Wednesday, July 10, 2013

கோவை மெஸ் - ஹோட்டல் ஆலியா (ALIYA Hotel, Thrissur), திருச்சூர், கேரளா

ஒரு தடவை நானும் நம்ம உலகசினிமா ரசிகனும் திருச்சூர் போயிருந்த போது ஒரு மத்தியான வேளை...வயிறு சும்மா கப கபன்னு  பத்தி எரியுது..ஏற்கனவே பெட்ரோல் (ஹிஹிஹி.....) போட்டு இருக்கிறதால் சீக்கிரம் சாப்பிடனும் இல்லேனா ரொம்ப மோசமா போயிடும்னு சொல்லி எங்காவது நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போங்கப்பா என்று சொல்ல டாக்ஸி சேட்டன் போன இடம் ஹோட்டல் ஆலியா.

புறவாசல் வழியாத்தான் கூட்டிட்டு போனாங்க..ஏன்னா கார் பார்க்கிங்லயே ஒரு வழி கொடுத்து இருக்காங்க.உள்ளே சென்றதும் பழைய கட்டிடம் என்றாலும் நன்றாக வைத்திருக்கிறார்கள்.நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்திருக்கின்றனர்.இது அந்த ஏரியாவில் ரொம்ப ஃபேமஸான ஹோட்டல்.நாங்க போன நேரத்தில ஒரு சில சேச்சிகள் சேட்டன்கள் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.கேரளாவோட பாரம்பரியமிக்க உணவுகள் புட்டு அப்பம் கடலைக்கறி, எல்லாம் காலைல மட்டும் தான் கிடைக்கும்னு சொல்லவும் சரி... மட்டை அரிசி சாப்பிடுவோம் அப்படின்னு சாப்பாடு ஆர்டர் பண்ணினோம்.
நம்மூர் மாதிரி தலை வாழை போட்டு கூட்டு பொரியல் எல்லாம் வைக்கல..எல்லாம் பீங்கான் பிளேட்.சாதம் சூடா...சும்மா பொல பொலன்னு....மல்லிகைப்பூ போல..... செம சூப்பரா இருந்துச்சு...


4 வித பொரியல் வச்சாங்க..கேரளாவுல நமக்கு பிடிக்காத ஒண்ணு இந்த பொரியல் தான்.அதிகமா விரும்பி சாப்பிடாத காய்களில் தான் பொரியல் கூட்டு பண்ணுவாங்க போல...அதனால அதிகம் அதை விரும்ப மாட்டேன்.
மீன் குழம்பு கொண்டு வரச்சொல்லி அந்த மட்டை சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட அட...என்னா டேஸ்ட்...என்னதான் சாம்பார், ரசம் மோர்ன்னு எதை ஊற்றி சாப்பிட்டாலும் அந்த மட்டை சாதத்திற்கு நல்லாவே இருக்காது.ஆனா மீன் குழம்பு மட்டும் வண்டி வண்டியா வயித்துக்குள்ள இறங்கும்.அவ்ளோ டேஸ்டியா செம காம்பினேசனா இருக்கும்.
அப்புறம் ஒரு ஃபிஷ் ஃபிரை கொண்டு வரச்சொன்னோம்.கேரளாவுல கரிமீன் தான் பேமஸ்.பெரிய ஹோட்டல்களில் மத்தி வைத்திருக்க மாட்டார்கள்.எண்ணையில பொரிச்ச மீன் அவ்ளோ டேஸ்ட்.கேரளாவுல எங்க வேணுமின்னாலும் மீன் தைரியமா சாப்பிடலாம்.அந்த கேரளா கைமணத்தோட நல்ல வாசத்தோட செமயா இருக்கும்.
சோறு உள்ளே போறது கூட தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.வயிறு நிரம்பியதும் போதும்ங்கிற அலாரம் அடிக்கவே ஏவ்...என்று ஏப்பம் விட்டுக்கொண்டே கை கழுவ சென்றோம்.
மட்டை சாதம், பிஷ் பிரை இருவருக்கும் சேர்த்து 280.00.தான்.மிக திருப்தியான சாப்பாடு.இன்னும் நிறைய மெனுக்கள் பீப் கறி, சிக்கன், மட்டன் அப்படின்னு இருக்கு.அதெல்லாம் வர்ற வழியிலேயே பெட்ரோல் போடும் போதே சாப்பிட்ட படியால் இங்கு சாப்பிடவில்லை.
திருச்சூர் சென்ரலில் இந்த ஹோட்டல் இருக்கிறது.ரயில்வே ஸ்டேசனில் இறங்கி ஏதாவது சேட்டன்கிட்டே கேட்டாலோ, இல்லை ஆட்டோ பிடித்தோ வந்து விடலாம்.ரொம்ப காலத்து ஃபேமசான ஹோட்டல்.நடந்தே வந்தாலும் நல்லா இருக்கும் கேரள வருங்கால நயன்தாரா, நஸ்ரியா, அமலாபால், அசின் அப்படின்னு ஏகப்பட்ட கேரள அம்மணிகளை பார்க்கலாம்.ஹிஹிஹி

நேசங்களுடன்
ஜீவானந்தம்

24 comments:

  1. ஓகே ஓகே, பெட்ரோல் கொஞ்சம் கம்மியாதான் போட்டு இருந்தீங்க போல...... பீ கேர்புல், நான் வண்டியை சொன்னேன் :-)

    ReplyDelete
    Replies
    1. வாங்க உலகம் சுற்றும் வாலிபரே....ஒரு லிட்டர் தான் பிடிக்குது...ஹிஹிஹி...நானும் வண்டியைத்தான் சொன்னேன்...

      Delete
  2. சிகப்பரிசி சாதம் - இதைத்தான் மட்டை சாதம்னு சொல்றீங்களா?

    சிகப்பரிசி சாதம் சாதாரணமா, அதிகமா சாப்பிட முடியாது.... சாம்பார்/ரசம் சேர்த்தாலும் தனித்தனியா இருக்கும். செரிமானம் ஆகறதும் கஷ்டம், அதனால நம்ம ஊர் ஆளுங்க சாப்பிட மாட்டாங்க..... நான் கேரளா போனா சாப்பிடறது இந்த சிகப்பரிசி சாதம் தான்!

    ReplyDelete
  3. வணக்கம் நண்பரே...
    மட்டை அரிசிதான்...குண்டு குண்டா சும்மா ஹன்சிகா மாதிரி இருக்கும்.என்ன மேக்கப் போடாம இருக்கும்.சாம்பார் புளிசெரி, ரசம் மோர் என எதுவும் ஒட்டாது ....ஆனா மீன் குழம்பு, பீப் கறிக்கு செம மேட்ச்...பக்குனு ஒட்டிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. ஹன்சிகா இளைச்சு ரொம்ப நாள் ஆச்சு மாப்பு.. வேறே உதாரணம் சொல்லு.. :-)

      Delete
  4. நடந்தே போனா ‘நஸ்ரியாவை’ தரிசிக்கலாம்.

    என்ன ஜீவா...நஸ்ரியாவை மறந்தீட்டீங்களே!

    இதுக்குத்தான் ‘பெட்ரோல்’ கொஞ்சமா போடணும்.

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ...நஸ்ரியாவை எழுதி இருக்கீங்களே...
      இதுக்குத்தான் ஒழுங்கா ஜீவா கூடப்போகும் போது நாமளும் ‘பெட்ரோல்’ போடணும்.

      Delete
    2. நஸ்ரியா பத்தி நான் எழுதிட்டு இருக்கிறதால நண்பன் மறந்துட்டான் போலிருக்கு.. அப்படியா மச்சி..

      Delete
    3. இது தான் சந்துல சிந்து பாடறதா மச்சி

      Delete
  5. பெட்ரோல் போடும் போதே..பெட்ரோல் போடும் போதே..ன்னு சொல்றீங்களே பரவாயில்லையே பங்குக்கு பக்கத்திலேயே ஹோட்டலும் இருக்குதா ? திருச்சூரில‌ ஒரு தபா முட்டை பிரியாணின்னு சொல்லி எலுமிச்சை சாதம் மாதிரி ஒன்றுக்கு நடுவுல முட்டைய வெச்சு குடுத்தானுங்க பாருங்க...

    ReplyDelete
    Replies
    1. நல்லா பார்த்தீங்களா..எலுமிச்சை சாதம் தானா...?

      Delete
  6. வடக்கஞ்சேரியில பாலம் தாண்டி ரைட்ல..ஒரு ஹோட்டல் பரோட்டா,முட்டை குருமா +++ நல்லா இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த விசிட் அங்க தான்....குரு சொன்னதுக்கு அப்புறம் மறுப்பேது

      Delete
  7. அசைவ பதிவுன்னாலும் உங்க எழுத்து நடைக்காக படிச்சேன்! ரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
  8. அடிக்கடி பெட்ரோல் சாப்பிடுது வண்டி. பார்த்து வண்டி ஓனரம்மாக்கு விசயம் தெரிஞ்சு வண்டியை வெளில விடாம பார்த்துக்க போறாங்க!!

    ReplyDelete
  9. அதெப்படி மாப்ளே உன் வண்டி மட்டும் எவ்வளவு பெட்ரோல் பெட்ரோல் ஊத்தினாலும் மறுபடியும் கேட்டுக்கிட்டே இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. ஆமா மாப்ள...நீ இருக்கும் போது போடற பெட்ரோல விட நீ இல்லாத போது போடறது கம்மியா இருக்கு,,

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....