Thursday, July 18, 2013

கோவை மெஸ் – பர்மா பாய் கடை, நேரு ஸ்டேடியம், கோவை

நேத்து காந்திபுரத்துல இருந்த போது நஸ்ரியாவின் தீவிர ரசிகரும், கோவை மாவட்ட ரசிகர் மன்ற தலைவரும், அவ்வப்போது ஆவிப்பா எழுதி அடுத்தவங்களை குளிர் காய்ச்சல் பட வைக்கிறவருமான கோவை ஆவி அவர்களிடமிருந்து போன்.சென்னையில் இருந்து கவியாழி கண்ணதாசன் அவர்கள் வர்றார் அப்படின்னு...சரி எங்காவது மீட் பண்ணலாம் அப்படின்னு ப்ளான் போட்டு உலக சினிமாரசிகன் அவர்களையும் வரச்சொல்லி அழைப்பு விடுத்தேன்....அவரும் அனுஷ்காவில் பறந்தோடி வந்தார்.அதற்குள் ஆவியும் கவியும் வந்து விட கோவை வ.உ.சி பார்க்கில் சந்தித்தோம்.  
அவர் வந்திறங்கிய நேரம் பசி நேரம் ஆதலால் சாப்பிட்டுக்கொண்டே பேசலாமே என்று முடிவெடுத்து போன இடம் பர்மா பாய் கடை..இந்த கடை புரோட்டாவிற்கும் பிரியாணிக்கும் பேமசான கடை...எந்த நேரத்தில் போனாலும் சூடான புரோட்டா கிடைக்கும்...(அதுக்குன்னு நடுராத்திரி போயிடாதீங்க).அதுக்கு மேட்சான குருமா கிடைக்கும்..
கடையில் தற்போது வாஸ்து படி ஒரு சில மாற்றங்களை செய்து இருக்கிறார்கள்..முன்பு கடைக்குள் நுழையும் முன்பே சுட சுட புரோட்டா போட்டு கொண்டு இருப்பார்கள்.ஆவி அடிக்கும்...இது புரோட்டா ஆவி..அப்புறம் சூடான கல்லு ஆவி.....இப்போது அந்த இடத்தினை ஒரு சின்ன ரூமாக பார்டிசன் பண்ணி உள்ளே தீயா வேலை செய்து கொண்டிருக்கின்றனர் புரோட்டா மாஸ்டர்கள்...புரோட்டா சுடும் காட்சி தெய்வ தரிசனமாக ஆகிவிட்டது இப்போ...
சரி விசயத்திற்கு வருவோம்...நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஓரிரு அம்மணிகளும் வெளியேறியது மிக வருத்தமாக இருந்தது.எனினும் மனதை சாந்தப்படுத்திக்கொண்டு தோதான இடம் பார்த்து அமர்ந்து கொண்டோம்...
புரோட்டா மற்றும் பெப்பர் சிக்கன் ஆர்டர் பண்ணினோம்..ஒரு சில நிமிடங்களிலேயே ஆவி பறக்க புரோட்டா வந்தது..எடுத்து இலையில் வைக்க பூப்போல இருந்தது.மிக மிருதுவாக..பொல பொலவென்று...தட்டில் வைத்து குருமாவை ஊற்றி ஊறவைத்து கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து சாப்பிட...ஆகா...செம டேஸ்ட்...குருமாவும் புரோட்டாவும் உள்ளே போனதே தெரியவில்லை..ஒரு தட்டு முழுக்க வைத்திருந்த புரோட்டா சீக்கிரம் காலியாக, இன்னொரு பிளேட் ஆர்டர் செய்யப்பட்டது நஸ்ரியாவின் தங்க தலைவனால்.


அதற்குள் பெப்பர் சிக்கன் வரவே அதையும் ஒரு கை.... சாரி ....ஒரு வாய் பார்த்தோம். அதுவும் செம டேஸ்ட்..உதிர்த்து விடப்பட்ட சிக்கன் துண்டுகள் எலும்பில்லாமல் பெப்பர் மணத்துடன் நன்கு சுவையாக இருந்தது.டிரையாக இருந்தாலும் மிக நன்றாக இருந்தது..நான் இந்த பதிவு தேத்த போட்டோ எடுப்பதற்குள் பெப்பர் சிக்கன் காலியானதே தெரியவில்லை..
புரோட்டா பிரியர்கள் நிறைய குவியும் இடம்.அதுபோலவே அம்மணிகளும்.சனி ஞாயிறு கூட்டம் அள்ளும்.அருகிலேயே வ.உ.சி.பார்க் இருப்பதால் எப்பவும் ரஷ் ஆக இருக்கும்.புரோட்டா விலை 10 மற்றும் பெப்பர் சிக்கன் விலை 110.
குருமாவுக்கு பதில் இன்னும் நிறைய வெரைட்டி இருக்கிறது.அது எல்லாம் காசு...பணம் துட்டு மணி.மணி...குருமா மட்டும் புரோட்டாவிற்கு இலவசம்..சாரி விலையில்லா குருமா....
சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியேறி வளைச்சி வளைச்சி போட்டோ எடுத்து ஒரு மினி பதிவர் சந்திப்பினை அரங்கேற்றினோம்.அப்புறம் கைகுலுக்கலுடன் விடை பெற்றோம்.
பர்மா பாய் கடை என்பதால் என்னவோ அயல்நாட்டு பேரிச்சை பழம் வகைகள் கடை கவுண்டரில் கிடைக்கிறது.கடை இருக்கிற ஏரியா வ.உ.சி பார்க் ஸ்டேடியம்.இதுக்கு பக்கத்துலயே பூமாராங் ஐஸ்கிரீம் கடை இருக்கு..அங்க போனா சும்மா...ஜில்லுனு இருக்கும்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்




35 comments:

  1. அடப்பாவி.. (இந்த எக்ஸ்பிரஷன் எதுக்குன்னு உனக்கே தெரியும்)..

    சரி சரி கலக்கல் பதிவு...

    பரோட்டா பத்து, பெப்பர் சிக்கன் நூற்றி பத்து தான் மாப்பு..

    ReplyDelete
    Replies
    1. அடப்பாவி.....ஹிஹிஹி நாங்கலாம் அப்பவே....

      ஒத்துக்கறேன்..நீதான் பில் கொடுத்தேன்னு....

      Delete
    2. அடுத்தமுறை வரும்போதும் போட்டி வருமா?

      Delete
  2. // பூமாராங் ஐஸ்கிரீம் கடை இருக்கு..அங்க போனா சும்மா...ஜில்லுனு இருக்கும்.//

    ஜில்லுன்னா "அம்மணிகள்" தானே மாப்பிளே..

    ReplyDelete
    Replies
    1. மச்சி,,,நான் ஐஸ்கிரீம் சொன்னேன்....ஒஹோ...அம்மணிக்கு ஜில்லு ன்னு பேரு இருக்கா,,,>

      Delete
  3. ஜீவா, முன்பு பாஸ்போர்ட் அலுவலகம் இருந்த இடத்தில் ஒரு பாய் கடை இருந்ததே அக்கடையா இது? இந்த பாய் கடையில் இரவு அதிக கூட்டம் வரும். டொமேட்டோ சிக்கன் என்ற ஒரு சால்னா தருவார்கள். படு சுவையாக இருக்கும். இப்போது அந்தக் கடை இருக்கிறதா என்று தெரியவில்லை.

    பரோட்டா உணவு விஷத்தன்மை கொண்டது என்கிறார்கள்.

    http://thangabaluslife.blogspot.in/2012/01/blog-post_9002.html இந்த இணைப்பைப் படித்துப் பார்க்கவும்.

    டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பரோட்டா மாவு மைதாவைப் பற்றிய ஒரு ஆர்ட்டிகிள் கூட வந்திருந்தது.

    காசைக் கொடுத்து ஏன் உடம்பைக் கெடுத்துக் கொள்கின்றீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க..தங்கவேல்...
      புரோட்டா சாப்பிட ஆரம்பித்தது சிறுவயதில் இருந்தே....ரொம்ப பிடிச்ச உணவு பதார்த்தம்..மறக்க முடிவதில்லை...

      Delete
    2. //பரோட்டா உணவு விஷத்தன்மை கொண்டது என்கிறார்கள்.// கோதுமை போல சத்து கிடையாது குறிப்பா நார் சத்து. ஆனா இதை தொழிற்சாலையில் எப்படி தயார் செய்றாங்க என்பது இன்னொரு இரகசியம். உற்பத்தியின் போது மைதாவில் சேர்க்கும் சமாச்சாரத்தை வைத்து இப்படி சொல்றார்னு நினைக்கிறேன். அடுத்த படியா நீரிலிவு உள்ளவங்க இதை சாப்பிடுவதை குறைச்சுக்கனும்னு சொல்றாங்க. இவர் சொல்ற மாதிரி விஷம்னா ரொட்டி பண்ணு,பிஸ்கட்,கேக்கு எல்லாம் விசம்தான். வியாதிக்கு பயந்து யார் சாப்பிடாம இருக்காங்க சொல்லுங்க.

      Delete
    3. பர்மா பாய் கடை ஆர்.டி.ஓ அலுவலக சாலையில் இரவு நேரங்களில் ரோட்டோரக்கடையாக செயல்பட்டது.
      கோவை குண்டு வெடிப்புக்கு பிறகே இங்கே இடம் பெயர்ந்தார்கள்.

      Delete
  4. (முக நூலில்) அசையக் கூட முடியாமல் நின்னிருந்ததைப் பார்த்தேன்... ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க தனபாலன்....போட்டாவுல யாரும் அசையமாட்டாங்க....ஹிஹிஹி

      Delete
  5. இதை நோட் பண்ணிக்கிட்டேன் ஜீவா. அடுத்த கோவை விசிட்ல, உங்க எல்லாத்தோடயும் ஒரு விசிட் பண்ணிர வேண்டியதுதான்! உங்க கூடவும் ஆவி... நீஙக சாப்பிட்ட புரோட்டாவுலயும் ஆவியா? ஹா... ஹா... ஹா...!

    ReplyDelete
    Replies
    1. வாங்க...சார்...வாங்க...போவோம்..
      ஆவி தொல்லை ரொம்ப இருக்கு சார்...ஹிஹி...

      Delete
  6. தலைப்பை பார்த்து பாய் கடைன்னு நினைச்சேன். அப்புறம் உள்ள வந்ததும்தான் தெரிஞ்சுது அஸ்லாமு அலைக்கும் பாய்”ன்னு!! முதல் பதிவே பல்ப். இன்னிக்கு மத்த யாருல்லாம் பல்ப் தரப்போறாங்களோ!?

    ReplyDelete
    Replies
    1. ஓகோ..எப்பவும் தூங்குற நினைப்புல தான் இருப்பீங்க போல...

      Delete
  7. பரோட்டா கேரளாவில் தடை பண்ணிட்டாங்களாம் நம்ம ஊர்ல இன்னும் தடை வரலையாக்கும், பூப்போல பரோட்டா சாப்புட்டு வருஷம் பல ஆச்சுன்னு நினைக்கிறேன்.

    ஆமா அது என்னாது பெப்பர் சிக்கனா ? பெப்பர் சிக்கன் இப்பிடி இருக்காதே மக்கா...!!!

    ReplyDelete
    Replies
    1. செமையா இருக்கும் புரோட்டா...வாங்க ஒரு நாளைக்கு...
      இங்க இப்படித்தான் இருக்கும் பொடி பொடியா....கோழி துண்டுகள் பெரிதாக வேண்டுமெனில் அம்மா மெஸ் போலாம்...நாட்டுக்கோழி பெப்பர் பிரை செமையா இருக்கும்

      Delete
    2. கேரளாவில் புரோட்டாவைத் தடை செய்யவில்லை.தாராளமாகக் கிடைக்கிறது.
      சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்க்காக ரொம்ப மெனக்கெடுகிறார்கள்.
      கேரள சுகாதாரத் துறையும் இதில் ரொம்ப கண்டிப்புடன் இருக்கிறார்கள்.
      வாழ்க வளமுடன்
      கொச்சின் தேவதாஸ்

      Delete
  8. ஹலோ,இன்னைக்கு உங்களுக்கெல்லாம் வயிற்று வலி வரலையா?(என்ன ஒரு நல்ல எண்ணம்) அதான் நேத்தே முக நூலில் என்னைய விட்டுட்டு சாப்டீங்களான்னு கேட்டேனே...அட ஒரு 150 ரூபாய்க்காக நம்மள இப்படி விட்டுடீங்களே நியாயமா...சும்மா ஒரு விளையாட்டுக்காக...:)

    ReplyDelete
    Replies
    1. எங்க மனசும் சுத்தம் வயிறும் சுத்தம் அப்புறம் எப்படி வயித்துவலி வரும்

      Delete
  9. நான் கமலுக்கும்...பரோட்டாவுக்கும் 1970லிருந்தே ரசிகன்.
    பரோட்டா பத்தி தப்பா பேசினால பதிவெழுதி போர் தொடுப்பேன்.
    ஜாக்கிரதை.[தேங்காய் சீனிவாசன் பாணியில் ‘ஜாக்கிரதையை’ சொல்லி இருக்கிறேன்.]

    ReplyDelete
    Replies
    1. கமலுக்கு ரசிகன்...பரோட்டாவுக்கு அடிமைன்னு சொல்லுங்க :0)

      Delete
  10. அடடா..படிக்கும்போதே நாக்குல எச்சில் ஊறுதே..இந்த வருடம் இந்தியா வந்தபோது கோவை வர முடியவில்லை. அடுத்த வருடம் இந்த பாய் கடைக்காகவாவது கோவை விசிட் நிச்சயம்!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க செங்கோவி....
      கண்டிப்பா நானே கூட்டிட்டு போறேன்....

      Delete

  11. சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளரில் தண்ணி எடுத்து சுத்தமாக கையை கழுவினோம். பிறகு கை ஈரமாக இருக்கவே என்னவென்று புரியாமல் கடைசியில் கவியாழி கண்ணதாசன் சட்டையில் தெரியாமல் துடைத்து விட்டேன்,..இதை கடைக்காரர் கவனித்துவிட அவர் வாயை அடக்க கையில் 50 பைசாவை திணித்தேன்... அவர் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு என் கையில் 5 ரூபாயை திணித்தார்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சப்பி போட்ட மாங்கொட்டை...ரொம்ப நல்லா எழுதறீங்க....

      Delete
    2. அடப்பாவிங்களா? நானே கவனிக்கலையே

      Delete
  12. ஒரே அசைவமா வெட்டித்தள்றீங்க! அடுத்த முறை கொஞ்சம் சைவமும் சாப்பிடுங்க! உடம்புக்கு நல்லது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா...சைவம் உண்டு ஒரு நாள்...

      Delete
  13. பதிவர் சந்திப்பு - விருந்து என அமர்க்களமா இருக்கே! :)

    ReplyDelete
  14. For your Information,Burma Bhai shop is open till 12.30.when i was studying in College,it was the best spot to have dinner after Night Show Movies...Craving for those parotas..:P

    ReplyDelete
  15. yes, tomato chicken is very famous i too tasted it.

    ReplyDelete
  16. ஏதோ ஒருநாள்..பராட்டா என்றால் பரவாயில்லை..!
    முன்னர் தெருவோரக் கடையாக இருந்தபோது..அவ்வளவாக வெரைட்டி இல்லை..!
    தற்போது, பார்டர் கடை அயிட்டங்கள் எல்லாம் இந்தக் கடையிலேயே கிடைக்கிறது!

    ReplyDelete
  17. பரோட்டா பார்க்கவே நன்றாக இருக்கிறது.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....