Friday, November 2, 2012

சந்தித்த நாள் - 29.10.1999 - மலரும் நினைவுகள்

 29 .10 .1999  - 29.10.2012
 இந்த இனிய நாளில் என் இனிய நினைவுகளை பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.கடந்த கால சுவடுகளை பார்க்கிற போது நம்மையும் அறியாமல் ஒரு வித ஈர்ப்பு வரும் அப்படிதான் இந்த கவிதையும்...

பொக்கிஷமா வச்சிக்கிட்டு இருந்த ஒரு பையினுள் துழாவியபோது கிடைத்த கணம்  ரொம்ப அருமை .. (சரி நமக்கும் பதிவ தேத்த ஒரு விஷயம் கிடைத்து விட்டது என்ற சந்தோசம்தான் )
படிக்கிற காலத்துல கடித தொடர்பால் ஏற்பட்டது எங்க காதல்.அப்போ வெறும் கடிதம் தான்.முகம் தெரியாமலே இருவரும் காதல் கொண்டோம்.1997  இல் கடித தொடர்பு ஆரம்பித்து 1999 இல்  பார்க்கலாம் என்று முடிவெடுத்து சேலம் பேருந்து நிலையத்தில் முதல் முறையாக இருவரும் சந்தித்து கொண்டோம் .அப்போது ஏற்பட்ட எனது மனநிலையினை கவிதை என்ற பெயரில் வடித்த வரிகள்.
 

 29 .10 .1999

உள்ளங்களை பரிமாற்றி
உயிர்களில் கலந்தவர்கள்
இன்று
விழிகளை சந்தித்த நாள்...

முக்கனிகளுள்
முக்கியத்துவம் பெற்ற
மாங்கனிக்கு பெயர் போன
சேலம் மாநகரம்
எந்தன் இதயக்கனியை
தொலைத்துவிட்ட இடம்
பரபரப்பு மிக்க
பேருந்து நிலையம்...

எத்தனையோ பேர்க்கு நடுவில்
எதிர்பார்ப்புடன்
என்னவளை
எதிர் நோக்கிக்
காத்திருந்தேன்....

அவளா....
இவளா... என்று
இனிதே
இதயத்தினுள்....
நடுக்கத்துடன்
சிறு கலக்கத்துடன்....

என்னையுமறியாமல்
என்னுள்
ஏதோ மாற்றம்....

பணிப்பெண்களுக்கு
இடையில் வரும்
இளவரசியாய்....
விண்மீன் கூட்டங்களுக்கு
இடையில் வரும்
ஒற்றை நிலவாய்
அவள்....

அந்தி நிறத்து
கூந்தலைக் கொண்ட
தேவதையாய்
அவள்...

மை தீட்டும்
மலர் விழிகளுக்கு
மெருகூட்டுவதாய்
அமைந்த கண்ணாடியுடன்
அவள்...

பருவமெய்திய
பாலினும் வெண்மையவள்
பக்கத்தில் வந்தபோது
பனியின் குளிர்ச்சி
பரவசத்துடன்
பதில் கேட்டேன்
மஹாவா..?  என்று

அவளின்
செவ்விதழ்களில்
செந்தேன் மட்டுமல்ல
இன்னிசையும்
இனிதாய் வரும்
என்பதனை
அவளின்
"ஆம்" இல்
அறிந்து கொண்டேன்
இருவரும்
பேச மறந்து
சிலைஆனோம்

இரு ஜோடி விழிகளின்
பார்வையில்
இதயங்கள் பேசினாலும்
அதரங்கள்
அசையவில்லை
ஆயினும்
சூழ்நிலை உணர்ந்து
மௌனத்தை கலைத்தோம்

இந்த நாள்....
நெஞ்சில் நிறைந்தவள்
இன்று
விழிகளுக்கு
விருந்தளித்த நாள்....

கனவில் மட்டுமே
வந்து போனவள்
இன்று
கண்களுக்கு
காட்சியளித்த நாள்

கடிதங்களிலே
காதல் மணம்
வீசியவளின்
பூமுகம்
பார்த்த  நாள்

முகங் காணாது
ஏற்பட்ட காதலின்
முடிவாய்
இன்று
முகம் பார்த்த  நாள்...

நிழலை மட்டுமே
நேசித்த நான்
இன்று
நிஜத்தை கண்ட நாள்

நித்திரையில்
நித்தமும் வந்தவள்
இன்று
நேரில் வந்த நாள்...

வார்த்தைகளாய்
படித்த உன் குரலை
வசந்த கீதமாய்
கேட்ட  நாள்....

எனக்குள்ளே
உருவகித்து இருந்த
உருவத்தை
இன்று
உணர்ந்த நாள்...

உன்
நினைவுகளில்
நலிந்து போனவன்
இன்று
நலமான நாள்...

இதயத்தில்
தொடங்கிய காதல்
இன்று
விழிகளில்
வழிந்த நாள்...

காதல் வரம் கேட்டு
காத்திருந்தவனுக்கு
இன்று
தேவதையின்
தரிசனம்
கிடைத்த நாள்...

இந்த நாள்
என்
வாழ் நாளில் மீப்பெரு
வசந்தத்தை
வருவித்த நாள்...

இந்த காதல்
இனிமையாய்
நிறைவேற
ஆண்டவனை
இனிதே பிரார்த்திக்கின்றேன்...

இப்படி எழுதி என்னவளுக்கு வாழ்த்துக்களை சொன்னேன்.
 
 

கிசுகிசு  :
எப்படியெல்லாம் ஐஸ் வச்சி கவுத்தி இருக்கேன்னு பாருங்க ... இப்போ இப்படி எல்லாம் சொல்ல முடியுமா.....அதான் கல்யாணம் பண்ணியாச்சே ..ஹி ஹி ஹி 
 
நேசங்களுடன்
ஜீவானந்தம்.
 

21 comments:

  1. machi.... kavithai super......

    கிசுகிசு :
    எப்படியெல்லாம் ஐஸ் வச்சி கவுத்தி இருக்கேன்னு பாருங்க ... இப்போ இப்படி எல்லாம் சொல்ல முடியுமா.....அதான் கல்யாணம் பண்ணியாச்சே ..ஹி ஹி ஹி ////
    ippo vera maathiri kavithai sollu..

    ReplyDelete
  2. வரிகள் சூப்பர்ப்...

    கல்யாணம் ஆகி விட்ட பிறகு சொல்ல வேண்டாம் என்று யார் சொன்னது...?

    இதை விட அதிகம் அல்லவா சொல்லி [கொண்டே] இருக்க வேண்டும்- உங்களின் இன்றைய நிலை மாற... ஹிஹி...

    நன்றி...
    tm1

    ReplyDelete
  3. உனக்குள்ள ஒரு வைரமுத்து உட்கர்ந்திருக்கார்னு இவ்வளவு நாள் தெரியாம போச்சே!!
    உன்னை பேஸ்புக்ல மொக்கை கவிதைகள் மட்டும் தான் எழுதுவேன்னு நினைச்சேன்.. நீ மொகலாய சக்கரவர்த்தி ரேஞ்சுக்கு வார்த்தையில தாஜ்மஹாலே கட்டியிருக்கே..

    பின்னி எடுத்திருக்கே மச்சான்.. கலக்கல் கவிதை.. இன்னும் பல வெளிவரும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..

    ReplyDelete
  4. உங்களுக்கு கல்யாணம் ஆகலைன்னு இல்ல ஊர்ல பல பேர் நினைச்சிக்கிட்டு இருக்காங்க. இப்படி போட்டு
    உடைச்சிடீங்கலே :)

    ReplyDelete
  5. காதல் கோட்டை அஜித், தேவயானி நீங்கதானா...? கவிதை சூப்பர்!

    ReplyDelete
  6. கல்யாணம் ஆகிட்டா மட்டும் கவிதை சொல்ல கூடாது என்று ஏதாவது இருக்கா பாஸ்....இப்ப கூட இதே மாதிரி சூப்பர் கவிதை சொல்லி அக்காவை அசத்துங்க...
    கவிதை சூப்பர்.... :):)

    ReplyDelete
  7. அடாடா... நண்பர் மோகனகுமார் சொன்ன மாதிரி நீங்க பிரம்மச்சாரின்னுல்ல நினைச்சிட்டிருந்தேன் ஜீவா... அழகா கவிதை எழுதிக் காதலிச்சு (கவுத்து) கல்யாணமும் ஆயிடுச்சா... வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.

    ReplyDelete
  8. நல்ல கவிதை ! நீங்க இவளவு நல்ல கவிதை எழுதுவீங்க அப்படின்னு எனக்கு தெரியாம போச்சே ! உங்க கற்பனை வளம் அபாரம் ! தொடர வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  9. கல்யாணம் ஆயிடுச்சா சார்?

    சொல்லவே இல்ல?

    ReplyDelete
  10. adada...
    உன்
    நினைவுகளில்
    நலிந்து போனவன்
    இன்று
    நலமான நாள்...

    super da...but i don't remember this diary page in your life???smuggled?

    -madhan

    ReplyDelete
  11. காதல் கோட்டை மட்டுமல்ல கவிதை கோட்டையும் கட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் ஜீவா..கிசு கிசு ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  13. நல்லா இருக்குங்க நாள் கவிதை. அந்தப் பக்கம் கல்யாணம் இந்தப் பக்கம் காதல்னு எழுதினா தப்போ?

    ReplyDelete
  14. பணிப்பெண்களுக்கு
    இடையில் வரும்
    இளவரசியாய்....
    விண்மீன் கூட்டங்களுக்கு
    இடையில் வரும்
    ஒற்றை நிலவாய்
    அவள்....

    அந்தி நிறத்து
    கூந்தலைக் கொண்ட
    தேவதையாய்
    அவள்...

    மை தீட்டும்
    மலர் விழிகளுக்கு
    மெருகூட்டுவதாய்
    அமைந்த கண்ணாடியுடன்
    அவள்...

    பருவமெய்திய
    பாலினும் வெண்மையவள்
    பக்கத்தில் வந்தபோது
    பனியின் குளிர்ச்சி
    பரவசத்துடன்
    பதில் கேட்டேன்
    மஹாவா..?
    = நல்ல உவமைகள், அருமை கோவை

    ReplyDelete
  15. என்னப்பா முக நூல் கவிதைகளைப் பார்த்து எதோ நம்மால் முடிந்த சாகசம் செய்து காதல் ஜோடியை சேர்த்து வைப்போம்னு நினைச்சா இப்படி பொசுக்குன்னு கல்யாணம் ஆயிடுச்சின்னு சொல்லிட்டீங்களே ஜீவா. எங்கள் வீரமான உள்ளங்களுக்கு வேலையில்லைன்னு சொல்லீட்டிங்களே.

    எப்படியோ,

    நாங்கல்லாம் அப்பவே அப்படின்னு புரிய வெச்சுட்டீங்க

    ReplyDelete
  16. ரசிகனே காதலன்...
    காதலனே கவிஞன்!

    ReplyDelete
  17. மாப்ள...











































































    மாப்ளே.........

    ReplyDelete
  18. காதல் வந்தாலே கவிதையும் வந்து விடுகிறது வாழ்த்துக்கள் நண்பா கடைசிவரை காதலுடன் கைகோர்க்க காதல் தம்பதியினர் இருவருக்கும்

    ReplyDelete
  19. Your guests really are having fun surrounding sole wardrobe when it
    comes to famous Extremely Mountain relics including Elton John's hand-painted grand piano, Tommy Lee's Motley
    Crue jewelry floor space yacht item of clothing, Gene Simmons' fashionable guitar floor and as a consequence Sammy Hagar's 1926 hot rod.
    This particular Breville 5 piece toaster oven is often one other popular program.
    Absolute best Stove Detergents prize effectively Most advantageous stove laundering equipment because of Reliable Housekeeping Start along
    with Ovenpride 4 . well liked at registered users towards Mumsnet.


    Here is my site - cuisinart compact toaster oven broiler ()

    ReplyDelete
  20. All recipe ingredients can be a micro plate, well suited for a new toaster oven.
    Effective added considerably food prep and fewer locations.

    A connected Tracking accounts tells of every thief predatory through build internet sites near Carolina so,
    who uploaded down the length of his suv consisting of
    high priced air conditioning equipment can. Which our buffs are
    utilized to produce the home that particular elements the actual surplus good water
    away from fossil fuel, coming out from useable, dry up coal.
    As precision-masking goes, tiny microsoft windows (just about
    Zero.005 inches in diameter) are typical looked at inside the
    base to emitter sectors of you see, the transistor for the provision of have access in order for electrician currents.


    Here is my web-site; restaurant convection oven reviews ()

    ReplyDelete
  21. That is very interesting, You are a very professional blogger.
    I've joined your rss feed and sit up for in the
    hunt for more of your wonderful post. Also, I've shared your site in my social networks

    my page; the best toaster ovens reviews; ,

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....