்ராங் போல. தாடைலாம் வலி.ரொம்ப நேரம் போராட்டம் பண்ணி கட் பண்ணினாங்க... அப்பாடா...முடியல... அப்புறம் இடுப்புல வலி ஊசி போட்டு அனுப்பினார்கள் கூடவே மருந்தும் மாத்திரையும்.அப்புறம் பிடிங்கின பல்லையும்....

ஒரு வாரம் கழித்து மீண்டும் வலி எடுக்கவே மறுபடியும் சென்றேன்.பக்கத்து பல் மோதியதால் கேப் விழுந்து சொத்தை வந்ததினால் வலி. அந்த பல்லையும் பிடுங்க சொன்னேன். ..அதனால அதற்கு டாக்டர் ஒரே இடத்தில் அதுவும் கடைவாய் பற்கள இரண்டும் எடுக்க கூடாது..(காரணம்...கன்னத்தில் டொக்கு விழுந்திடும், உணவுகள் அரைக்க மேல் பல்லுடன் கீழ் பல் பட வேணுமாம்..) என்றும் ரூட் கெனால் ட்ரீட்மென்ட் செய்ய வேண்டும் என்றார்கள். (பல் பிடுங்க 100 ரூபாய் தான்...ஆனா ROOT CANAL TREATMENT க்கு 2000. என்ன பண்றது நம்ம நேரம் இப்படி இருக்கே..) சரின்னு சொல்லவே அவங்க வேலையை ஆரம்பித்தார்கள்.

முதலில் மரத்து போகும் ஊசியை கடைவாய் உள்ளே  குத்தினார்கள்.பாதி கன்னம் மற்றும் பாதி உதடு மரத்து போய் விட்டது.அதுக்கப்புறம் வாயை பொளந்தவன் தான் சும்மா அரை மணி நேரம்.....ஓ ன்னு... அவங்க பாட்டுக்கு பல்லில் ஓட்டை போட ஆரம்பித்தாங்க..ஓட்டை போட்டவுடன் கைப்பிடி உள்ள ஊசிகளை சைஸ் வாரியா எடுத்து அந்த ஓட்டை யில் விட்டு துழாவி துழாவி உள்ளே பாதிக்கப்பட்டு இருக்கிற திசு களை எடுக்க ஆரம்பித்தார்.இப்படியே அரை மணிநேரம் வாயை பொளந்து கொண்டே இருந்தேன். எல்லாம் சுத்தம் செய்தவுடன் அதுக்கு அப்புறம் நிறைய ஊசிகளை அந்த ஓட்டையில் விட்டு அடைத்து கிரைண்டிங் செய்ய ஆரம்பித்தார்.

அப்புறம் அந்த பல் உடையாமல் இருக்க அதற்கு கேப் போடணும் என்று சொல்லி இரண்டு வித கேப் களை காட்டினார்.மெட்டல் கேப், செராமிக் கேப் என இரண்டு வகை..மெட்டல் கேப் விலை குறைவு கருப்பு கலரில் இருக்கும். செராமிக் கேப் விலை அதிகம் பல்லின் நிறத்தில் இருக்கும். 

(கருப்பு தான்  போட சொன்னேன் ஹி ஹி அதுதானே விலை கம்மி யாச்சே...அதுக்கு டாக்டரு உள்ளே கருப்பா தெரியுமுன்னு சொல்ல///எப்பவும் நான் என்ன வாயை தொறந்து கிட்டா போக போறேன் எல்லாரும் பார்க்கிற மாதிரி அப்படின்னு சொல்ல... அம்மணி டாக்டருக்கு ஒரே சிரிப்பு...சிதற அடிக்குது மனசை.,...அப்படி இப்படி சொல்லி என்னை கன்வின்ஸ் பண்ணிட்டாங்க...எப்படியோ அவங்க கிளினிக்க்கு வாடகை கிடைச்சிடுச்சு.....) 
சரின்னு செராமிக் போட சொன்னேன்.

அதுக்கு அப்புறம் பல்லின் அளவு எடுக்கணும் என்று சொல்லி ஒரு மஞ்ச கலர் பேஸ்ட் ஐ பல் செட் மாதிரி இருக்கிற ஒரு கருவியில் அமுக்கி அன் பல்லின் மேல் வைத்து அச்சு எடுத்தாரு, நல்ல பைனாப்பிள் சுவையுடன் இருக்குதேன்னு அதை டேஸ்ட் பண்ணங்குள்ள எடுத்து விட்டார்.... அப்புறம் மேல் , கீழ் பற்களின் அளவை எடுத்து கொண்டார்...இனி கேப் செய்து வந்தவுடன் அந்த பல்லில் மாட்ட வேணும்...(அடுத்த பதிவுலாம் இல்லை)

எப்படியோ பல்லை பிடிங்கி யாச்சு.கிட்ட தட்ட 7000 பக்கம் வந்து விட்டது.பல் பிடுங்க 2000 ரூட் கெனால் 2000 செராமிக் கேப் 2000 அப்புறம் மருந்து மாத்திரைகள் என 850 ஆகி விட்டது....
இரண்டு வருடம் முன்பே வேறொரு மருத்துவ மனையில் பல் சுத்தம் செய்யும் போது சொன்னார்கள் ,அப்பவே அந்த பல்லை பிடிங்கி இருந்தால் இப்போ  இவ்ளோ வலியும் வேதனையும் அப்புறம் முக்கியமா விலையும் இருந்து இருக்காது. லேட்டாதான் உறைக்குது என்ன பண்றது.....எல்லாம் நம்ம நேரம்....

அதுக்கு தான் சொல்றேன்....மீண்டும் முதல் வரிக்கு வாங்க.....


இதெல்லாம் போன பல்லுக்கு நடந்தது...இந்த பல்லுக்கு அதே மாதிரிதான் ரொம்ப பாடுபட்டு, போராடி பிடிங்கினாங்க...கஷ்டப்பட்டு பிடுங்கியதால் 3500 கொடுத்து இருக்கேன்,,,அடுத்த ட்ரீட்மெண்ட் வியாழன் அன்று இருக்கு.....ரூட் கேனால் வேற பண்ணணுமாம்....அனேகமா அவங்க இந்த வருட கிருஸ்துமஸ் நல்லா கொண்டாடுவாங்க அப்படின்னு நினைக்கிறேன்...ஹி ஹி ஹி ..


நேசங்களுடன்
ஜீவானந்தம்

11 comments:

 1. அப்ப இப்பத்தான் விஸ்டம் வருதுன்னு சொல்லுங்க :)....நல்ல அறிவுரைப் பதிவு. எனக்கும் ஒரு பல் மருத்துவர் கூறினார் ஒரு பல்லைப் பிடுங்கும்போது வேரிலிருந்து பிரிவதால் அனைத்துப் பற்களுமே அதன் வலு குறைவது சாத்தியம் என்று. அதனால் வருமுன் காத்தல் நலம்.

  ReplyDelete
 2. பல்லு பிடுஙகின அனுபவம் ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு - எங்களுக்கு. வலியும் பட்டு. பணமும் தொலைச்சு... ரொம்ப கஷ்டப்பட்ருப்பீங்க இல்ல... (அனுபவம் பேசுது)

  ReplyDelete
 3. மே‌ல் ப‌ல்லை‌ப் பிடு‌ங்கவே‌ கூடாது. ஏ‌ன் எ‌னி‌ல் மே‌ல் ப‌ல் நேரடியாக மூளையுட‌ன் தொட‌ர்பு ‌கொ‌ண்டிரு‌ப்பதாகு‌ம்.// நம்மளுக்கு எதுக்கு பாஸ் இல்லாததை பத்தின கவலை எல்லாம்.... :-)

  ReplyDelete
 4. கொஞ்சம் சிரமம் அல்ல... ரொம்பவே சிரமம்...

  விளக்கங்களுக்கு நன்றி...
  tm2

  ReplyDelete
 5. அம்மணிங்க...ஒரு வழியா சிங்கத்தோட பல்ல புடுங்கிடாங்க.

  ReplyDelete
 6. //.கீ‌ழ்‌ப் ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கினாலு‌ம் மே‌ல் ப‌ல்லை‌ப் பிடு‌ங்கவே‌ கூடாது. ஏ‌ன் எ‌னி‌ல் மே‌ல் ப‌ல் நேரடியாக மூளையுட‌ன் தொட‌ர்பு ‌கொ‌ண்டிரு‌ப்பதாகு‌ம்//

  மாப்ளே இது எல்லாம் நல்லதுக்கில்ல மேல மூணு பல்ல புடுங்கி ஆண்டு பல ஆகிவிட்டது க்கும்...எனக்கு

  ReplyDelete
 7. எனக்கு இப்ப பல்வலி. சாயந்திரம் டாக்டர் கிட்ட போயே ஆகணும்.

  ReplyDelete
 8. எல்லாம் நம்ம நேரம்...

  ஒ! இதுதான் கோவை நேரமா..


  இன்னைக்கு சாயந்திரம் எனக்கு பல் பிடுங்கும் வைபவம்!

  ReplyDelete
 9. பல் வலியிலேயும் பதிவு போட்டிருக்கீங்களே உங்க நேர்மையை கண்டு நான் வியக்கேன் !

  ReplyDelete
 10. வலியிலும் கிளுகிளுப்பு......
  ரெண்டு நாள் கழிச்சு டெஸ்ட்டுன்னு மறுபடியும் போயிட்டு வழிய போறீங்க...

  அதுக்கும் தனி பதிவு போடவும் மச்சி.

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....