நம்ம நண்பர் திருமணத்திற்காக திருப்பூர்ல ரயில்வே ஸ்டேசன் அருகே தங்கி
இருந்தோம். அப்போ மதியம் எங்காவது ஒரு ஹோட்டலுக்கு போலாம் அப்படின்னு
முடிவு பண்ணி பொடி நடையா குமரன் ரோட்டுல நடந்து போய்ட்டு இருக்கும் போது
கண்ணுல பசுமையா பட்ட போர்டு ஹனிபா ஹோட்டல்....பேரை பார்க்கும் போதே இது
தேறும் என்பது தோணியதால் உள்ளே நுழைந்தோம்....
சின்ன கடைதான்...மூணு மணி மேல் ஆகிவிட்டது ஆயினும் நிறைய பேர் சாப்பிட்டு
கொண்டு இருந்தனர்.நமக்கு தோதான இடத்தை ஆக்ரமித்து கொண்டு என்ன இருக்கிறது
என கேட்க, பிரியாணி அப்புறம் சிக்கன் 65 தான் இருக்கிறது மற்ற அனைத்தும்
முடிந்து விட்டது என சொல்ல கொஞ்சம் வருத்தப்பட்டு தான் போனோம்...சரி
இருக்கிறதை சாப்பிடுவோம் என பிரியாணி, சிக்கன் சொன்னோம்..ஒவ்வொரு
டேபிளிலும் தண்ணீர் வைத்து இருக்கின்றனர்.கூடவே பச்சை கலராய் ஒரு ஜூஸ்
வைத்து இருக்கின்றனர்.சில பேர் ரசித்து ருசித்து குடித்து கொண்டு
இருந்தனர்.என்னவென்று இருக்கும் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு
கொண்டிருக்கும்போதே பிரியாணி கொண்டுவந்தனர்.இலையில் வைத்தவுடன் கொஞ்சம் கூட
பிரியாமல் அப்படியே பிடித்து வைத்த பிள்ளையார் போல இருக்கவே கொஞ்சம் டவுட்
வர ஆரம்பித்தது.எடுத்து சுவைத்ததில் சுத்தமாய் பிரியாணி நன்றாகவே
இல்லை.தக்காளி சாதம் போலவே இருக்கிறது. பாய் கடை என்று தான் உள்ளே நுழைந்தோம்.ஆனால் பிரியாணிக்கான டேஸ்ட் கொஞ்சம் கூட
இல்லை..பசி ருசி அறியாது என்பர்.நமக்கு அந்த
நேரத்தில் கூட எல்லாம் தெரிய வைக்கிறது.
சில்லி சிக்கனும் அது போலதான்.சுவை என்பதே இல்லை..கூட பொறித்த கருவேப்பிலை மட்டும் மொறு மொறு வென்று நன்றாக இருந்தது...
ஆனாலும் இந்த பதிவு எதற்கு என்றால் அந்த பச்சை கலர் ஜூஸ் ...என்னவென்று
கேட்டால் ஹனிபா ஸ்பெசல் ஜூஸ் அப்படின்னு சொன்னார்கள் ......செம டேஸ்ட்...
பச்சை
கலராய் இருக்கிறது.எந்த வித பழங்கள் என்று தெரியவில்லை.மிக நன்றாக
இருக்கிறது.ஐந்து வித பழங்கள் கலந்த ஜூஸ் என்று சர்வர்
சொன்னார்...அம்புட்டு டேஸ்ட்... பிரியாணி மற்றும் சிக்கன் சுவைகளை இது
தூக்கி நிறுத்தி விட்டது...
நான் இரண்டு கிளாஸ் வாங்கி ரசித்து ருசித்து குடித்தேன் அதுபோலவே நண்பர்கள் அனைவரும் விரும்பி குடித்தனர்.இதிலும் ஃபுல், ஆப்
என்று தருகிறார்கள்.(சும்மா இருந்தாலும் ஞாபகபடுத்தி
விடுகிறார்கள்....).விலை 25 ரூபாய்...இதை சாப்பிடவே இங்கு போலாம்..மற்றவை உங்களின் விருப்பம்..
பிரியாணி மட்டும் சாப்பிட்டு இருக்கிறேன்.மற்ற எதுவும் சாப்பிடாததால் அவைகளை பத்தி நோ கமெண்ட்ஸ்..பிரியாணி சுமார் தான்..விலை கொஞ்சம் அந்த ஊருக்கு அதிகம் தான்.இரண்டு பிரியாணி, ஒரு சில்லி, ஜூஸ் சாப்பிட்டது என மொத்தம் 311 ரூபாய்.அந்தபக்கம் போறவங்க ட்ரை பண்ணி பாருங்க...மறக்காமல் அந்த ஹனிபா ஸ்பெசல் ...
திருப்பூர் குமரன் ரோட்டில் கரூர் வைஸ்யா பேங்க் அருகில் இருக்கிறது...நேசங்களுடன்
ஜீவானந்தம்
சின்ன கடைதான்...மூணு மணி மேல் ஆகிவிட்டது //
ReplyDeleteஆமா ஆமா "அங்கே" போயிட்டு வாரத்துக்கு லேட்டாகிடுச்சு.
மனோ//// எங்க மாம்ஸ் போய்ட்டு வர லேட் ஆச்சு.....?
ReplyDeleteபிரியாணிய பார்த்ததும்...
ReplyDeleteநாக்கில எச்சில் ஊறுது .....
விட்டுட்டு போயிட்டியே மாப்ஸ்..!
ReplyDeleteவாவ்... படங்கள் சூப்பர்...!
ReplyDeletetm2
@கோவை ஆவி
ReplyDelete///விட்டுட்டு போயிட்டியே மாப்ஸ்..!///
அய்யப்பனுக்கு மாலை போட்டுட்டு போடற கமெண்டா இது!
சாமியேய் சரணம் அய்யப்பா !
ம்ம்ம்...
ReplyDeleteok ok
ReplyDelete//கோவை நேரம் said...
ReplyDeleteமனோ//// எங்க மாம்ஸ் போய்ட்டு வர லேட் ஆச்சு.....? //
ஷ்...யபா...மாப்ளே வாணாம் அழுதுடுவேன்
ஆள் ஆளுக்கு பிரியானி படத்த பார்துடே வாய் பிளக்குராங்கலே ....படத்த பார்த்தாலே சுவை தெரிந்து விட்டது சுவை மட்டம்னு.குஸ்க ரேஜ்சு வரவே தயங்குது படம். நல்ல வேலை ஒரு எச்சரிக்கை பதிவை வெளியிட்டதிற்கு.
ReplyDeletejeeva we r regular visitors to haneefa,mutton biriyani nalla irukkum but 1.30 ku ellam kali aayidum, neenga sonnathupola price ippo romba jaasti akkitanga,
ReplyDeleteநான் 2012ல சாப்பிட்டது.பிரியாணி நல்லா இருந்தா ஓகே தான்...இன்னொரு தடவை வந்து சாப்பிட்டு பார்க்கனும்
Delete