சென்னையில் மிகப்பெரிய பதவி வகிக்கிறவர், நம்ம பிளாக்கோட தீவிர வாசகர் மற்றும் இப்போ நெருங்கிய நண்பராகி எப்பவும் நம்ம கூட தொடர்புல இருக்கிறவர்.எப்போ பதிவு போட்டாலும் அவரிடமிருந்து ஒரு பாராட்டு நிச்சயம் வந்திரும் போன்ல.இன்னும் சந்தித்தது இல்லை.ஒரு நாள் அவரிட மிருந்து போன் கால்.நான் கோவைல இருக்கேன் அப்படின்னாரு....காந்தி புரத்துல கொஞ்சம் வேலையா இருக்கேன்.கொஞ்ச நேரத்துல முடிஞ்சிடும் உங்களை பார்க்கணுமே அப்படின்னு சொல்ல இதோ வர்றேன் அப்படின்னு சிங்கத்தை கிளப்பினேன்.முதல் முதலா அன்னிக்குத்தான் பார்க்கிறேன் அவரை.ரொம்ப பகிர்ந்து கொண்டோம் பல விசயங்களை.அன்னிக்கு வெள்ளிக்கிழமை வேற ...மருதமலை போகலாமா ன்னு கேட்க....ஓ தாராளமா போலாமே அப்படின்னு அம்மணிகளை தரிசிக்கும் ஆவலில் சரி என்று சொல்லி அவரை கோவிலுக்கு கூட்டிச்சென்றேன்.எனக்கு முருகனை தரிசிக்கும் ஆவல் இல்லாததால் அம்மணிகளின் தரிசனம் வேண்டி கோவில் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டேன்.(நல்ல வேளை யாரும் பிச்சை போடல..)அவர் மட்டும் மேலே சென்று முருகனை தரிசித்து விட்டு வருகிற வரைக்கும் இங்கே தாராளமாய் வேறு தரிசனம் பெற்றுக்கொண்டிருந்தேன்.
அவர் வந்தவுடன் அங்கிருந்து கிளம்பினோம்.இரவு நீலகிரி எக்ஸ்பிரஸில் அவர் சென்னை பயணம்..அதற்கு முன் சாப்பிட போலாம் என்று முடிவு செய்து அசைவம் சுத்தமாய் வேண்டாம் என அவர் சொல்லிவிட கொஞ்சம் கலக்கமுற்றேன்.ஆனால் அவரோ காலையில் அங்கு தான் சாப்பிட்டேன் என்றும் எப்பொழுது கோவை வந்தாலும் இங்கு தான் தங்குவேன், சாப்பிடுவேன் என்றும் புகழ இன்னிக்கு நாமும் ஒரு கை பார்க்க வேண்டும் என்று அவர் தங்கியிருந்த கீதா ஹால் ஹோட்டலுக்கு சென்றோம்.
(இந்த போட்டோ இணையத்துல சுட்டது)
ஹோட்டல் ஒரு பழைய கட்டிடத்தில் இருப்பது போல தோன்றினாலும் உள்ளே நவீன வசதிகளுடன் இருக்கிறது.ஹோட்டலுக்கு முன்பாக புத்தகங்கள் விற்பனை படு ஜோராக போய்க்கொண்டிருந்தது.அங்கே எழுதப்பட்டிருந்த ஒரு போர்டினுள் நீர் தோசை என எழுதி இருக்கவே என்னவாக இருக்கும் எப்படி இருக்கும் என்ற யோசனையோடு உள் நுழைந்ததும் ஒரு கல்யாண பந்திக்குள் நுழைந்தது போல உணர்வு, பார்த்தால் அங்கே வரிசையாய் டேபிள் போடப்பட்டு ஒரே கூட்டம் கூட்டமாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.அதற்கேற்றார் போல் பரிமாறுபவர்களும் பாய்ந்து கொண்டிருக்கின்றனர்.
நாங்களும் ஒரு வரிசையில் ஐக்கியமானோம்.வாழை இலை போட்டு என்ன வேண்டும் என கேட்பதற்கு முன்பே மனதினுள் குடைந்து கொண்டிருந்த நீர் தோசையை சொல்லி விட்டு அதைப்பற்றி கேட்க பச்சரிசியில் செய்வார்கள் என்ற சிறு குறிப்பை மட்டும் சொல்லிவிட்டு அடுக்களைக்குள் பாய்ந்தார்.
அக்கம் பக்கம் சுத்திப்பார்க்க அம்மணிகளின் கூட்டம் ரயில் பிடிக்கும் அவரசத்தில் ஒரு பிடி பிடித்துக்கொண்டு இருந்தது இலையில் இருந்தவைகளை.
சுட சுட நீர் தோசை வர கூடவே மூன்று சட்னிகளும் வர ரொம்ப அருமையாக இருந்தது.முதல் முதலாக இந்த நீர் தோசை சாப்பிடுகிறேன்.இந்த ஹோட்டல் ஸ்பெசல் என்பது அப்போது தான் தெரிந்தது.மிக நன்றாக இருக்கிறது.வயிற்றுக்கு கேடு இல்லாமல் இங்கு தயாரிக்கும் அனைத்து உணவுகளும் மிக சுவையுடன் இருக்கின்றன.
இந்த ஹோட்டலின் வரலாறு பத்தி அப்போது தான் கேள்விப்பட்டேன். சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே (1938 ) இந்த ஹோட்டல் ஆரம்பிக்கப் பட்டிருப்பதாகவும் இன்னும் அதே இடத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் சொன்னார்கள்.மேலும் இப்போதைய டிரெண்டுக்கு ஏற்றபடி மாறிக்கொண்டு வருவதாகவும், அதே சுவை, தரம். சுகாதாரம் இன்னும் இருக்கிறது என்றும் சொன்னார்கள்.
இந்த ஹோட்டலில் குவியும் மக்களின் எண்ணிக்கையே அதன் சுவைக்கு அடிமையாக இருப்பதை காணலாம்.கொடுக்கும் பணத்திற்கு திருப்தியான உணவை உண்டு விட்டு வரலாம்.வீட்டு முறைப்படி அடை அவியல். நீர் தோசை, மசால் இட்லி, ரோஸ்ட் வகைகள், என சைவத்தில் ஆரோக்யமான உணவினை வழங்குகின்றனர்.பால் வகைகளில் நிறைய இருக்கின்றன.
இது ரோஸ்ட்.எப்படி மொறு மொறுன்னு...
கண்டிப்பாக சைவ உணவுப்பிரியர்கள் மட்டுமல்ல அசைவ விரும்பிகளும் விரும்பும் இடம்.இந்த ஹோட்டலிலேயே தங்கும் விடுதிகள் மிக குறைந்த விலையில் இருக்கின்றன.
திருப்தியா சாப்பிட்டு விட்டு அவரை வழியனுப்பி விட்டு வந்து சேர்ந்தேன்.நல்ல நண்பரை தந்த இந்த பதிவுலகத்திற்கு நன்றி.
கோவை ரயில்வே ஸ்டேசன் எதிர்ப்புறம் செல்லும் சாலையில் கொஞ்ச தூரம் வளைந்தும் நெளிந்தும் பயணித்தால் கீதா ஹால் மற்றும் ஹோட்டலை அடையலாம்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
அது சாலைன்னு சொன்னா நாக்கு அழுகிடும். சந்துன்னு சொல்லணும். அது ஒன்வே. போகலாம், வரக்கூடாது. அப்படியே போயி ஆர்ட்ஸ் காலேஜ் ரோட்டிற்குப் போயிடணும்.
ReplyDeleteநான் ஸ்கூட்டர் வாங்கின புதிசுல அந்த சந்தில ராங் சைடில வந்து போலீசுக்கு 5 ரூபாய் லஞ்சம் கொடுத்து தப்பியிருக்கிறேன். வருடம் 1974
வணக்கம் சார்...அந்தப்பக்கம் போயிருக்கீங்க...கடைக்கு போனீங்களா..? அந்த சந்து செம டிராபிக் ஆகும்.எப்பவும்...
Deleteகீதா கபேயில் நீர் தோசை கிடைப்பதை தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteநன்றி ஜீவா.
நான் ஒரு நீர் தோசை பக்தன்.
நீர் தோசை கர்நாடகாவில் பிரபலம்.
கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு போய்விட்டு அங்கிருந்து சிருங்கேரி போகும் வழியில் ‘தீர்த்தள்ளி’ என்ற ஊர் வரும்.
அந்த ஊர் பஸ்நிலையம் அருகில் ஒரு ஓட்டல் உள்ளது.
அங்குதான் முதன்முதலில் நீர்தோசை சாப்பிட்டேன்.
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக,
ஜனவரி 1 புத்தாண்டு அன்று ‘நீர்தோசையுடன்’ எனது காலை உணவு தொடங்கும்.
தூய தேங்காயும், பச்சை மிளகாயும் அரைத்த சட்னி மட்டுமே சைட் டிஷ்.
எழுதும் போதே நா ஊறுகிறது.
வணக்கம் சார்...உங்க அனுபவம் தெரிந்து கொண்டேன்.ஒரு நாள் போலாம் கர்நாடகா...
Deleteஎன்னாது நீர் தோசையா...? எனக்கு இது புதுசா இருக்கேய்யா...!
ReplyDeleteபடங்களைப் பார்த்தாலே சாப்பிடனும்னு தோணுது...!
ஆமா விளம்பரத்துக்கு ஹோட்டல்காரன் எம்புட்டு தந்தான் ஹி ஹி...
ஆமா மாம்ஸ்..நானும் ஆச்சரியபட்டேன்.ரொம்ப தண்ணியா கொடுப்பாங்களோன்னு...நல்லா இருந்துச்சு...
Deleteஹிஹிஹி டோட்டல் பில்லுல 50% லெஸ்...
தோசையைப் பாத்தாலே நாக்கில எச்சி ஊறுதே...
ReplyDeleteதோசை மட்டுமல்ல ..இங்க வர்ற அம்மணிகளை பார்த்தாலும் ஊறும்...ஹிஹிஹி
Deleteஆகா...! நீர் தோசை சூப்பர்...
ReplyDeleteவணக்கம் சார்...வர வர உங்களின் முதல் இடம் பறி போகிறது..ஹிஹிஹி
Deleteதமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்...
ReplyDeleteகணினி பிரச்சனை சரியாகி விட்டதா...?
நன்றி.தி.த...
Deleteசரியாகி விட்டது ஆட்டோமேடிக்காக...
கோவையில உனக்கு தெரியாத ஒரு ஹோட்டலும் உண்டா ஜீவா? அப்புறம் அந்த நீர் தோசை எங்க வீட்டுல ஜனவரி 1 அன்னிக்கு செய்வாங்க. எங்க வீட்டுல கப்பி காய்ச்சுன தோசைன்னு சொல்வோம்.
ReplyDeleteநிறைய இருக்குக்கா...ஆனா பைசா செலவாகுது ரொம்ப...
Deleteஒரு நாள் வரேன் கப்பியை ஊத்தி தாங்க...
நீர் தோசை...? புதிய சங்கதி..! டேஸ்ட் எப்படி இருக்கும்..?
ReplyDeleteநன்றாக இருக்கு சாரே...வாங்க ஒரு நாள்...
Deleteஎங்க அப்பத்தா நீராப்பம் சுடும். கூடயே பீட்ரூட் சட்னி ஒரப்பா இருக்கும்....
ReplyDeleteஹ்ம்மம்ம்ம்ம்...டிவைன்.....
யோவ்...உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயா...சாப்பிட்டு விட்டு பதிவு போடறேன்...
Deleteபச்சரிசி மாவு தோசை எப்பவோ வீட்டில சாப்பிட்ட ஞாபகம் மறுபடி வந்திடுச்சு. சாப்பிட்டுட வேண்டியதுதான்!
ReplyDeleteநன்றி ஜனா சார்....வாங்க...போலாம்..பில் நீங்க தான்னு அடம்பிடிக்க கூடாது.நானே சொல்வேன் நீங்க பே பண்ணுங்க அப்படின்னு...ஹிஹிஹி
Deleteஜீவா உங்கள் பதிவைப் படித்து (பார்த்து விட்டு) நானும் எனது நண்பரும் ( ஆளும்கட்சிகாரர்) மதுரை அம்மா மெஸ் சென்றோம். செமயா கட்டி விட்டு வந்து விட்டேன். இப்போதெல்லாம் ஆளும்கட்சி ஆட்களுக்கு பார்சல் நிறைய வாங்குகின்றார்களாம். நண்பர் சொன்னார். உங்களுக்கு ஏதும் கமிஷன் கிடைக்குதா?
ReplyDeleteவாங்க தங்கவேல்...நன்றாக இருக்கீங்களா...?
Deleteசெம கட்டு கட்டி இருக்கீங்க...பில் கொடுத்தீங்களா...ஆளுங்கட்சி வேற,,,,
இனிமேல் தான் கமிசன் பிட் போடனும்...ஹிஹிஹி
2004 ஆண்டு கீதா ஹோட்டலில் தங்கி இருந்தேன். படு சுமாராய் இருந்தது. இப்போது ரகளையாக இருக்கும் போல. எனது பர்ஸுக்கு வெடி வைப்பதில் உங்களை விட வேறு எவரும் தேவையில்லைபோலும். நன்றாக இரும் !
ReplyDeleteசைவம் எப்பவும் கொஞ்சம் பிடிக்காது ஏன்னா நம்ம வீட்டுல சாப்பிட்டு இருக்கோம் நிறைய..ஆனா சண்டே மட்டும் சாப்பிடற நான்வெஜ் செமயா இருக்கும்ல அது மாதிரி தான்.சைவம் போர் தான்.
Deleteநீர்த்தோசை ன்னு புதுசா சொல்லி படமும் போட்டு நாவில் நீர் ஊற வைத்துவிட்டீர்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஎனக்கே புதுசா இருந்துச்சு,,அதான் சாப்பிட்டு பார்த்தேன்.நன்றி,,,
Deleteஇங்கே மதிய உணவு சாப்பிட்டிருக்கேன்,, சுமார் தான்.இருந்தாலும் நீர் தோசை புதுசா இருக்கு ட்ரை பன்னிருவோம்..
ReplyDeleteஓ....டிரை பண்ணுங்க..சாயந்திரம் போனா நல்லா இருக்கும்,,,ஹ்ஹிஹி
DeleteThe lunch used to be great there. They used to give a "mor kuzumbu". You should try that. I used to eat there regularly when I was in Coimbatore(91-92). Happy to know they are still there and going great.
ReplyDelete-Surya
நன்றி நண்பரே...
Deleteஇன்னும் லன்ச் சாப்பிட்டதில்லை அங்கு...சைவம் அதிகமா சாப்பிடமாட்டேன்.அன்னிக்கு நம்ம நேரம் நீர் தோசைன்னு புது பதார்த்தம்..சரின்னு உள்ள பூந்துட்டேன்,,,,
நன்றாக இருக்கின்றது.
ReplyDeleteரொம்ப நன்றிங்க...
Deleteஎப்போ கூட்டிட்டு போகப் போறே மச்சி?
ReplyDeleteவா மச்சி..உனக்கு இல்லாததா...எப்போ போலாம்.
Deleteஹாய் எல்லோருக்கும்
ReplyDeleteநீர் தோசை -- புதிதாய் இருக்கிறது நண்பா... இதுவரை சாப்பிட்டதில்லை! அடுத்த கோவைப் பயணத்தின் போது சாப்பிடலாம்!
ReplyDeleteஎப்படியோ உங்களை சைவம் சாப்பிட வைத்த பதிவருக்கு ஒரு "ஓ"... எல்லாம் ஒரு பொறாமைதான்....
ReplyDeleteஇப்பொழுது கீதா ஹால் மற்றும் அரசன் ஹால் உள்ளது .முறத்தில் சாதம் பரிமருவதே தனி சிறப்புத்தான்
ReplyDeleteநண்பா.. நீர் தோசை சாப்பிட சிறந்த இடம், மங்களூரு, இங்கு சுடப்படும் நீர்ந்தோசை தனி ருசி, தேங்காய் சட்னி சேர்த்து தின்னா ஒரு பத்து பனிரெண்டு உள்ளே தள்ளலாம்..
ReplyDeleteவாழ்த்துக்கள்