Thursday, November 1, 2012

பேஸ் புக் கவிதைகள் - 3

எவ்வளவோ  வேலைப் பளு இருந்தாலும் அவளின் நினைவுகளில் நனைவது சுகம்.அவளின் இடைவிடாத நினைவுகளில் நலிந்து போனதால் வந்த கவிதைகள். இதுவும் பேஸ் புக்கில் கிறுக்கியவை... 

பாதுகாக்கப்படுகிறது
பத்திரமாய்
பாவை உன்
நினைவுகள்..
என் இதய சிறையில்..

னதில்
விழுந்த விதையாய்
மங்கையுன் பார்வை
முளைத்தது என்னுள்
காதல் எனும்
செடியாய்.....

லர்ந்து மணம்
வீசிக்கொண்டு இருக்கிறது
மங்கையுன் நினைவுகள்
என்னுள்
மீளா காதலாய்...


நிம்மதியற்று இருக்கும் போது
மெல்ல வருடுகின்றன
நீ விட்டு சென்ற
நினைவுகள்....


விருப்பமுடனே
பயணிக்கிறேன்
வெகுதூரம்
விரும்பியவளின்
நினைவுகளுடன்...

 
ருக்காலும்
மறக்க முடிவதில்லை
ஓயாத
அவள்
நினைவுகளை...

ட்டிப் பிடிக்க
ஆசைப்படுகிறேன்
என் கைகளுக்குள்
நீ இருப்பதை
உணராமலே...

ன் நினைவுகள்
என் நோய் தீர்க்கும்
மருந்தாய்..
நோய் தீரவில்லை.
ஆனாலும்
நோயாளியாகவே இருக்க
விரும்புகிறேன்

நினைக்கவே கூடாது
அவளை
என்றெண்ணியே
நாள் முழுதும்
அவளின் நினைவுகளை
சுமந்து கொண்டிருக்கிறேன்..
புன்னகை சிந்தும்
உன்
புகைப்படம்....
புரிந்து கொள்ள முடியவில்லை
அதற்கான ரகசியத்தை....


னக்குள்   இருக்கும்
கவிஞனின்  உறக்கம்
கலைத்த  பெருமை
உனக்கே  வாய்க்கட்டும்  ............நன்றி.....அவளுக்கு........

 கிசு கிசு: அவள் யாருன்னு கேட்டிடாதீங்க... நம்ம அம்மணி கோச்சுக்கும்......ஹி..ஹி..

முந்தைய நினைவுகள் : பேஸ்புக் கவிதைகள் - 2

நேசங்களுடன்
ஜீவானந்தம்


10 comments:

  1. உயிரை அடுத்து மெய் தொடரும் என எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
  2. அதாவது இப்போது நினைவுகள்..நேரில் சந்திக்கும்போது நிஜங்கள்! அது குறித்து வரைவுகள் வருமா?

    ReplyDelete
  3. நினைவுகள் சுகமானவை என்றும் நெஞ்சில் நிற்பவை
    ரசித்தேன்

    ReplyDelete
  4. அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete


  5. நினைவுகள் நிறைவேறட்டும்.ஆனாலும் கடமைகள் நினைவாகட்டும் .ananthako.blogspot

    ReplyDelete
  6. விருப்பமுடனே
    பயணிக்கிறேன்
    வெகுதூரம்
    விரும்பியவளின்
    நினைவுகளுடன்...
    //

    மொத்த துளிகளில் இந்த ஒத்த துளியில் நெஞ்சம் அதிகம் நிறைகிறது நண்பரே

    ReplyDelete
  7. நண்பா கவிதை நன்றாக இருக்கிறது அர்த்தமுள்ள கவிதைகள் -
    அன்புடன்
    மகேந்திரன்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....