Tuesday, May 31, 2011

கோவை மெஸ் - WILD FOREST குடில் ஹோட்டல், சரவணம்பட்டி

WILD FOREST  - குடில் ஹோட்டல்
நம்ம கோவை சரவணம் பட்டியில wild forest அப்படின்னு ஒரு ஹோட்டல் திறந்து இருக்காங்க.


நல்லா டிசைன் பண்ணி குடில் மாதிரி வச்சி இருக்காங்க.கொஞ்சம் கிளிகள், சிட்டு குருவிகள் , நாய்கள் அப்படின்னு ஒரு சில உயிரினங்களை வச்சி இருக்காங்க ( காட்டுல இருக்கிற மாதிரி ஒரு பீலிங் வேணுமில்ல அதுக்காக)..அப்புறம் உணவுகள் எல்லாம் எப்பவும் போலதான்.ஆனா அப்படி ஒண்ணும் கூட்டம் இல்ல.என்ன ..சரவணம் பட்டியில நிறைய காலேஜ் இருக்கு , அப்புறம் சாப்ட்வேர் கம்பெனி இருக்கு .அதனால கடலை போடறவங்க மட்டும் தான் இருக்காங்க.மத்த படி ஒண்ணுமில்ல.சுவையும் சுமார்தான்


குடில்கள் அனைத்தும் மூங்கில் கொண்டு அழகாய் செய்து இருக்கிறார்கள். சுவையை தவிர


மொட்டை வெயிலில் போனால் ரொம்ப கொடுமையாய் இருக்கும் .

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, May 2, 2011

கோவை மெஸ் - ஈமு கறி - சுசி ஈமு ருசி ஈமு, பெருந்துறை

 சுசி ஈமு ருசி ஈமு, பெருந்துறை
இன்னிக்கு ஈரோடு வந்திருந்தேன் ..போற வழியில சுசி ஈமு ருசி ஈமு அப்படிங்கற ஹோட்டலுக்கு வந்தேன் .பெருந்துறைல நம்ம புன்னகை இளவரசி சினேகா திறந்து வைத்த ஹோட்டல் ...உள்ளே இன்டீரியர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ..ஆன்னா இந்த ஈமு கோழி தான் டேஸ்டே நல்லாவே இல்ல ...ஒருவேளை முதல் முதல் சாப்பிடறதால் ஏற்பட்ட உணர்வா அப்படின்னு தெரியல ..எல்லாம் ஈமு மயம்தான்.. சாப்பிட்டா கொஞ்சம் மந்தமா இருக்கிற மாதிரி தெரிகிறது ..இதுவரைக்கும் ஜீரணம் ஆகல...கடைக்குள் போன போது யாருமே இல்ல.. அப்பவே கொஞ்சம் சுதாரிப்பா இருந்திருக்கணும் ...



என்ன பண்றது புத்திக்கு தெரிகிறது வயிற்றுக்கு தெரியல ...





நல்ல சவுக் சவுக் னு இருக்கு ..மென்று திங்க வாய் வலிக்குது ..கொஞ்சம் மத மதப்பா இருக்கு.







நம்ம டிரைவர் ஒரு கமென்ட் அடிச்சார் ..இதை சாப்பிட்டு விட்டுத்தான் அன்னிக்கு சினேகா இடுப்பை எவனோ ஒருத்தன் கிள்ளிட்டான் அப்படின்னு ..என்ன பண்றது இப்போ இதை நம்ம ப்ளாக்ல போட்டா மட்டுமே நிறைய பேரை காப்பாத்தலாம் ... ஈரோடு நகர வாசிகளே , கொஞ்சமாய் சுவை செய்து பாருங்கள்..ஈமு சில்லி 80 ரூபாய் , கடாய் ஈமு 140 , ஈமு சிங்கப்பூர் 130 ரூபாய் என நிறைய வகை இருக்கிறது ...என்ன இருந்தாலும் நம்ம மட்டன் சிக்கன் காடை மாதிரி இல்லவே இல்லை ....

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Friday, April 22, 2011

பெரம்பலூர் விஜயம்

நான் நம்ம ராசா ஊருக்கு போய் இருந்தேன்.சரியான வெய்யில் ...எங்கு பார்த்தாலும் வறட்சி..பொட்டல் காடு..மலை முகடு ..ரியல் எஸ்டேட் க்கு சரியான இடம் ...அடிக்கடி டீவில விளம்பரம் பண்ணுறாங்களே ஒரு மனை வாங்கினால் ஒண்ணு இலவசம் அப்படின்னு ..அதெல்லாம் இங்கதான்...அதனால் தான் நம்ம ஊழல் ராசா இந்த ஊருல அதிகமா வாங்கி இருக்கிறார்னு நினைக்கிறேன்.அப்புறம்...கனிமொழி காலேஜ் ஒண்ணு கூட இங்க இருக்குனு நினைக்கிறேன்...




ஒரு கழிப்பறை கட்டியிருக்காங்க அதுல நம்ம ராசா பேரு அநேகமா அதுலயும் ஊழல் பண்ணி இருப்பாருன்னு நினைக்கிறேன்


அப்புறம் பெரம்பலூர் பக்கத்தில சிறுவாச்சூர் என்கிற ஊரில மதுர காளி அம்மன் என்ற கோவில் உள்ளது.மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாம்.அந்த பக்கமா போறவங்க கண்டிப்பா போய்ட்டு வாங்க
இன்னும் கொஞ்சம்...

கோவை மெஸ் - வாத்து கறி - வேலாயுதம் பாளையம்-கரூர்

 வாத்து கறி - வேலாயுதம் பாளையம்-கரூர்
சேலம் கரூர் பைபாஸ் சாலையில் வேலாயுதம் பாளையம் என்கிற ஊரில் இந்த வாத்து கறி ரொம்ப பேமஸ் .ரோட்டு ஓரத்தில் நிறைய கடைகள் இருக்கின்றன.நல்ல சுவையுடன் இருக்கிறது.ஒரு நாளைக்கு கிட்ட தட்ட 100 முதல் 200 கிலோ வரை விற்பனை ஆகிறதாம்..நல்ல சுத்தமாகவும் சமைக்கிறார்கள்.சூடாக இட்லி தோசை எப்போதும் கிடைக்கும் .இந்த வாத்துகறி உடன் இட்லி சாப்பிட்டால் அப்படியே நாக்கில் சுவை ஊறும்..ஒரு கிலோ 150 ரூபாய் அரை கிலோ 80 ரூபாய்...அப்புறம் வாத்து முட்டை ஆப்பாயில், ஆம்லெட் கிடைக்கும் ...நானும் என் டிரைவரும் ஒரு கிலோ காலி பண்ணினோம் .பார்சல் பண்ணியும் தருகிறார்கள் .
பச்சை  கறியும் கிடைக்கும்.வாங்கி வீட்டில் கூட சமைக்கலாம்.வாங்கும் போது ரத்தமுடன் சேர்த்து வாங்கணும்.கறியை கழுவ கூடாது.அப்போதுதான் ரொம்ப ருசி கிடைக்கும்.







  

கொசுறு  25.4.12 :

இப்போ  கொஞ்சம் விலை ஏத்திட்டாங்க ன்னு நினைக்கிறேன்.போன வாரம் கூட இங்க சாப்பிட்டேன்.இப்போ கொஞ்சம் டேஸ்ட் கம்மியா இருக்கு போல.எப்பவும் கதிர்வேல் கடையில் தான் சாப்பிடுவேன் அங்க சரியில்லை.அதுக்கு எதிரில் மாணிக்கம் கடையில் ரொம்ப நல்லா இருக்கிறது..
 கொசுறு  6.5.13 :
 இப்போ விலை கிலோ 200 ஆகிவிட்டது.மொத்தம் அந்த பைபாஸ் ரோட்டில் 5 கடைகள் இருக்கின்றன.எல்லா கடைகளிலும் சாப்பிட்டு பார்த்துவிட்டேன்.ஒவ்வொரு கடையும் ஒருவித டேஸ்ட்.வாத்துக்கறி எப்பவும் டேஸ்ட்.என் அம்மா சமைத்து தரும் வாத்துக்கறி சமையலுக்கு ஈடில்லை எதுவும்..


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, March 23, 2011

அரசு பொருட்காட்சி - கோவை










நம்ம கோவையில் இப்போ நடை பெற்று கொண்டிருக்கிறது ...தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றி ஒரு இலவச விளம்பரம் இதுதான் ...பொருள் காட்சி என்ற பெயரில் அவர்களின் சுய தம்பட்டம் ..என்ன ..மக்களை கவர்வதற்கு ஒரு சில விளையாட்டுகள் , அப்புறம் ஏகப்பட்ட கடை கன்னிகள்,நிறைய ஸ்டால் , ஆவின் பால், அப்புறம் திகில் குகை , குழந்தைகளை கவர நிறைய விளையாட்டுகள் .முக்கியமா கோவை மாவட்ட காவல் துறையின் சார்பா வைக்கப்பட்டிருந்த ஸ்டால் மிகவும் அருமை ... .....அப்புறம் ரொம்ப முக்கியமா டெல்லி அப்பளம் ....ஊட்டி மிளகாய் பஜ்ஜி ...நுழைவு டிக்கெட் விலை 5 மற்றும் 3 ..ஆனா உள்ளே ஏகப்பட்ட விலை ..டெல்லி அப்பளம் 30 ரூபாய் , பஜ்ஜி 20 ரூபாய் , ராட்டினம் 30 , டிராகன் 30 அப்படின்னு ஏகப்பட்ட விலை ..அப்படி ஒண்ணும் கூட்டம் அதிகமா இல்லை ..கோவையில் மக்களுக்கு எந்த விதமான பொழுது போக்கு வசதியும் இல்லை .இந்த மாதிரி எதாவது இருந்தா கூட்டம் அள்ளும்.ஞாயிறு அன்னிக்கு மட்டும் கூட்டம் அதிகமா காணப்படும் ...ஆனா இப்போ அப்படி ஒண்ணும் கூட்டம் அதிகமா இல்லை ...மக்கள் ரொம்ப வெறுப்பில இருக்காங்களோ ....
இன்னும் கொஞ்சம்...

ராஜ் டிவி - ஏமாத்து வேலை

ராஜ் டிவி யில் மறுபடியும் அந்த ப்ரோக்ராம் பார்த்தேன் ....எப்படியெல்லாம் பதில் சொல்லி நம்மளை போன் பண்ண வைக்கிறாங்க..இதுவும் ஒரு வகையில் மனோ வசியம் மாதிரித்தான் ....தப்பு தப்பா பதில் சொல்லுறத பார்த்து நாம போன் பண்ணலாம் அப்படின்னு தூண்டறது .....மக்களே தயவு செய்து போன் பண்ணி ஏமாந்து விடாதீர்கள் ...


இன்னிக்கு காட்டின படத்துல விஜயகாந்த் , மம்முட்டி இருக்காங்க ..ஆனா பதில் சொன்ன எல்லாரும் , கார்த்திக் பிரபு , ராஜ்கிரண் , மோகன் , மாதவன் மோகன்லால் , பிருதிவி கார்த்திக் , அப்படின்னு ப்ரோக்ராம் ஆரம்பிச்ச நேரத்துல இருந்து இப்படியே தப்பு தப்பா சொல்றாங்க..அப்புறம் நமக்கு என்ன தோணும் நாம ஏன் முயற்சி பண்ண கூடாது அப்படின்னு.கை வேற பரபர ன்னு அரிச்சுக்கும்.பரிசு தொகை வேற அதிகம்.விழுந்தா லக்கு தான் அப்படின்னு நினைச்சு போன் பண்ண ஆரம்பிப்போம்.அப்புறம் தான் இருக்கு உங்களுக்கு சங்கதி.சும்மா வெயிட்டிங்ல உங்கள போட்டு உங்க பைசாவ அபகரிச்சு விடுவாங்க. ....அப்புறம் என்ன அவங்க காட்டில மழைதான்....நமக்கு .....நம்ம  போன் பில் எகிறிடும்.....
இப்போ  ராஜ் டிவி மட்டுமில்லீங்க .வடக்கத்திய சேனல் கூட இப்படி ஏமாத்தறாங்கோ.


இவங்களுக்கு  அண்ணன் ..விஜய் டிவி ஒரு கேடி 

அதுக்கும் மேல இன்னொருத்தர் சன் டிவி --கையில் ஒரு கோடி


நேசங்களுடன்  
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, March 16, 2011

போத்திஸ் கோலாகலம்

இன்று கோவையில் மாபெரும் திறப்பு விழா.போத்திஸ் தன்னுடைய ஐந்தாவது கிளையை கோவையில் கோலாகலமாக திறந்து வைத்தது .மிகுந்த கூட்டத்துடன் இன்று ஒப்பணகார வீதி காணப்பட்டது ..பயங்கர ட்ராபிக் ஜாம் .நல்ல வடிவமைப்புடன் மிகுந்த பரப்பளவில் போத்திஸ் இருக்கிறது .அலை அலையாய் மக்கள் குவிந்து கொண்டிருக்கின்றனர் ...


நாங்களும் உள்ளே சென்று இரண்டு சட்டைகளை வாங்கினோம் .திறப்பு விழா சலுகை எதுவும் இல்லை .ஆனால் குறைந்த விலைதான் ..அப்புறம் நம்ம கலக்க போவது யாரு வெங்கடேஷ் வந்திருந்தார் .அவரிடம் பேசி கொண்டு இருந்தோம் ..




அப்புறம் முன்னாடி வரவேற்புக்கு நல்ல அந்த கால அரசி, மன்னர் , சேவகன் போல உடை அணிந்து கொண்டு வரவேற்றனர் ..

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 
இன்னும் கொஞ்சம்...