ரெடியாகிட்டோம்...இன்ப சுற்றுலாவிற்கு நாங்க....அப்ப நீங்க.....
சென்னையில் நடக்கிற பதிவர் சந்திப்புக்கு வேன் சகிதம் எல்லாம் ரெடி..
காலையில கிளம்பினா சாயந்திரம் போயிடலாம்..
(மறக்காம மத்தியான சாப்பாட்டுக்கு கட்டுச்சோறு கட்டிட்டு வந்திடுங்க...எங்காவது வண்டிய நிறுத்தி சாப்பிட்டுவிட்டு போனா தெம்பா இருக்கும்.)
அப்படியே மெரினா பீச்சுல காத்து வாங்கிட்டு அப்படியே மாங்காய் பட்டாணி சுண்டல் சாப்பிட்டுவிட்டு
அங்க இருக்கிற அம்மணிகளை நோட்டம் விட்டுட்டு
கிளம்பி வந்து ரூமில தூக்கம் போட்டுட்டு
ஞாயிற்றுக்கிழமை காலைல நல்ல ஒரு ஹோட்டலில சாப்பிட்டுட்டு (கோவை மெஸ்ஸுக்கு பதிவு தேத்தனும் வேற )
பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு ஒரு அட்டணன்ஸ் போட்டுட்டு
அங்க போடற மத்தியான சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிட்டு (பார்சல் இல்ல...)
இருக்கிற மிச்ச சொச்ச நிகழ்ச்சிகளையும் பார்த்துட்டு
சாயங்காலம் கிளம்பினா அடுத்த நாள் காலை 5 மணிக்கு கோவை வந்திடலாம்
அப்புறம் வழக்கம் போல வேலைக்கு போக வேண்டியது தான்...
வேலைக்கு போன இடத்துல பதிவர் சந்திப்பு சுவாரசியங்களை இணையத்துல போட்டு
ஒரு மாசம் பதிவர்களை கொன்னெடுக்கலாம்...
யாரெல்லாம் வரீங்க....
கை தூக்குங்க....
கோவை மு சரளா - உள்ளேன் ஐயா...
அகிலா - உள்ளேன் ஐயா.
நிகழ்காலம் எழில் - உள்ளேன் ஐயா...
கலாகுமரன் - உள்ளேன் ஐயா...
ஆவி - உள்ளேன் ஐயா...
உலக சினிமா ரசிகன் - உள்ளேன் ஐயா...
கோவை சதிஸ் - உள்ளேன் ஐயா...
நிர்மல் குமார் - உள்ளேன் ஐயா...
சுட்டி மலர் - உள்ளேன் ஐயா...
அப்புறம்
நானும் இருக்கேனுங்க....
இன்னும் யாராவது வரணும்னு நினைச்சீங்கன்னா சீக்கிரம் அட்டனன்ஸ் போட்டுடுங்க...அப்புறம் வேன்ல தொங்கிட்டு தான் வரணும்..இல்லே டாப்ல தான் உட்கோரணும்..
அப்புறம் முக்கிய விசயமுங்க...எல்லாரும் சேர்ந்து தாங்க செலவை பிரிச்சுக்கணும்..இல்லேனா வண்டி ஓடாதுங் சாமியோவ்......
கூப்பிடுங்க எங்களை ( கோவையில இருந்து பதிவு எழுதறவங்க, பிளாக் ஆரம்பிக்கணும்னு நினைக்கிறவங்க )
அகிலா - 94431 95561
கலாகுமரன் - 88700 25552
கிசுகிசு :
கவிஞர்கள் நிறைய பேர் இருக்கிறதால் வண்டியில் போகும் போது யாரும் கவிதை சொல்லக்கூடாது...மீறி சொன்னா நான் வண்டியில இருந்து குதிச்சிடுவேன்..ஹிஹிஹி
நேசங்களுடன்
ஜீவானந்தம்
அப்படியே தஞ்சை வந்து பெரிய கோவில் பார்த்துட்டு என்னைய அழச்சுட்டு போங்க அண்ணே
ReplyDeleteஎன்னாது....அங்க வரனுமா...அங்க ஒரு மீட்டிங்க போடுங்க வரேன்...நல்லவேளை வெளிநாட்டுல இல்ல..
Deleteகோவை எக்ஸ்பிரஸ் வேகமெடுத்துவிட்டது
ReplyDeleteஅடுத்த எக்ஸ்பிரஸ்கள் எப்போது ?
ஆவலுடன் எதிர்பார்த்து....
நிச்சயம்..கண்டிப்பா கிளம்பும்....நன்றி வருகைக்கு....
Deleteஉங்களுக்கு பிடித்த சகோதரி மட்டும் கவிதை சொல்லாமல் இருந்தால் நல்லது... ஹிஹி...
ReplyDeleteபுரிதலுக்கு நன்றி...
Ok... Ok... √√
♥♥♥
ஆமா...இல்லேனா வண்டில இருந்து நிச்சயம் எகிறிடுவேன்...
Deleteகலக்குங்கப்பு...
ReplyDeleteநன்றி...வருகைக்கு....
Deleteகவிதை வேண்டாம்...உலகசினிமா ஒகேவா?
ReplyDeleteஅய்யோ...இதுவேறயா..நான் சிங்கம் 2 பார்க்கலாம்னு நினைச்சேன்...
Deleteகோவை பதிவர் எக்ஸ்பிரஸ் படம் தூள்.
ReplyDeleteயாரோட கை வண்ணம்?
ஹிஹிஹி...நானே நெட்ல சுட்டேன்...
Deleteவண்டி சூப்பர் ...பயணமும் சூப்பர்தான்....
ReplyDeleteகண்டிப்பா...அகிலா மேம்...
Deleteenjoy!
ReplyDelete- appadurai
நன்றி நண்பரே...
Deleteவெல்கம் ஆல் டு சென்னை!
ReplyDeleteகண்டிப்பா ...உங்களை சந்திக்கப்போகும் நாளை எதிர்பார்த்து..
Deleteவெல்கம் ஆல் டு சென்னை!
ReplyDeleteஎங்கயும் போயிடாதீங்க...எங்களை கவனிக்கனும்னு நீங்க துடியா துடிக்கிறது என் மனக்கண்ணுக்கு தெரியுது.
Deleteவேன்ல வரோம்ன்னு சொல்லி பஸ் படம் போட்டிருக்க்கீங்க?!
ReplyDeleteஇப்படி எடக்கு மடக்கா கேள்வி கேக்க உங்களால மட்டும் தான் முடியும்...
Deleteகவிதை, கதைன்னு யாராவது சொல்லி யாரையும் பயமுறுத்தாம பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteரொம்ப நன்றி நண்பரே..அப்படி யாராவது சொன்னா குதிச்சிட வேண்டியது தான்
Deleteகோவைப் பட்டாளமே கிளம்பி வரப் போறாப்பல! அப்ப களை கட்டும்னு சொல்லுங்க! வருக வருக!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஸ்...நீங்க வரீங்க தானே...
Deleteவருக! வருக!
ReplyDeleteவாங்க கவிஞரே..உங்களை சந்திக்க போவதில் மகிழ்ச்சி
Deleteஅனைவரையும் சந்திக்கப்போவதில் மிக்க மகிழ்ச்சி...
ReplyDeleteஆமாம் நண்பரே...எனக்கும் தான் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி
Deleteபயணமும் பதிவர் சந்திப்பும் சிறக்க வாழ்த்துகள்......
ReplyDeleteஎன்னால் சந்திப்பில் கலந்து கொள்ள முடியுமா என இன்னும் தெரியவில்லை....:(
வாங்க சார்..உங்க வருகையை எதிர்பார்க்கிறோம்...
Deleteவாங்க வாங்க ........இந்தியாவிலேயே ஏன் இந்த உலகத்திலேயே ... வேன் வச்சிருக்குற கரகாட்ட கோஷ்டி சாரி பதிவர் கோஷ்டி .அது கோவை கோஷ்டிதான்
ReplyDeleteஹிஹிஹி...ரொம்ப தான் புகழுறீங்க....
Deleteசூப்பரா எழுதியிருக்கீங்க ஜீவா..கைவசம் நகைச்சுவை எண்ணங்களும் நிறைய இருக்கு போல கலக்கலா இருக்கு பதிவு....
ReplyDeleteவாங்க..எழில்...உங்க வருகையும் சந்தோசம் தான்..
Deleteசார்...
ReplyDeleteஎன்னியும் சேத்திக்குவீங்களா சார்?
வாய்யா....நீ இல்லாமலா....
Delete// கோவையில இருந்து பதிவு எழுதறவங்க///
ReplyDeleteசார்... நான் பொள்ளச்சியில இருந்து எழுதறேன். என்ன பண்ணலாம் சார்?
பொள்ளாச்சியும் கோவைல தானே இருக்கு...ஒண்ணு பண்ணு மிஸ்டர்...பொள்ளாச்சில இருந்து கோவை வந்திரு...போலாம்...
Deleteபோகும்போதும் வர்றபோதும் உற்சாகபானம் உண்டா என்பதை வெளக்கவும்!
ReplyDeleteநான் இருக்கும் போது அது இல்லாமலா...ஹிஹிஹி...
Delete