Wednesday, January 25, 2012

அருள்மிகு ஸ்ரீ வெற்றிவேல் முருகன் - ஜலகாம் பாறை - ஏலகிரி - திருப்பத்தூர்

ஜலகாம் பாறை....ஏலகிரி மலையினை ஒட்டி அமைந்துள்ள ஒரு திருத்தலம்.முருகன் தம்பதி சமேதராக சிவலிங்க வடிவில் உள்ள கோவிலில் அருள் பாலிக்கிறார். இங்கு ஏலகிரி மலைகளில் இருந்து உருவாகும் சிறு அருவி திருமால் முருகன் தீர்த்தம் என்று அழைக்கபடுகிறது.திருப்பத்தூரில் இருந்து 20  கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஜலகாம்பாறை இருக்கிறது.மலை சூழ்ந்த இடம் ஆதலால் மிகவும் ரம்மியமாக இருக்கிறது.வெங்கடேச பெருமாளின் பாதம் பட்ட இடம் ஆதலால் அவர்க்கும் ஒரு கோவில் அமைத்து கும்பிடுகின்றனர்












அமைதி...அமைதி...அப்படி ஒரு அமைதி...சலசலக்கும் அருவி சத்தம், கோவில் மணி யோசை என மிக அருமையாக இருக்கிறது.மலையின் மேல் கோவில் இருந்தாலும் அடிவாரம் என்று ஒன்றும் இல்லை.ஆனாலும் அங்கு கடை கண்ணிகள் இருக்கிறது.சுட சுட பணியாரம் , கரும்பு ஜூஸ், என திடீர் கடைகள் நிறைய இருக்கின்றன.





அருவியில் நீர் (கொஞ்சமாக) தற்போது வந்து கொண்டிருக்கிறது.குளிக்க ஜில்ல்னு இருக்கிறது.ஒரு சில சீசன்களில் மட்டும்தான் அதிகம் வருமாம்.
ஆனால் எப்போதும் நீர் வரத்து இருக்குமாம்.அப்புறம் நம்ம முன்னோர்கள் இங்கும் வாசம் செய்கிறார்கள்.அப்புறம் எப்பவும் போல நம்ம அம்மணிகள் அவங்கங்க ஆளுகளோட...திருப்பத்தூரில் இருந்து 20  கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஜலகாம்பாறை இருக்கிறது

நேசங்களுடன்
ஜீவானந்தம்


4 comments:

  1. பதிவோட கடைசியில படத்தில் இருக்கிற நண்பர் என்னை முறைச்சு முறைச்சு பார்க்கிறாரே!! ஏன்??

    ReplyDelete
  2. ரொம்ப நெருங்கிய சொந்தமா இருப்பாருன்னு நினைச்சு இருக்கும் சிபி

    ReplyDelete
  3. பதிவும்,படங்களும் சிறப்பாக இருக்கு.

    ReplyDelete
  4. கொஞ்ச நாள் வெளி ஊர் போயிருந்ததால இப்பதான் ஒவ்வொருவர்பக்கமா வர நேரம் கிடைச்சது. படங்களும் பதிவும் நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....