Tuesday, July 9, 2013

சினிமா - CHANTHUPOTTU - சாந்துபொட்டு - மலையாளம் - 2005 -விமர்சனம்

              எங்க கிராமத்துல பெண் தன்மையோட இருக்கிற ஆண்களை பொம்பளச்சட்டி அப்படின்னு தான் சொல்லுவாங்க.அப்போலாம் திருநங்கை, அரவாணி அப்படின்னு யாரும் கண்டுபிடிக்கல.அதுக்கப்புறம் அலி வருது போகுதுன்னு சொன்னாங்க.ஆனா பெரும்பான்மையோர் பொம்பளச்சட்டி தான் கூப்பிடுவாங்க.
         இவங்க எப்போதும் ஆண்கள் அணியிற சட்டையையும் லுங்கியையும் தான் கட்டிகிட்டு இருப்பாங்க.எப்ப பார்த்தாலும் பெண்கள் கூட தான் இருப்பாங்க.பெண்கள் செய்யுற வேலைகளான (மாதர்குல சங்கங்களே, பெண் சிங்கங்களே வம்புக்கு வந்திடாதீங்க) தண்ணி எடுப்பது, வாசல் பெருக்குவது, சமையல் செய்வது என இப்படித்தான் இருக்கும்.என்னதான் அழகா இருந்தாலும் குரல் மட்டும் கர்ண கொடூரமா இருக்கும்.பெண்களும் இவர்களை துணைக்கு எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்வார்கள்.பெண்களின் வீட்டிலும் கண்டு கொள்ளமாட்டார்கள்.(ஒண்ணும் நடக்காது என்கிற தைரியத்தில்..ஹிஹிஹி).
          ஆனால் ஆண்களிடம் இவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள்.முகத்தை திருப்பிக்கொண்டு செல்வார்கள்.என் கிராமத்தில் இப்படித்தான் ஒரு நபர் இருந்தார்.ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அவமானப்படுத்தப்பட்டே அவர் தற்கொலை செய்து கொண்டார்.
            இப்போதிருக்கும் திருநங்கைகளுக்கு உண்டான விழிப்புணர்வு, சட்ட ஆலோசனைகள், அரசின் இலவச உதவிகள் என எல்லாம் கிடைத்திருந்தால் அவர் இன்னும் இருந்திருப்பார்.காலம் ஒரு நல்ல மருந்து என்பது தெரியாமல் போய்விட்டது.அப்படிப்பட்ட பெண் தன்மை இருக்கிற ஒரு நபரோட வாழ்க்கை கதைதான் இந்த சாந்து பொட்டு.

     மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சாந்துபொட்டு என்கிற படத்தினை அப்போ வெளியான போது கேரளாவில் கொச்சினில் பார்த்தேன்.அந்த படம் அப்போதிருந்து நேற்று வரை (ஏசியா நெட் சேனலில் ஞாயிறு ஒளிபரப்பானது) கிட்டதட்ட ஒரு பத்து முறையாவது பார்த்திருப்பேன் டிவிடியில்.அந்த படத்தில் வரும் ஒரு பாடலை எப்போதும் முணுமுணுத்துக்கொண்டே இருப்பேன்.செம ஹிட்டான பாடல் அது.
ஓமன புழ கடற்புரத்தின் ஓமனே...
நீ கரைஞ்ஞா இக்கரையில பாதிரா...
நீ சிரிச்சா இத்துறைக்கு சாகரா.... 
(எந்தா எண்ட...மலையாளம் கரக்டா....)

இந்த பாட்டை பாடினவர் சீனிவாசன் பையன் வினீத்.செம வாய்ஸ்.தட்டதின் மரையாது படத்தோட டைரக்டர் வேற..டிராபிக் படத்தின் ஒரு நாயகன்.

சரி கதைக்கு வருவோம்.
ஸ்டோரி – பெண் தன்மை இருக்கிற ஒரு ஆணின் கதை.

முழுக்கதை –
           பெண் குழந்தை வேண்டும் என்று எதிர்பார்த்து இருக்கிற ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்து விடுகிறது.அந்த குடும்பத்தின் பாட்டி அந்த குழந்தையை பொட்டு வளையல் இட்டு பெண்ணாக பாவித்து வளர்க்கின்றனர். இதனால் பெண் தன்மையுடன் வளர்கிறது, ராதா கிருஷ்ணன் என்று பெயர் சூட்டிய குழந்தை ராதாவாக.ஒரு தகராறில் கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போய் விடுகிறார் ராதாவின் தந்தை.வளரும் குழந்தை வாலிப பருவம் அடைகிறான்.அப்பவும் பெண்களுடன் விளையாடுவது, பரதம் சொல்லி தருவது என ஒரு பெண் தன்மையுடன் இருக்கிறான்.

              ஒரு பிரச்சினையில் சிலர் அவனது துணியை அவிழ்த்து விட மிக வெட்கப்பட்டு அழ, அதனால் அவனது தாய் நீ ஒரு ஆண் என்பதை நிரூபிக்கவேண்டும் என்று சொல்லிவிடுவதால் தன்னுடன் பழகும் மாலு என்கிற பெண்ணிடம் காதல் கொள்கிறான்.கூடலும் கொள்கிறான்.அந்த சமயத்தில் கடலில் மீன் கிடைக்காததால் மக்கள் அவ்வூரின் சாமியாரான மாலுவின் அப்பாவிடம் குறி கேட்க அவர், ஆண் தன்மையும் பெண் தன்மையும் இருக்கிற அவனால் தான் இந்த ஊருக்கு சாபம் எனவும் அவனை துரத்த வேண்டும் என சொல்கிறார்.மாலுவை ஒரு தலையாக காதலிக்கும் முரட்டு ஆசாமியாக குமார், (கொலையானவரின் பையன்) மற்றும் மாலுவின் அப்பா சாமியாரின் சதி திட்டத்தின் படி ராதையை அடித்து கடலில் மூழ்கடித்து விடுகின்றனர்.

             கடலின் இன்னொரு மறுபக்கம் பிஜி மேனனால் காப்பாற்றப்பட்டு அங்கு தங்கி இருக்கிறான் ராதை.கோர்ட்டு, கேஸ் என கஷ்டத்தில் இருக்கும் பிஜுமேனன் மற்றும் தங்கை பாவனாவுக்கு இவன் அங்கு வந்தவுடன் எல்லாம் சரியாகிவிடுகிறது.முதலில் வெறுக்கும் பாவனா பின் ராதையை பிரதராக ஏற்றுக்கொள்கிறாள்.அங்கு ஏற்படும் ஒரு சின்ன தகராறில் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறான்.
                  வழியில் சந்திக்கும் தன் ஊர்க்காரர் ஒருவர் ராதாவிடம் மாலு இன்னும் உனக்காக காத்திருக்கிறாள் என்றும் உனக்கு குழந்தை பிறந்திருக்கிறது, தன் பையனின் வாரிசு உரிமையை கேட்க சென்ற உன் தந்தையை கொன்று விட்டார்கள் என்றும் சொல்கிறான்.ஊர் திரும்பும் ராதை, தன் பெற்றோரை கொன்ற குமாரை பழிவாங்கி மாலுவுடன் எப்படி ஒன்று சேர்கிறான் என்பது தான் கதை...

         ஷ்ஷ்ஷ்....அப்பாடி...இப்பவே கண்ணக்கட்டுதே...
           
ராதையாக திலீப். படம்...படம் முழுக்க நிறைந்திருப்பது திலீப். திலீப் மட்டுமே...என்ன ஒரு நடிப்பு..வாய்ஸ் மாடுலேசன்..பாடி லாங்வேஜ் என எல்லாம்...செம...

             இன்னும் கண்களை விட்டு அகலாத பாத்திரம்.இப்படி ஒரு நடிகன் இனி நடிப்பது கஷ்டமே.(தமிழில் விக்ரம் நடிப்பதாக சொன்னார்கள்.என்னவாயிற்று என்று தெரியவில்லை.)வித்தியாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிப்பது திலீப்க்கு நிகர் அவரே தான்.

அறிமுக காட்சியில் பரதம் சொல்லித்தரும் நடிப்பு அற்புதம்..

மாங்காய் பறி....களை கொத்து......அப்புறம் மத்திக்கு கடல்ல வலைவீசு என ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் விளக்கம் சொல்லி பரதம் கற்று தருவது சூப்பர்..
கண்ணுக்கு மை, நெயில் பாலிஷ், ஹேர்ஸ்டைல் , நடை உடை பாவனை  என ஒரு திருநங்கை போல படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார்.கடைசியில் ஹேர்கட்லாம் பண்ணிட்டு பேண்ட் போட்டு வந்தாலும் நடையில் கொஞ்சமும் மாற்றமும் இல்லாமல் வரும் காட்சியில் சூப்பர்.

படம் முழுக்க சின்ன சின்ன சுவாரசியங்கள்.ராதையாக திலீப், மாலுவாக கோபிகா, குமாராக இந்திரஜித், மற்றும் பிஜி மேன்ன் பாவனா, லால், இன்னும் நிறைய...

படம் முழுக்க நகைச்சுவை, நல்ல கதை, பாடல், செண்டிமெண்ட் என எல்லா விதத்திலயும் சூப்பராக இருக்கிறது.

இந்த படத்தினை இயக்கியவர் லால் ஜோஸ், இவரின் சிறந்த இயக்குனர்.சமீபத்தில் டயமண்ட்நெக்லஸ் கொடுத்தவர்.இசை வித்யாசாகர்.

இது 2005ல வெளியானது.ஆனாலும் இப்போ பார்த்தாலும் படம் பிடிக்கும்.எங்காவது டிவிடி சிடி கிடைச்சா பாருங்க...கேரளா மண்வாசனையுடன் திலீப்பின் நடிப்புடன் சூப்பரா இருக்கும். 

எல்லாரும் மார்க் போடறாங்க...நாமும் போடுவோம்
10/10 ஹிஹிஹி

நேசங்களுடன்
ஜீவானந்தம்



26 comments:

  1. கண்ணை கட்டினாலும் கதையை சொன்னதற்கு நன்றி... விக்ரம் சரிப்பட்டு வருவாரா தெரியவில்லை... ஆனால் அவர் தான் நடிக்க ஒத்துக் கொள்வார்...

    ReplyDelete
  2. திலீப்பின் காமெடிப்படங்கள் பார்க்க ஆர்வம் வருவதில்லை.
    அதனாலேயே இப்படத்தை தவிர்த்தேன்.

    விமர்சனநடை மெருகேறி வருகிறது.
    தொடரவும்.
    [ மார்க் போடுவதை தவிற்கவும் ]

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்..அது சும்மா டமாஸ்க்கு மார்க்...ஹிஹிஹி

      Delete
  3. எந்தா எண்ட...மலையாளம் கரக்டா....)//

    பின்னீட்ட மாப்ளே..

    ReplyDelete
    Replies
    1. மலையாளத்துல பறஞ்சுடே... ஹிஹிஹி

      Delete
    2. அடிபொலி சேட்டா.. ;-)

      Delete
    3. ஒகே...பீப்ஃபும்...மத்தியும் உனக்கு பார்சல்

      Delete
  4. //எல்லாரும் மார்க் போடறாங்க...நாமும் போடுவோம்//

    யாரையோ தாக்குற மாதிரி இருக்கே?? ;-)

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி...மச்சி..ஏன்...ஏன்...

      Delete
  5. மலையாள சினிமாவைப் பொறுத்தவரை லால் ஜோஸ் மிக முக்கியமான ஒரு இயக்குனர்.. இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்ற படங்கள்.. (மீச மாதவன், பட்டாளம், க்ளாஸ்மேட்ஸ், அயாளும் ஞானும் தம்மில், நீலத்தாமரா )

    ReplyDelete
    Replies
    1. ஆமா மச்சி....அவரோட லிஸ்ட் பார்த்த போது எல்லா படமும் ஆர்டர் பண்ணிட்டேன்....

      Delete
    2. எனக்கு ரொம்ப பிடிச்சது மீச மாதவன் தான்..

      Delete
  6. சின்னப் பையன் மாதிரி நடிக்கறேன்னு சொல்லிட்டு வாத்துக்குஞ்சு மாதிரி வாயத் தொறந்துட்டு விக்ரம் படுத்தினதையே இன்னும் ஜீரணிச்சு முடியல... இதுல வேற நடிக்கணுமா? விட்றுங்கப்பா...! சூப்பரொ அருமையான எழுத்து நடைல விமர்சனம் பண்ணி அசத்திட்ட ஜீவா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே....வினயனோட காசி படத்துல விக்ரம் அப்பவே அப்படித்தான் நடிச்சிருப்பாரு...அப்போ நான் ஆர்ட் டைரக்சன்ல அசிஸ்டெண்டுக்கும் அசிஸ்டெண்டா இருந்த போது அந்த படத்துல ஒரு 15 நாள் சூட்டிங்காக கேரளா போய் கூடவே சுத்திட்டு இருந்தேன்..

      Delete
  7. விமர்சனம் படத்தை பார்க்க தோன்றுகிறது நானும் திலீப் ரசிகைதான் அவசியம் பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. டிவிடி இருக்கா...பணம் அனுப்புங்க...கொரியர் பண்றேன்,,

      Delete
  8. அட, உனக்கு விமர்சனமும் நல்லா வருதே!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா...அதான் இங்க மழை நிறைய பெய்யுது...ஹிஹிஹி

      Delete
  9. விமர்சனம் பார்க்கத்தூண்டியது. பார்க்க முயல்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பாருங்க..பிடிக்கும்....

      Delete
  10. கதை விமர்சனம் சூப்பர். இந்த படம் பார்க்க விரும்புகிறேன்.
    குறுவட்டு. தயவு செய்து வழங்கவும்

    ReplyDelete
    Replies
    1. பணம் ரொம்ப செலவாகுமே...ஹிஹிஹி

      Delete
  11. செம படமய்யா, திலீப்பின் நடிப்புக்கு நிகர் அவரேதான், எங்க ஹோட்டலுக்கு வந்திருக்கார் இருமுறை...!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா....எனக்கு பிடித்த நடிகர்....

      Delete
  12. மலையாள திரைப்படங்களில் சிறந்த ஒரு படம் நடிகர் திலீப்பின் "சாந்து பொட்டு" லால் ஜோஸ் இயக்கத்தில், வித்யாசாகர் இசையில், கலக்கல் படம்.
    படத்தின் ஹிட் டூயட் சாங் அ எழுத மறந்துட்டியே நண்பா
    "சாந்து குடஞ் சொரு சூர்யன் மானத்து
    பொட்டு தொடுன்னொரு நாணம் தீரத்து"
    பாடலின் மனதை தொட்ட வரிகள்
    "அந்தி மயங்கி வெளுக்கன்ன சமயத்து
    கண்மணி நீயென் வலையில் பொன்முத்து"
    வித்யாசாகரின் இசையில் ஒரு பொன் முத்து பாடல்

    கலக்கல் பதிவு

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....