Thursday, November 8, 2012

கோவை மெஸ் - ON THE GO, ரேஸ்கோர்ஸ், கோயம்புத்தூர்.

கோவை மெஸ் - ON THE GO, ரேஸ்கோர்ஸ், கோயம்புத்தூர்.
நம்ம ஊர் ரேஸ்கோர்ஸ்ல  சும்மா சுத்திகிட்டு இருக்கும் போது நண்பர் பயணம் ப்ளாக் ஓனர் ஆவி, இங்க ஒரு ஹோட்டல் இருக்கு..நல்ல செமையா இருக்கும்...வா போலாம்னு சொன்னதால் அங்க....ஆன் தி கோ.
உள்ளே செல்லும் வழியில் பசுமை செடிகள் , மேலிலும் பக்கவாட்டிலும் பசுமை துணி போர்த்தி ஆங்காங்கே  அரை பாட்டிலில் தொங்க விடப்பட்ட செடிகள்...என ரம்மியமாக இருக்கிறது. ஹோட்டல் உள்ளே நல்ல இண்டீரீயர் அமைப்பில் மிக அழகாகவும், மெல்லிய இசையுடன் நன்கு அமைதியாகவும் இருக்கிறது. சுவற்றின் மீது நிறைய கார்ட்டூன் போஸ்டர்கள்...என்ன எழுதி இருக்காங்கன்னு தெரியல...மேல் நாட்டு பாணியில் ஒரு சில நம்மூர் அம்மணிகள் நமக்கு முன்னரே அமர்ந்து இருந்தனர்.கையில் காக்டெயிலும்  நுனி நாக்கில் ஆங்கிலமும்......ரசித்த படியே ...ரசிக்கும் படியாக தோதான இடத்தினை தேர்வு செய்து அமர்ந்தோம்..
 
 
 
 நேபாள் நாட்டு சர்வர் அழகாய் ஆங்கிலத்தில் வினவ, சத்தம் காட்டாமல் அவரிடமிருந்த மெனு கார்டை வாங்கி புரட்ட ஆரம்பித்தேன்.ஒண்ணும் விளங்காததால்  அருகில் இருந்த ஆவி மொழி பெயர்க்க லஞ்ச் காம்போ ஆர்டர் பண்ணினோம்...
சிக்கன் காம்போ ஒன்றும், மீன் காம்போ ஒன்றும் ஆர்டர் பண்ணினோம்...(மெனுவுல பாருங்க...என்னென்னமோ இருக்கு....)
 முதலில் நேபாள் காரர் கொடுத்தது லெமன் ஜூஸ்...அதுக்கப்புறம் வந்தது சிக்கன் கபாஃப், ஃபிஷ் ஃபிரை...இரண்டும் செம டேஸ்ட்..வாயில் வைக்க கரைகிறது அமிர்தமாய்...நல்ல சுவை...ஃபிஷ் ஃபிரை செம.....எப்படித்தான் இப்படி டேஸ்டா செய்கிறார்கள் என ஆச்சரியப்பட வைக்கிறது... கூடவே தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி (சட்னி மாதிரி...)..கொஞ்சம் புளிப்பும், கொஞ்சம் இனிப்பும்...நன்றாய் இருக்கிறது...சிக்கன்,  ஃபிஷ் இரண்டிலும்..மூணே மூணு பீஸ்தான் வைக்கிறார்கள்...கொஞ்சம் வருத்தம் தான்....
அப்புறம் மெயின் கோர்ஸ் வருகிறது..சின்ன கண்ணாடி குவளைகளில் மெனுவில் இருக்கிற அத்தனை அயிட்டமும் (ஹி..ஹி ஹி....மொத்தமே  நாலு வெரைட்டி தான்) வருகிறது...
ஒவ்வொன்றும் ஒரு சுவை....அப்புறம் நான், தந்தூரி ரொட்டி என ஒரு சின்ன கூடையில் மொத்தம் நான்கு எண்ணிக்கையில்.....பொறுமையாய் சாப்பிட்டுக்கொண்டே  நிறைத்து கொண்டு இருந்தோம் வயிறையும்..... ..அவ்வப்பொழுது அம்மணிகளின்அழகில்.....மனதையும்
 
 எல்லாம் முடிந்த பின் மிக வெதுவெதுப்பான நீர் வரவே  கைகழுவ  மனசில்லாமல் கைகழுவினோம்.அப்புறம் ஐஸ்கிரீம் வேறு...ஏற்கனவே ஐஸ்கிரீமாய் அம்மணிகள் இருக்க பிடித்தது அதிகமாய்  இன்னும் ஜலதோசம்... ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு வெளியேறினோம்

மிக நன்றாக இருக்கிறது இந்த ஆன் தி கோ....நல்ல சர்வீஸ், டேஸ்ட் நன்று... அமைதி...முக்கியமாய் அம்மணிகள்....ரேஸ்கோர்ஸ் பத்தி சொல்லவே வேணாம்..அம்புட்டு அழகாய் இருக்கும்...ஒரு ஜோடி வந்து ரொம்ப நேரமா வேற எதுவுமே ஆர்டர் பண்ணாம ஒரே ஒரு ஐஸ்கிரீம் மட்டும் சாப்பிட்டுகிட்டே இருந்தாங்க....எனக்கொரு டவுட்டு வேற... அந்த ஐஸ்கிரீம் ஒரு மணி நேரமா எப்படி உருகாம இருக்கு அப்படின்னு....அப்புறம் அவங்க ஹோட்டல் பத்தி ஒரு சில அபிப்ராயங்கள் கேட்டு ஒரு கார்டு தராங்க...அதில் உங்களின் விருப்பங்களை தெரிவிக்கலாம்... விலை கொஞ்சம் கூடுதல் தான்..ரேஸ்கோர்ஸ்ல இருக்கு வேற...காஸ்ட்லி ஏரியா......எப்பவாவது போனா சாப்பிட்டு பார்க்கலாம்...

இடம் : ரேஸ்கோர்ஸ், போட்டோ சென்டர்  அருகில்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்


11 comments:

 1. காலைலியே வவுரு எரிய வெச்சுட்டீங்களே ஜீவா?!

  ReplyDelete
 2. அம்மிணியையும் சேர்த்து சாப்பிட்டு இருக்கீங்க...
  அப்போ என்னத்தை சாப்பிட்டாலும் டேஸ்டாத்தான் இருக்கும்.

  ReplyDelete
 3. சுமாரா எத்தனை ரூபாய் கொண்டு போகணும்னு சொல்லீருந்தா நல்லா இருக்கும்!

  ReplyDelete
 4. மச்சி- வழக்கம் போல் கலக்கல் போஸ்ட்.. முதல் முறை போன போது எனக்கும் குட்டி பவுல்ல சாப்பாடு கொடுக்கறாங்கலேன்னு யோசிச்சேன்.. ஆனா அதுவே புல்லா இருந்தது..

  மேலும் அங்கே இத்தாலியன் புட்சும் கிடைக்கும்..

  ReplyDelete
 5. //கோவை ஆவி ///

  சார்! தங்களின் பெயர் மிக அருமை...
  இந்தப் பதிவைவிட தங்களின் பெயரை மிகவும் ரசித்தேன்... ஆதலால், தலால்... லால்.... ல்.....

  நன்னி, வணக்கம்!

  ReplyDelete
 6. திரு. சீவா அவர்களுக்கு,

  தங்களின் இந்தப் பதிவில், அம்மனிகளின் படம் போடாததால், புறக்கநிக்கிறேன்!(ஸ்பெல்லிங் மிஸ்டேக் உதவி- தலீவர் ஜாக்கி)

  நன்றி!

  ReplyDelete
 7. எங்கள விட்டுட்டு மீட்டிங் போட்டது நியாயமே இல்லேங்கிறேன் !!

  ReplyDelete
 8. அடுத்த தடவை கூப்பிடறேன்...கலா குமரன் அவர்களே

  ReplyDelete
 9. யோவ்..விளங்காதவன்..ஏன்யா கோர்க்கிற...

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....