Monday, November 5, 2012

வெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ்,மலேசியா - 1

Genting Highlands, Malaysia :
பத்துமலை முருகனை தரிசித்து விட்டு அடுத்து சென்ற இடம் ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ்.மலேசியா கோலாலம்பூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் மலைப்பிரதேச நகரமாக இருக்கிறது.வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை, கண்ணுக்கெட்டும் தூரம் வரை பசுமை, இனிய மழைச் சாரல் என இந்த இடத்தை அடையும் வரை இனிமையாக இருக்கிறது.இந்திர லோகத்து சொர்க்கத்தை அங்கு சென்றவுடன் தான் கண்டேன்.ரம்பை, ஊர்வசி, மேனகை என பல்வேறு தேசத்து அம்மணிகள்....
ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ் இது ஒரு தீம் பார்க்.மேகம் தழுவும் ஓங்கியுயர்ந்த கட்டிடங்கள், கண்ணைக் கவரும் அம்மணிகள்..சாரி....ஒளி விளக்குகள், பொழுது போக்கு அம்சங்கள், ஹோட்டல்கள், கேஎஃப்சி, மெக் டொனால்ட்ஸ், பீட்சா ஹட் போன்ற  பிரபல கடைகள், ஷாப்பிங் செய்ய கடைகள், சினிமா தியேட்டர் என ஒரே கூரையின் கீழ் அத்தனை வசதிகளும் என பார்க்க பார்க்க பிரமிப்பூட்டுகிறது.


அங்கே தங்கி இருந்ததால் ஒரு சில விளையாட்டுகள் தவிர அத்தனையும் ப்ரீ.இங்கே செல்ல நம் கையில் ஒரு பேண்ட் கட்டி விடுகின்றனர்.அதை காட்டி அரங்கினுள் இருக்கும் அத்தனை கேம்ஸ்களும் விளையாடலாம்.4D சினிமா காட்சி, சிறுவர்களுக்கு பெரியவர்களுக்கு மோனோ ரயில், பிளையிங் கோஸ்டர், போட்டிங் என நிறைய விளையாட்டுகள், உள்ளே வெளியே என கிட்டதட்ட 39 கேம்ஸ் இருக்கின்றன.ஜாலியாய் கொண்டாடலாம்.அரங்கினுள் உள்ளே இருக்கும் அனைத்து இடங்களையும்   டிராகன், மினி ரயில்  மூலம் சுற்றிப்பார்க்க நன்றாக இருக்கிறது.உள் அரங்கு முழுவதும் பொழுது போக்கு அம்சங்களாக இருக்கின்றன..அமெரிக்கா சுதந்திர தேவி சிலை, ஈபிள் டவர் என உலக அதிசயங்கள் மெனியேச்சராக (மினி ன்னா ரொம்ப சின்னது...இங்க கொஞ்சம் பெருசாவே இருக்கு...) இருக்கின்றன.
 
 

அப்புறம் ரொம்ப முக்கியமானது ஒன்று இருக்கிறது..அது கேசினோ....
அங்கேயும் அம்மணிகளின் ராஜ்ஜியம்.முகத்தில் அழகும் கையில் புகையுமாய் மிக கவர்ச்சியாய்...பணத்தை இழப்பதற்கென்றே அமைக்க பட்ட சூதாட்ட விடுதி மிக சூப்பராக இருக்கிறது. நானும் ஆர்வ கோளாறில் விளையாட ஜெயிப்பது போல் ஜெயித்து பின் இழந்தேன் பல டாலர்களை. அப்புறம் அங்கே இருந்தால் இருப்பதற்கும் உலை வைத்து விடுவர் என்று எண்ணி சீக்கிரமாய் வெளியேறி அம்மணிகளின் அழகில் மனதை இழந்து மெய் மறந்து போனேன்.
உள்ளே இருந்தால்
இழப்பது பணம்
அதுவே
வெளியில் இருந்தால்
இழப்பது மனம்........ஆகா...அடுத்த டி.ஆர் நான்தான்...

விடிய விடிய கூத்தும் கும்மாளமுமாக செல்கிறது இந்த ஹை லேண்டில்.. இது ஒரு சொர்க்கம் என்றே சொல்லலாம்.மனதிற்கும் கண்ணிற்கும் குளிர்ச்சியை தருகிறது.

இருங்க இன்னும் இருக்கு......

நேசங்களுடன்
ஜீவானந்தம்
  

9 comments:

  1. கெண்டிங் ஹைலேண்ட் போகும்போது ‘விஞ்சில்’ போக வேண்டும்.
    அல்லது அம்மணி மடியில் உட்கார்ந்து காரில் போக வேண்டும்.

    அப்போதுதான்...
    சொர்க்கத்துக்கு மிதந்து போகும் திரில்
    கிடைக்கும்.

    நீங்கள் எப்படி போனீர்கள்?

    ReplyDelete
  2. கண்ணை கவரும் படங்கள்...

    நன்றி...
    tm1

    ReplyDelete
  3. //கெண்டிங் ஹைலேண்ட் போகும்போது ‘விஞ்சில்’ போக வேண்டும்.
    அல்லது அம்மணி மடியில் உட்கார்ந்து காரில் போக வேண்டும்.//

    அடடே..!

    ReplyDelete
  4. பத்துமலை முருகனை தரிசித்து விட்டு அடுத்து சென்ற இடம் ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ்
    >>
    இந்திர லோகத்து சொர்க்கத்தை அங்கு சென்றவுடன் தான் கண்டேன்.ரம்பை, ஊர்வசி, மேனகை என பல்வேறு தேசத்து அம்மணிகள்....
    >>>>

    முருகனை தரிசனம் பண்ணியதும் சொர்க்கம் கிடைச்சிடுச்சு போல..

    ReplyDelete
  5. மாப்ளே, அம்மணிகளைப் பற்றிய தகவல்கள் இந்த பதிவில் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என எதிர்பார்த்து ஏமாந்தோம்..

    ReplyDelete
  6. வெளி ஊர்//நாட்டுப் பயணங்கள் ...நம்மை உற்சாகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இன்னும் நிறைய சாதிக்க / சம்பாதிக்க வேண்டும் என்னும் உந்துதலையும் அளிக்க வல்லது!

    ReplyDelete
  7. படங்கள் மிக அருமை.....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete
  8. 'ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ்' படங்கள் நன்றாக இருக்கின்றன.

    ReplyDelete
  9. ஒரு சில விளையாட்டுகள் தவிர அத்தனையும் ப்ரீ.இங்கே செல்ல நம் கையில் ஒரு பேண்ட் கட்டி விடுகின்றனர்// இப்படியெல்லாம் ஆசையை மூட்டக்கூடாது. கையில் கட்டியிருக்கின்ற ரிப்பனுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்களாக்கும்..! :)

    ஜெண்டிங் இல்லை கெந்திங் ஹைலண்ட்ஸ். `கெந்திங்’ என்பது மலாய் வார்த்தை, அதன் அர்த்தம் அபாயகரமான/சிக்கலான/பரபரப்பான/திகிலான. `ஹைலண்ட்ஸ்’ என்பது ஆங்கிலச்சொல், அர்த்தம் மலைக்குன்று. இரண்டையும் ஒன்றாகச்சேர்த்தால், அபாயகரமான மலைக்குன்று. ஆம், ஆரம்பத்தில் அடிக்கடி நிலச்சரிவுகள் நிகழும் இங்கே. இப்போது குறைவுதான். கவலை வேண்டாம். வாங்க வாங்க ஒருமுறை வந்து பாருங்க.
    அம்மணிகள் அழகா..? யாரு?? சீனப்பெண்கள், ரிட்டயர் ஆன சீனக் கிழவிகள் அதிகமாக உலவுவார்கள் அங்கே...லொள்ளு.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....