Friday, July 26, 2013

கோவை நேரம் - தி நியூ இண்டியன் எக்பிரஸ்,(The New Indian Express ), கோவை

வணக்கமுங்க...
தி நியூ இண்டியன் எக்பிரஸ்ல நம்ம கோவை நேரம் பேட்டி இன்னிக்கு வந்திருக்குங்க...இந்த பேட்டியில் நம்ம போட்டோ போடறதுக்காக என்னை வ உ சி பார்க் வரச்சொன்னாங்க.அங்க என்னை வளைச்சி வளைச்சி போட்டோ எடுத்தாங்க.பார்க் வந்திருந்த ஒரு சில பல நல்ல ஜோடிகளும் கள்ள ஜோடிகளும் வெறிக்க வெறிக்க பார்த்தாங்க.அப்புறம் அங்க இருந்து எஸ்கேப் ஆகி ரேஸ்கோர்ஸ் வர........ எடையை குறைக்க வாக்கிங் போன அம்மணிகளால் நம்ம மனசு ரொம்ப பாரமாகி போனதுங்க.....ஏக்கப் பெருமூச்சுடன் கிளம்பிட்டேனுங்க....
என்னை பேட்டி எடுத்த மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும் என்னை புகைப்படம் எடுத்த கமலக்கண்ணன் அவர்களுக்கும் நன்றி...

இந்தியன் எக்ஸ்பிரஸ் லிங்க்  இங்க போனா படிக்கலாம்

என்னை பதிலுக்கு பதில் ...பழிக்குப்பழி வாங்க பேப்பரில் வந்த விவரத்தினை தன் பதிவில் போட்ட கவிதாயினி க்கு நன்றி

கிசுகிசு : யாராவது இதை ட்ரான்ஸ்லேட் பண்ணினா ரொம்ப புண்ணியமாக போகும்..ஹிஹிஹி...


நேசங்களுடன் 
ஜீவானந்தம்39 comments:

 1. பேட்டிக்கு பின் அந்த பத்திரிகையாளர்கள் தெளிவான மனநிலையோடுதான் போனாங்களா?!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ராஜி,,,,,பின்ன...

   Delete
 2. இங்க வந்துட்டு வாழ்த்தலைன்னா தெய்வ குத்தம் ஆகிட போகுது!! அத்னால, நானும் வாழ்த்திக்குறேனுங்க.

  ReplyDelete
 3. மகிழ்ச்சி ஜீவா..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி கவிஞரே...

   Delete
 4. வாழ்த்துக்கள்...! சென்னையில் சந்திக்கும் போது ட்ரீட் வேண்டும்.... (அனைவருக்கும்...!)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தி.த...கண்டிப்பா...(கும்பலோடு கோவிந்தா போட கூடாது ஹிஹிஹி )

   Delete
 5. கோவை ஜீவா,

  "புதிய இந்திய விரைவு தொடர்வண்டியில்" உங்கள் நேர்காணல் வந்தமைக்கு வாழ்த்துக்கள்!

  உங்க நேர்க்காணலை படிக்க ரயில்வே ஸ்டேஷனுக்கு வேற போகனுமானு நினைச்சு பயந்தேன்,நல்லவேளை இங்கேயே படமா போட்டு ,எளிதாக்கிட்டிங்க :-))

  செல் போன் புதுசா வாங்கினதா? ஐபோன் தானே :-))

  ReplyDelete
  Replies
  1. வாங்க வவ்வால்..உங்க வரூகை மகிழ்ச்சியை தருது...

   செல்போன் பழசு தான்....

   Delete
 6. வாழ்த்துக்கள் நண்பா. . . .மென்மேலும் உம் புகழ் நியுயார்க் டைம்ஸ்,ஃபாக்ஸ் ட்ரேவலர்,போன்றவற்றில் வர வாழ்த்துகிறேன்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பா....கண்டிப்பா யாராவது போட்டா நல்லா இருக்கும்

   Delete
 7. Replies
  1. ஓஹோ...ஆங்கில பேட்டி என்பதால் ஆங்கிலத்தில் தான் சொல்லுவீங்களோ....
   வருகைக்கு நன்றீ வெளங்க்ஸ்

   Delete
 8. வாழ்த்துக்கள் நண்பா...

  ReplyDelete
 9. //சமீபத்திய ஆண்டுகளில், சில நபர்கள் தங்களது ஆக்கத்திறன் மற்றும் இலக்கிய படைப்புகளை எடுத்து. கோயம்புத்தூர் நகரில், Jeevanantham, அதன் 'கோவை Neram உள்ள பதிவுகள் "பரவலாக வாசிக்க ஒரு பிரபல பதிவர், ஒரு புத்தக வடிவில் அவரது கிடைத்தது வெளியே கொண்டு. தமிழ்நாடு முழுவதும் கோவில்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் தான் 35 வயதான கிடைத்தது ஒப்பந்தம்.//

  கூகுள்ல டிரான்ஸ்லேட் பண்ணா இப்படித்தான் வருது...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நண்பரே...
   ஹிஹிஹி...ஒரே காமெடி போங்க ...

   Delete
 10. Very nice to see you in city express.
  It is very proud to me that i am one of the oldest ( in the terms of years) friend of you and more than your Blog reader.
  i don't know how to express my happiness.
  It is not a easy joke that putting hobbies Happiness sharing into the blog and make other to see and comment on it.There is something special on your writings for which the people come closer to you.
  my best regards to reach more heights.

  Mahendran. G .R

  ReplyDelete
  Replies
  1. மகேந்திரன் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி...
   அதுக்குன்னு இப்படியா தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்லீசுல பேசுவ...
   இதை வேற டிரான்ஸ்லேட் பண்ணனும் தனியா...ஹிஹிஹி

   Delete
 11. வாழ்த்துக்கள்.....


  எந்த சினிமா தயாரிப்பாளராவது உங்கள் போட்டோவை பார்த்தால் நீங்கள் தான் புதிய படத்தின் கதாநாயகன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே...
   உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்.ஒருத்தர் சான்ஸ் தரேன்னு சொல்லி இருக்கார்..பார்ப்போம்...

   Delete
 12. மென்மேலும் பல புத்தகங்களை வெளியிட்டு இலக்கிய உலகில் சாதனை படைக்க என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. Replies
  1. ரொம்ப நன்றி வெங்கட் நாகராஜ் சார்

   Delete

 14. கிசுகிசு : யாராவது இதை ட்ரான்ஸ்லேட் பண்ணினா ரொம்ப புண்ணியமாக போகும்..ஹிஹிஹி...
  ///
  ஆமாமா ஹிஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. என்னா ஒரு சந்தோசம்...
   ரொம்ப நன்றி கோகுல்...

   Delete
 15. வாழ்த்துகள் ஜீவா

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....