Fun republic
கோவையில் பீளமேடு
அருகே புதிதாக தோன்றி இருக்கும் இன்னொரு ஒரு ஷாப்பிங் மால்.இதன் உள் கட்டமைப்பு வட்ட
வடிவில் நன்றாக இருக்கிறது.அனைத்தும் கண்ணாடியால் அமைக்கப்பட்டு
இருக்கிறது. மொத்தம் நான்கு ஃப்ளோர்கள் இருக்கின்றன.பெரும்பாலான கடைகள் இப்போதுதான்
நிர்மாணித்துக்கொண்டு வருகின்றன.அதிகம் ரிலையன்ஸ் மார்ட் இருக்கிறது.
மல்டிஃப்ளெக்ஸ்
தியேட்டரில் மொத்தம் ஐந்து ஸ்கிரீன்கள் இருக்கின்றன.
தியேட்டர் துல்லியம்
நன்றாக இருக்கிறது.அப்புறம் ஆன்லைனில் டிக்கட் புக் பண்ணி செல்லும்போது ஏகப்பட்ட
பார்மாலிட்டிஸ் செய்கிறார்கள். அதுவே நேரம் விரையம் ஆகிறது.
அதுபோலவே ஃபுட்
கோர்ட்.. குறைந்த கடைகள்...நிறைந்த விலை...ரொம்ப அதிகமாத்தான் இருக்கு.இங்கும்
ஸ்மார்ட் கார்டு வசதிதான்.கார்டில் பணம் ஃபில் ஆனதுக்கு அப்புறம் தான் ஆர்டர்
செய்ய வேண்டி இருக்கிறது...சத்தியமா பசிக்கு சாப்பிடறவன் இங்கு செல்ல மாட்டான். கடலை
போட சரியான இடம் இதுதான்.
எப்பவும் போல
அம்மணிகள் கூட்டம் இருக்கிறது.ஹோப்ஸ் காலேஜ் அம்மணிகள் அனைத்தும் இங்குதான் சுற்றி
திரிகின்றனர்.இந்த ரோட்டிலே நிறைய காலேஜ் இருப்பதால் அதிகம் அம்மணிகளை காண
முடிகிறது..கூடவே மலர் தேடும் வண்டுகளும்... ஒவ்வொரு ஃப்ளோர்லயும் போடப்பட்டு இருக்குற
சேர்களில் அவர்களின் ஆக்கிரமப்பு அதிகமாகவே இருக்கிறது.அவ்வப்போது கடந்து செல்லும்
ஆடவர்களின் மனதிலும் பெரும் ஆக்கிரமிப்பை உருவாக்குகின்றனர்.ம்ம்ம்ம்ம்...
ஹோப்ஸ் ரோட்டிலே
சுற்றித்திரிந்த அம்மணிகளுக்கு ஒரு குடை இது.....
கார் பார்க்கிங் இருக்கிறது.அதற்கும் காசு தான்.இன்னும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது.கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு நாலு மணி நேரம் கழித்து பார்த்தால் காரின் நிறம் மாறி இருப்பது உறுதி..அவ்ளோ புழுதி....
ஏற்கனவே ப்ருக்ஃபீல்ட்ஸ் எனும் மால் ஐ பிரமாண்டமாய் பார்த்த்தினால் என்னவோ அதிகம்
ஈர்க்கவில்லை.அதுவுமில்லாமல் டிராஃபிக்கில் அவ்ளோ தூரம் செல்ல வேண்டி இருக்கிறது.அந்த
பகுதி மக்களுக்கு இது ஓகே.
காந்திபுரத்தில் இருந்து பீளமேடு ஹோப்ஸ் செல்லும் வழியில் இருக்கிறது.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
நல்ல அனுபவ பகிர்வு //சத்தியமா பசிக்கு சாப்பிடறவன் இங்கு செல்ல மாட்டான். கடலை போட சரியான இடம் இதுதான்.// அருமை நண்பா
ReplyDeleteஇவங்களுக்கு கரண்ட் எங்க இருந்து கெடைக்குதுன்னு போராட்டம் பண்ண யாரும் கிளம்பலியா???
ReplyDeleteஎங்கும் அம்மணிகள் - நல்லது நண்பரே...
ReplyDeleteஏதோ window shopping அவ்வளவுதான் இல்லையா ஜீவா... பார்ப்போம்
ReplyDeleteம்.. படங்கள் அருமை மச்சி..
ReplyDelete