சமீபத்தில திருச்சி போயிருந்தேன்.சாயந்திர நேரம் ஊர் சுத்தி பார்க்கலாமே அப்படின்னு கிளம்பி போன இடம் மலைக்கோட்டை பஜார் வீதி.வண்டியை ஓரமா ஓரங்கட்டிட்டு பொடி நடையா நடந்து போனதுல எவ்ளோ கலோரிகள் மனசுக்கும் உடம்புக்கும் கம்மியாகி போனது.பஜாரின் இருபுறங்களிலும் பேன்சி ஸ்டோர்கள் மற்றும் இன்ன பிற கடைகள்.கடையில் இருக்கிற பொருட்களை விட அதை வாங்க குவியும் அம்மணிகள் அதிகமாக இருக்கிறார்கள்.ஒட்டு மொத்த திருச்சியுமே இங்குதான் குவியும் போல அவ்ளோ கூட்டம்.
ஒவ்வொரு கடைகளிலும் கூட்டம் இருந்தாலும் சாரதாஸ் துணிக்கடையில் அம்புட்டு கூட்டம்.ஒரு பொதுக்கூட்டமே நடத்தலாம் போல...அவ்ளோ மக்கள்.பரந்து விரிந்த கடையினுள் எங்கும் மனித தலைகளே.அதிலும் அம்மணிகள் அதிகம்...குடும்பத்தோடு மூட்டை மூட்டையாய் வாங்கி வெளியேறிக்கொண்டிருந்தனர்.பார்த்து பிரமித்து போய் ஒரு டிரஸ் கூட எடுக்காமல் வெளியேறினேன்.(துணி எடுக்கவா உள்ளே போனது...?ஹிஹிஹி..).மனம் அடைந்த அயர்ச்சியில் உடல் கொண்ட தளர்ச்சியில் எதாவது உள்ளே தள்ளியாக வேண்டும் என்கிற ஆவலில் போன இடம் தான் நம்ம மைக்கேல் அண்ட் சன்ஸ்.
சின்ன கடைதான்.ஆடம்பரம் எதுவும் இல்லை.பழங்கால கட்டிடம் போலத்தான் இருக்கிறது.ஆனால் எப்பவும் போல உள்ளே கூட்டம் நிறைந்து இருக்கிறது.காத்திருந்து ஒரு டேபிளை ஆக்ரமித்தேன்.சுற்றும் முற்றும் பார்த்ததில் அம்மணிகள் அதிகமாகவே இருக்கின்றனர்.மனம் லேசானதை உணர்ந்த போது பேரர் வந்து நிற்க கடையின் பிரபலமான புரூட் சாலட் ஐஸ்கிரிமினை ஆர்டர் செய்தேன்.ஒரு சில்வர் கப்பினுள் சிவந்திருந்த புரூட்ஸ்களுடன் வெண்ணிலா ஐஸ்கிரிம் சேர்ந்து வர மிக சுவையாக இருந்தது.புரூட் சாலட்டில் நிறைய பழவகைகள் இருந்தாலும் அதிகம் தென்படுவது வாழைப்பழம் தான்.
ஆனால் மிக சுவையாக இருக்கிறது.மற்ற முண்ணனி பிராண்டுகளில் இருக்கிற சுவை இருக்காது.ஆனால் எப்பவும் போல ஒரே சுவையுடன் கிட்டதட்ட 30 வருடங்களுக்கும் மேலாக நடத்திக்கொண்டிருக்கிற ஒரே கடை இதுதான்.மிக குறைந்த விலையில் இன்னமும் தந்து கொண்டிருக்கின்றனர்.அவ்வப்போது ஒரு ரூபாய் ஏற்றுவார்கள் போல.1995 யில் 2.50 இருந்த புரூட் சாலட் இப்போது 7.00 யாக இருக்கிறது.ஆனால் அதே சுவை.வேறு எந்த பிராண்ட் ஐஸ்கிரீம்களும் இங்கு கிடைக்காது.அனைத்தும் சொந்த தயாரிப்பே..
இந்த கடை அருகிலேயே நிறைய கடைகள் இருக்கின்றன.ஆனால் இங்கு மட்டுமே சுவையும் அதிகம்.கூட்டமும் அதிகம்.திருச்சி போனால் மறக்காமல் இங்கு ஒரு வருகையை போடுவது வாடிக்கையாகிவிட்டது.மலைக்கோட்டை பஜார் வாயில் எதிரே உள்ள போஸ்ட் ஆபிஸ் அருகில் இந்த கடை இருக்கிறது.பஜாரில் பர்ச்சேஸ்களை முடித்துவிட்டு களைத்து வரும் நபர்கள் அதிலும் அம்மணிகள் அதிகமாய் கூடும் இடமாக இருக்கிறது.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
எப்பவுமே ‘கண்ணுக்கு குளிர்ச்சியா’ பாத்து கிட்டே இருந்தா உடம்பு சூடாகித்தான் போகும்.
ReplyDeleteஅதான் ‘மைக்கேல்’ போனீங்களா!
ஹிஹிஹி....சும்மா..வாங்க சார் நாம ஒரு நாள் போலாம்...
Deleteசாரதாஸ் மாதம் இருமுறை போவதுண்டு... (பிசினஸ்)
ReplyDeleteமைக்கேல் அண்ட் சன்ஸ்.... போயிருக்கலாம்...
வாங்க தி..தி.. ரொம்ப விவரமா அடைப்புக்குறில போட்டுடீங்க...
Deleteஅடுத்த மாசம் போங்க...
என்ன தனபாலன் சார், பிசினஸ் என்பதில் கொஞ்சம் அழுத்தம் ஜாஸ்தியாக தெரிகிறதே ! :-)
Deleteவிவரமா இருக்காராம்...ஹிஹிஹி
Deleteஎனக்கு சொந்த ஊரு திண்டுக்கல். கோவை, திருச்சி பக்கமெல்லாம் நிறைய சொந்தக்காரங்க இருக்காங்க..!!
ReplyDelete//அதிலும் அம்மணிகள் அதிகமாய் கூடும் இடமாக இருக்கிறது//
போயிருவோம்..!!
முத தடவை இங்கன வந்திருக்கேன்.. இனிமே அடிக்கடி வருவோம்ல.!!
வாங்க நண்பரே...திருச்சி ரொம்ப வறட்சியான ஏரியா...ஆனா ஜில்லுனு இருக்கும் அந்த பஜார் போனா மட்டும்...ஹிஹிஹி
Deleteஆஹா, நான் பிறந்து வளர்ந்த ஊருக்கு போய் இருக்கீங்க போல ! அருமையான ஐஸ் கிரீம் பதிவு வேற. நானும் இதை பற்றி எழுதி இருக்கேன்...... முடிஞ்சா படிங்க. என்னுடைய நினைவை கிளறிவிட்டதற்கு நன்றி !
ReplyDeletehttp://www.kadalpayanangal.com/2012/09/blog-post_11.html
வாங்க சுரேஸ்...ஏற்கனவே படித்து இருக்கிறேன்..
Deleteஅம்மணிகள் என்ற வார்த்தை இந்த பதிவில் நான்கு தடவை இடம் பெற்று உள்ளது மற்ற யாரும் கண்ணுக்கு தெரியலையா அண்ணே
ReplyDeleteவாங்க சக்கரை...கரெக்டா சொல்லிடீங்க..நம்ம கண்ணுக்கு தெரிகிறத மட்டும் தானே சொல்லுவொம்..
Deleteஐஸ்கிரீம் இவ்வளவு மலிவாக ! இருக்கின்றது.
ReplyDeleteசாரதாஸ் பலவருடங்களுக்கு முன் வந்திருக்கின்றேன். இப்பொழுது எல்லாம் மாறிஇருக்கும்.
வணக்கம் மாதேவி, ஆம் அந்த கடையில் அவ்வளவுதான் விலை.இதைபோன்றே அருகில் இருக்கிற கடைகளிலும் விலை குறைவுதான்.ஆனால் கூட்டம் கூடாது.
Deleteசாரதாஸ் ஒரு கடல்...மலையை குடைந்து குடைந்து உள்ளே போய்ட்டு இருக்காங்க
Fruit salat @ Rs: 7 /-. I cannot believe it. Trichy peoples are very lucky.
ReplyDeleteவாங்க அனானி....அவ்ளோ தான் விலை..டேஸ்ட் நல்லா இருக்கும்.சொந்த தயாரிப்பு.அதிக கலப்பட மில்லாமல்...
Deleteதிருச்சி மலைக்கோட்டை பஜார் வீதியில் ஒரு முறை உலவியது உண்டு! நீங்க சொல்வது போல கண்ணுக்கு குளிர்ச்சிதான்! ஐஸ்க்ரீம் கடையை மிஸ் பண்ணிட்டேன் போல அடுத்த முறை வரும்போது ஒரு கை பார்த்துடுவோம்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவணக்கம் சுரேஸ்...கண்டிப்பா வாங்க....
DeleteOur favourite hang out shop during our Law college days. Around 15 to 20 Boys and Girls used to go together to this shop!
ReplyDeleteThose were the days !
வணக்கம் சார்...ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம மெஸ் பக்கம் வரீங்க...
Deleteஉங்க காலேஜ் டேஸ்ல ஹீரோவா இருந்திருப்பீங்க தானே....சுத்தியும் 10, 15 பேரு கலக்கலா....ம்ம்ம்..வாழ்த்துக்கள்...
சிங்காரத்தோப்புல ஒன்னும் அஞ்சல் நிலையத்துக்கு பக்கத்துல ஒன்னும் இருக்கும். கல்லூரி முடிஞ்சு சத்திரம் போனா 4பேரு போட்டி போட்டுக்கிட்டு 100 ரூவாக்கு சாப்புட்டு வருவோம். அப்போ விலை 3.50(2002) காசு தான்.
ReplyDeleteஓ..நீங்களும் திருச்சியில தான் படிச்சீங்களா...
Deleteதிருச்சி சொந்த ஊருங்க...
Deleteசிப்பி தியேட்டர் எதிரில் ஒரு கிளை இருக்கிறது , இது என் வீட்டிற்கு அருகில் உள்ளது கூட்டம் இருக்காது . அதனால் நாங்கள் பஜார் போனாலும் இங்கே வந்துதான் ஐஸ் கிரீம் சாப்பிடுவோம் . பாமிலி பாக்கும் கிடைக்கும் .
Deleteஇதேப்போல வேலூர்ல மகாராணி ஐஸ்கிரீம்ன்னு ஒரு கடை இருக்கு. ஆஃபீசர்ஸ் லைன் ரோட்ல ஊரீசு காலேஜ் பக்கத்துல இருக்கும். தினம் ஒரு ஸ்பெஷல் போடுவாங்க. இதோட கிளைகள் வேலூர் முழுக்க இருந்தாலும் இங்கதான் எல்லா வெரைட்டியும் கிடைக்கும். வேலூர் போகும்போது ஒரு விசிட் அடிங்க ஜீவா!
ReplyDeleteவணக்கம் அக்கா...வர்றேன்..வேலூர் ஒரு தடவை வந்தேன்.ஆனா பிரியாணி மட்டும் சாப்பிட்டேன்.இனி வரும் போது கண்டிப்பா வரேன்,,,,
Deleteஜீவா,
ReplyDeleteதிருச்சியில நாலு வருஷம் படிச்சப்ப அடிக்கடி போனது உண்டு. ரொம்ப ரொம்ப சீப் விலையில் ஐஸ் கிரீம் வித் ப்ரூட் சாலட் கிடைக்கும். நான் போன காலத்துல விலை 2.50 (2001- 2005). கடை இன்னும் செயல்படுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
வாங்க ராஜ்...30 வருசம் மேல ஒரே இடத்துல....நீங்க திருச்சில தான் படிச்சிங்களா ? நான் REC ல CAD CAM கோர்ஸ் பண்ண 1997 ல இருந்தேன்.அப்போ ரெகுலர் கஷ்டமர்...அதில்லாம என் சொந்த ஊர் கரூர் அடிக்கடி திருச்சி போகுற வேலை இருக்கும்...அதனால ரொம்ப பழக்கம்
Delete
Deleteஅடடே நான் 97-லதான் REC -ல பொறியியல் முடித்தேன்... CAD -CAM எந்த DEPT படிச்சீங்க...அனேகமா TREC STEP னு நெனைக்கிறேன். அங்கதான் எடுத்ததாக ஞாபகம்
ஆமாங்க...அதே தான்...
Deleteநல்லா ஊர் சுற்றி சாப்புடுங்க எனக்கும் சேர்த்தே....!
ReplyDeleteவாங்க மனோ..நீங்க இண்டர்னேசனலா சாப்பிடறேள்...நான் லோக்கல் லோக்கலா சுத்தறேன்...
Deleteதி நியூ இண்டியன் எக்ப்ரஸின் இன்றைய பதிப்பில் நம்ம கோவை நேரம்....
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ஸ்பெஷல் பதிவு உண்டா...?
வாங்க கவனிச்சிடுவோம்
Deleteஎன்.எஸ்.பி. சாலை முழுவதும் எப்போதும் திருவிழா கூட்டம் தான்! :)
ReplyDeletensb ரோட்டில் 1984 முதல் 2002 வரை சாரதாஸ் முன்புறம் எங்களுக்கு தரைக்கடை இருந்தது கல்லூரி போகும் நேரம் தவிர பாக்கி நேரம் அப்பாவுக்கு உதவ நான் கடையில் இருப்பேன் .எங்கள் கடை சாரதாசுக்கு எதிரில் இருந்ததால் சாரதாசின் வளர்ச்சி ஓரளவு எனக்கு தெரியும் . சராதாஸ் திரு மணவாளன் பிள்ளை அவர்கள் தினமும் மலைக்கோட்டை போய் சாமி கும்பிட்ட பிறகே கடை திறப்பார். காலப்போக்கில் சாரதசுடன் போட்டியாளர்களாக இருந்த வரதராஜூ சில்க்ஸ்,கீதா சில்க்ஸ்,பூர்விக சென்னியப்பா, ஆனந்தா சில்க்ஸ் போன்றவைகள் இப்போது எங்கே தொடங்கினார்களோ அங்கேயே நிற்கிறார்கள் , ஆனால் சாரதாஸ் காலத்திற்கு ஏற்றார் போல தன்னை மாற்றிக் கொண்டதால் இப்போதும் பிடித்து நிற்க முடிகிறது . உலகிலேயே வருடம் முழுவதும் தள்ளுபடி விற்பனை செய்யும் ஒரே ஜவுளி கடை எனலாம் .
Delete