Tuesday, October 18, 2011

திருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு வந்தேன்.இப்போது கோவில் மிகவும் நன்றாக பராமரிக்கப்பட்டு இருக்கிறது.கோவிலை சுற்றி பக்தர்களின் வசதிக்காக வெளி பிரகாரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.அப்புறம் தரிசனம் பெற செல்பவர்கள் வரிசையாக செல்ல வழி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.தரிசனம் டிக்கெட் வாங்கிகொண்டு உள்ளே நுழைந்தால் ரொம்ப தூரம் செல்ல வேண்டிய பிரமை ஏற்படுகிறது.உள்ளே மாடிப்படிகள் எல்லாம் வைத்து இருக்கிறார்கள்.எல்லாம் கடந்து சென்றால் முருகனை தாரளமாக தரிசித்து வரலாம்.முருகனின் கோஷம் அரோகரா அதிகம் ஒலிக்கவில்லை.ஆயினும் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.நாழிகிணறு என்று ஒரு சுனை இருக்கிறது.மொத்தம் உள்ள 24 சுனைகளில் இந்த நாழி கிணறில் மட்டுமே நீர் வருகிறது.கோவிலை ஒட்டி உள்ள கடல் எப்போதும் அலையுடன் இருக்கிறது.பக்தர்கள் அதில் நீராடி கொண்டு இருக்கின்றனர்.கோவையில் இருந்து திருந்செந்தூர் 490 கிலோமீட்டர் இருக்கிறது.பல்லடம், திண்டுக்கல், மதுரை, அருப்புகோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் என சென்றோம்.






இன்னும் தொடரும் .....
திருச்செந்தூர் பயணத்தில் எடுத்த புகைப்படங்கள்
இன்னும் கொஞ்சம்...

Monday, October 10, 2011

திண்டுக்கல் டு திருச்சி தேசிய நெடுஞ்சாலை

தேசிய நெடுஞ்சாலை
திண்டுக்கல் டு திருச்சி சாலையில் பயணிக்கும் போது எடுத்தது.
ஓங்கி உயர்ந்த மலை, தவழும் வெண் மேகம் கொண்ட வானம்,இயற்கையை அள்ளி தெளித்து இருக்கிறது

இன்னும் கொஞ்சம்...

Friday, October 7, 2011

விஜய் பார்க் ஹோட்டல் - ரொம்ப மோசம்

சென்னை அரும்பாக்கம் , வடபழனி நூறடி சாலையில் இருக்கிறது இந்த விஜய் பார்க் ஹோட்டல்.




கிட்டத்தட்ட 13 ஹால் கள் உள்ளன.அனைத்தும் திருமண வரவேற்பு , பிறந்தநாள் விழா, மற்றும் இன்ன பிற விருந்துகள் நடைபெறும் ஹால் களாக இருக்கின்றன.சமீபத்தில் எனது நண்பரின் மகனது முதல் பிறந்த நாள் விழாவினை 6 மாடியில் ஒரு ஹாலில் ஏற்பாடு செய்து இருந்தார்.மொத்தம் 75 பேருக்காக உணவு ஆர்டர் பண்ணியிருந்தார்.பபே முறையில் உணவு வழங்கினர்.கிட்டத்தட்ட ஒரு 12 வகை உணவுகள் இருக்கும்.எந்த ஒரு உணவும் ருசியே இல்லை.ரொம்ப மட்டகரமான சுவையுடன் இருந்தன.தயிர் சாதம் கூட நன்றாக இல்லை என்றால் பார்த்துக்குங்க...
அப்புறம் வந்தவர்கள் எதோ ஒரு வேகத்தில் சாப்பிட்டு கிளம்பிவிட்டனர்.சீக்கிரம் வேறு தட்டுகள் காலி ஆகிவிட்டன.உணவு மட்டும் அப்படியே இருக்கிறது.இன்னும் 50 பேர்கள் சாப்பிடலாம்.ஆனால் தட்டுகள் இல்லை.கூடுதலாக கேட்டால் அவ்ளோதான் தரமுடியும் என்று வீம்புடன் பதில் அளிக்கின்றனர்.குழந்தைகள் சாப்பிட்டதையும் கணக்கில் கொண்டு, தட்டுகளை குறைத்து விட்டனர்.மொத்தம் 75 தட்டுகள் தான் கணக்கு என்று திரும்ப திரும்ப சொல்லி கூடுதல் தர மறுத்து விட்டனர்.
உணவு சுவையாய் இருந்தால் கூட பரவாயில்லை.மட்டம் வேறு.லேட்டாய் வந்த உறவினர்கள், மற்றும் விழாவினை நடத்திய இவென்ட் மேனேஜ்மென்ட் மக்கள் என ஒருத்தரும் சாப்பிடவில்லை..பின்னர் நான் போய் ப்ளோர் மேனேஜரை பயங்கரமாக சத்தம் போட்டுவிட்டு தான் வந்தேன்.ஒண்ணையும் வாய்ல வைக்க முடியல.முதல நீங்க டேஸ்ட் பார்த்தீங்களா என்றும் கேட்டேன்.சுவையும் இல்லை , நல்ல சேவையும் இல்லை பின்னே எதுக்கு வாடகைக்கு விடறீங்க....பண்ணாடைகளா....விலை மட்டும் அதிகம்.ஒரு பிளேட் 350 ப்ளஸ் வரி....வீட்டுல சமைக்கிறத விட ரொம்ப டேஸ்டா இருக்கும்னு தான் ஹோட்டலுக்கு போறோம் ..அங்கேயும் இத விட மோசமா இருந்தா .....
இன்னும் கொஞ்சம்...

Sunday, October 2, 2011

சென்னையில் இன்று

தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் இன்று என்னுடைய பயணம் தொடர்கிறது.சென்னை ரொம்ப மாறிவிட்டது.இப்போ கூட போலீஸ் கிட்ட ஹெல்மட் இல்லாமல் மாட்டினதுக்கு உடனே பிரிண்ட் அவுட் கொடுத்து பைன் வசூல் செய்கிறார்கள்.நல்ல முன்னேற்றம் ...
இன்னும் கொஞ்சம்...

Sunday, September 25, 2011

மதுரை கண்காட்சி - சுத்தம்

இப்போ மதுரை தமுக்கம் மைதானத்தில் விவசாய கண்காட்சி மற்றும் மலர் கண்காட்சி நடை பெற்று கொண்டிருக்கிறது.உள்ளே போனால் சும்மா ஒப்புக்கு நடை பெற்றுகொண்டிருக்கிறது.கொஞ்சம் தென்னங்கன்றுகள் இருந்தால் விவசாயமா..?அதிகம் பேன்சி ஸ்டோர் மற்றும் ஊறுகாய் கடைகள், உள்ளன.எந்த ஒரு ஸ்டாலும் மனதை ஈர்க்கவில்லை அப்படி இருக்கிறது.மலரினால் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகள் மட்டும் பரவாயில்லை.அதைவிட கொடுமை ..விளம்பரங்களில் இதுவரை நீங்கள் கண்டிராத அரியவகை மீன் கண்காட்சி என்று போட்டு இருக்கிறார்கள் ..உள்ளே பார்த்தால் நம் வீட்டில் வளர்ப்போம் அல்லவா.. அந்த வகையான மீன்கள் மட்டுமே உள்ளன ....என்ன கொடுமை டா ...இதுக்கு 30 ரூபாய் நுழைவு கட்டணம் வேற ....








அப்புறம் எப்பவும் கண்காட்சினா பஜ்ஜி, கரும்பு ஜூஸ் இதெல்லாம் இருக்கும் .அது கண்டிப்பா இங்க இருக்கு ....
இன்னும் கொஞ்சம்...

கோவை மெஸ் - சந்திரன் மெஸ் - தல்லாகுளம், மதுரை

மதுரையில் மையம் கொண்டிருந்த வேளை......மதுரை அப்படினாலே மீனாட்சி கோவில் அப்புறம் அருவா, வெட்டு குத்து .....இதுதான்......
அதுக்கப்புறம் மெஸ்.எங்கு பார்த்தாலும் மெஸ் தான் ...சந்திரன் மெஸ், அம்மா மெஸ் , கோனார் மெஸ் , அன்பகம் மெஸ் ..இப்படி மதுரையின் அனைத்து சந்து பொந்து களிலும் எதாவது ஒரு மெஸ் இருக்கிறது...நான் போனது சந்திரன் மெஸ்.கோரிபாளையம் அடுத்து தல்லாகுளத்தில் இருக்கிறது.மதியம் மட்டுமே அனைத்து வகை அசைவ உணவுகள் கிடைக்கும்.கோலா உருண்டை, நண்டு பொரியல் (போன்லெஸ்), நண்டு ஆம்லேட், அயிரை மீன் குழம்பு, நெஞ்சு கறி, நாட்டுக்கோழி வறுவல் ..அப்படின்னு ஏகத்துக்கும் இருக்கிறது .என்ன....  கொஞ்சம் காரம் சாரம் அதிகம் ..நம்ம பங்காளிகளுக்கு சைடு டிஷ்க்கு ஏத்தகடை ...நான் தெரியாத்தனமா நண்டு சாப்பிட்டிட்டு, அங்க அடிக்கிற வெய்யிலில் சூட்டை கிளப்பி விட்டது...யப்பா ..முடியல ....மதுரை பயங்கர வெயில்......மெஸ்ல ஏசியில் ( கொஞ்சம் இருட்டாக ) சாப்பிட்டதால் போட்டோ எடுக்க முடியவில்லை...மத்தபடி டேஸ்ட் பண்ணி பார்க்கிறவங்க தாராளமா போகலாம் ...




நேசங்களுடன்
ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Sunday, September 11, 2011

கோவை மெஸ் - திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடை, திண்டுக்கல்

திண்டுக்கல் அப்படினாலே பூட்டு தான் பேமஸ்.ஆனா இப்போ பிரியாணி தான் பேமஸ்.அவ்ளோ பிரியாணி கடை இருக்கிறது திண்டுக்கல்லில்.அதில் மிக்க பாரம்பரிய சுவை கொண்ட பிரியாணியை அறிமுகப்படுத்தியது தலப்பா கட்டி பிரியாணி கடைதான்.இந்த கடை முதலில் பெட்டிக்கடை போல செயல் பட்டு கொண்டிருந்ததாம்.இப்போது அக்கடைக்கு எதிர்புறத்தில் புதிய கிளை இருக்கிறது .பழைய கடை பார்சல் கட்டி தருவதற்காக இருக்கிறது.எப்பவும் போல கூட்டம் அள்ளுகிறது.அப்புறம் சுவை முன்பு மாதிரி இப்போது இல்லை என்கிற வருத்தம் வந்து சாப்பிடும் அனைவரது சொல்லிலும் இருக்கிறது.ஆனாலும் வெளியூர் வாசிகள் கூட்டம் கூட்டமாய் வருகிறார்கள்.அப்புறம் கோவையில் உள்ள தலப்பா கட்டி பிரியாணி கடையில் தலைக்கறி அவ்வளவு சுவையாய் இருக்கும்.ஆனால் திண்டுக்கல்லில் நன்றாகவே இல்லை.பிரியாணிக்கு பருப்பு போட்ட தால்ச்சா கொடுக்கிறார்கள்.திண்டுக்கல் போனால் சாப்பிட்டு பார்க்கலாம்

 

 நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...