Monday, July 22, 2013

கரம் - 8 - 22.7.2013 - ஆ(வி)பத்து - மினி பதிவர் சந்திப்பு

          எனது கல்லூரி நண்பனும், ஆவிப்பா எழுதி நம்மை கதிகலங்க வைக்கும் நண்பரும், பதிவுலகில் பேய், பிசாசு என அழைக்கும் கோவை ஆவியுமான, கோவை மாவட்ட நஸ்ரியா ரசிகர் மன்ற தலைவரும், உடல் பொருள் ஆவி என அனைத்தும் நஸ்ரியாவிற்கே என எழுதிக்கொடுத்திருக்கும் கோவை ஆவிஎன்கிற ஆனந்த் போன சனிக்கிழமை அன்னிக்கு பொள்ளாச்சி போகும் போது ஏதோ காத்து கருப்பு (ஆவிக்கேவா....) அடிச்சிருக்கும் போல....(அனேகமா மரியான் ன்னு நினைக்கிறேன் ) திடீர்னு பிரேக் பிடிச்சதால் வண்டியில இருந்து பறந்து போய் கீழே விழுந்து தன் இரண்டு கைகளிலும் விழுப்புண்ணை (விழுந்து + புண்ணை ) ஏந்தியிருக்கிறார்.நல்லவேளை ஹெல்மெட் அணிந்திருக்கிறார் இல்லை எனில்  மொட்டைத்தலை சிதறு(தலை)தேங்காய் ஆகிருக்கும்.(தயவு செய்து வண்டியில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியுங்கள்).அதனால் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி உடல் நலமின்றி இருக்கிறார்.
அவர் உடல் நலம் தேறி மீண்டும் ஆவிப்பா எழுத வர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.மச்சி சீக்கிரம் வா ...உனக்கு சத்ரியன், பரதன், குமரன் S/o மஹாலட்சுமி, விஜய் நடிச்ச பத்ரி, இந்த படங்களில் இருந்து ஒரு பாட்டு அனுப்பறேன். அதை கேட்டு சீக்கிரம் குணமாகு..

மச்சி...ஆப்ரேஷன் லாம் பண்ற...எப்போ ட்ரீட்...ஹிஹிஹி  

*********************************
மினி பதிவர் சந்திப்பு..

நெல்லையின் ஆபிசர் என அழைக்கப்படும் நண்பர் சங்கரலிங்கம் அவர்கள் போன மாதம் கோவைக்கு வந்திருந்தார்.அவரின் உடன்பிறப்புகளும் வந்திருந்தனர். ஆபிசர் பார்க்க இளைஞனாக இருக்கிறார்.(ஹேர்டை, டீ ஷர்ட் போட்டு ஒரு யூத்தாகவே இருக்கிறார் இன்னும் )அவரை அழைத்துக்கொண்டு ப்ரூக் பீல்ட்ஸ் மால் சென்றேன். அம்மணிகளின் வருகை குறைவாக இருந்தாலும் அவர் மிக மகிழ்ச்சியாக இருந்ததை கண்டு கொண்டேன்...அதற்குள் நண்பர் உலக சினிமா ரசிகனுக்கு ஒரு போன் போட அவரும்.ஜோதியில் ஐக்கியமானார். இந்த சந்திப்பில் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.நன்றி பதிவுலகம்..

*****************************

அது போலவே இன்னொரு திருநாளில் பெங்களூரில் இருந்து நண்பர் கடல்பயணங்கள் சுரேஷ் கோவை வருவதாக சொல்லி இருந்தார்.அவரை சந்திக்க ப்ளான் பண்ணியிருந்தோம்.ப்ரூக்பீல்ட்ஸ் மாலிற்கு முன்னதாகவே ஆவியும் உலக சினிமா ரசிகனும் வந்திருக்க அவர்களுடன் கலந்து கொண்டேன்.சுரேஷ் வரும்வரை என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கையில் கேஎஃப்சி யில்  கூட்டம் பின்னி எடுக்க அங்கே நகர்ந்தோம்.கோவை ஆவியின் கைங்கர்யத்தில் சிக்கன் பீஸ்களோடு அருகே இருந்த அம்மணிகளையும் விழுங்கிகொண்டிருக்க சுரேஷ் வந்து விட்டதாக சொல்ல வாஸ்துக்காக அருகில் இருந்த இட்லி கடைக்கு ஷிஃப்ட் ஆனோம்..சுரேஷ் பைஜாமா போட்டு சிக்கென வந்திருந்தார்.அவரிடம் ஊர் ஞானம், உலக ஞானம் லாம் பேசிக்கொண்டே காபி குடித்தோம்.அதற்குள் எழில் மேடமும் வர அனைவரும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.நல்ல நண்பரை கொடுத்த பதிவுலகத்திற்கு நன்றி.


**************************


அதே மாதிரி இன்னொரு சந்திப்பு....இதை படிக்க
 உலகசினிமா ரசிகன், கவியாழி கண்ணதாசன், கோவை ஆவி மற்றும் நான்.

நிறைய நண்பர்களை கொடுக்கும் பதிவுலகிற்கு நன்றி

நேசங்களுடன்
ஜீவானந்தம்

15 comments:

  1. கோவை மாவட்ட நஸ்ரியா ரசிகர் மன்ற தலைவர் (ஹிஹி...) விரைவில் குணமடைய வேண்டும்... இனிய சந்திப்புக்கள் 3...

    சென்னையில் சந்திப்போமா...?

    ReplyDelete
  2. அட.... நீங்க கேஎப்சி -யிலேயே இருந்திருக்கலாம் ஜீவா !! இடத்தை ஏன்தான் மாத்துநீன்களோ ? அந்த சந்திப்பை மறக்கவே முடியாது, உங்கள் எல்லோருக்கும் நான்தான் நன்றி சொல்ல வேண்டும் !

    நண்பர் கோவை ஆவி விரைவில் நலம் பெற பிராத்திக்கிறேன்.

    இப்பொது உங்களது கோவை நேரம் புத்தகம்தான் படித்து கொண்டிருக்கிறேன், மிகவும் அருமை !

    ReplyDelete
  3. ஆவி உடல்னலம் தேறி ஆவிப்பா எழுதி மீண்டும் நம்மைக் கலங்கடிக்க வேண்டும்...

    ReplyDelete
  4. ஆனந்த் விரைவில் பூரண குணம் பெற்றிட வேண்டிக்கிள்கிறேன் இறைவனிடம்.....

    ReplyDelete
  5. கோவை ஆவி பூரண நலம் பெற பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  6. கோவை ஆவி ஆனந்த் விரைவில் பூரணகுணமாகி வர ஆண்டவனை பிரார்த்திக்கிறோம் ............
    விபத்துக்குள்ளாகி இருப்பவர்களிடம் விருந்து கேட்ட பெருமை உங்களுக்குதான் ( நல்லா வருவீங்க )

    ReplyDelete
  7. கோவை ஆவி விரைவில் குணமாக எனது பிரார்த்தனைகளும்....

    பதிவர் சந்திப்புகள் தொடரட்டும்.....,

    ReplyDelete
  8. Kovainagar Namitha Rasigar mandra thalaivar kanddipaga minddum ghost katigalai eeluthi nammai kalanga addikavendum

    ReplyDelete
  9. Kovainagar Namitha Rasigar mandra thalaivar kanddipaga minddum ghost katigalai eeluthi nammai kalanga addikavendum

    ReplyDelete
  10. ஆவியின் உடல்நலம் பெற வேண்டுகிறேன், யப்பா இந்த எலவுக்குதான் நான் பைக் ஓட்டுறதையே நிப்பாட்டிட்டேன்.

    ReplyDelete
  11. நீங்கள் மாட்டிக் கொண்டது ? : http://nanjilmano.blogspot.in/2013/07/blog-post_22.html

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. நண்பர் ஆனந்த ராஜா விஜயராகவன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்

    ReplyDelete
  13. கோவை ஆவி பூரண நலம் பெற வேண்டுகிறேன்.

    பதிவர் சந்திப்புகள் கண்டுகொண்டோம்.

    ReplyDelete
  14. ஆவியையே ஆவி அடித்ததா

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....