திண்டுக்கல் வேணு பிரியாணி - திண்டுக்கல்
நேசங்களுடன்
ஜீவானந்தம்
என்னமோ தெரியல இந்த வாரம் பிரியாணி வாரம் போல இருக்கு.பொள்ளாச்சிக்கு அப்புறம் திண்டுக்கல்...விசயத்துக்கு வாரேன்.நேற்று திண்டுக்கல் போனேன்.நிறைய ஊரில கிளைகளை பரப்பி இருக்கிற வேணு பிரியாணி கடைக்கு போனேன்.சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கிற மாதிரி திண்டுக்கல் வேணு பிரியாணி கடைக்கு போனேன்.
மதியம் 12 .30 மணிக்கு போனதால் இடம் கிடைத்தது.பிரியாணி, வஞ்சிரம், கோலா உருண்டை ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம் .மிக மிக ......சுவையுடன் ...மிக ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.அப்புறம் வெளியே வந்து பார்த்தால் கூட்டம் கியூல நிக்குது.அப்புறம் உட்காருவதற்கு தென்னை ஓலை வேயப்பட்ட கூரை இருக்கிறது.3 மணி இல்லேனா 3 30 மணிக்குள் தீர்ந்து விடுமாம்.நீந்துறது, நடக்கறது , ஓடறது அப்புறம் பறக்கிறது (விமானம்) தவிர அனைத்து அசைவ வகைகள் இருக்கின்றன.சாப்பிட தான் வயிற்றுல இடம் இல்ல.வேணு பிரியாணி தெற்கு ரத வீதியில் இருக்கிறது.அரை பிளேட் பிரியாணி 130 வஞ்சிரம் ரொம்ப பெரிய சைஸ் 120 ....விலை யை விட தரமும் சுவையும் ரொம்ப ரொம்ப அதிகம்....நான் ஏசி மற்றும் ஏசி ஹால் இருக்கிறது.
நேசங்களுடன்
ஜீவானந்தம்