Friday, May 4, 2012

பெங்களூர் ஓர் பார்வை

பெங்களூர் ஓர் பார்வை
போன வாரம் நண்பரின் குடும்ப விழாவிற்கு சென்றேன்.அவர் பெங்களூர் ஆதலால் இரண்டு நாள் முன்கூட்டியே வர சொல்லி விட்டார்.எனக்கும் ரொம்ப நாளா ஆசை..இந்த பெங்களூர்ல இருக்கிற .ரொம்ப அழகான பொண்ணுங்களை பார்க்கலாம்னு.அப்புறம் பப் வேற இருக்கு.நமக்கு சொல்லவா வேணும்..
எப்படியோ கர்நாடக மண்ணை மிதித்து விட்டேன்...காலை எட்டு மணிக்கே சரக்கு கடை திறந்து விடுவாங்க போல...நம்ம கடை ஓபனா இருக்கு.சரி..காலையிலேயே நம்ம கச்சேரி வேணாம் அப்படின்னு ஒருவழியா மனதை தேத்திக்கிட்டு அழகிய பெண்களின் சங்கமம் ஆன பெங்களூர் நுழைந்தேன்.
காரிலேயே சென்றதால் கொஞ்சம் டயர்ட் வேற..ஒரு கடையில் நின்னு ரிலாக்ஸ் பண்ணலாம்ன்னு இறங்கினேன்..நம்ம டிரைவர் இங்க பிசிபேளாபாத் அப்புறம்  செட் தோசை நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லி நம்ம பசி ஆர்வத்தை தூண்டி விட்டார்.நாங்க போன இடம் பண்ணார் கட்டா என்பதால் அங்க இருந்த ஒரு ஹோட்டலுக்கு (சின்ன) சென்றோம்.உட்கார்ந்து சாப்பிடும் படியான ஹோட்டல் இல்லை.நின்று கொண்டே சாப்பிட மாதிரி தான்  உயரமான டேபிள் வைத்து இருக்கின்றனர்.(பெங்களூர்ல இருக்கிற நிறைய ஹோட்டல் இந்த மாதிரி தான் இருக்கிறது)

 
செட் தோசை ஆர்டர் பண்ணினேன்.இரண்டு தோசை.ஊத்தப்பம் போல இருக்கிறது.சட்னி, சாம்பார் இதற்கு ஒட்டவே இல்லை.ஆயினும் அங்கு உள்ளவர்கள் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். அப்புறம் பிசிபேலாபாத்....அட...நம்ம ஊரு சாம்பார் சாதமுங்க....இது நல்லா இருக்குங்க...மிக்சர் லாம் போட்டு தர்றாங்க.அப்படி ஒண்ணும் இந்த ஹோட்டல் சொல்லி கொள்கிற மாதிரி இல்லைங்க...பசிக்கு சாப்பிட்டோம்..
அவ்ளோதான்.அப்புறம் நண்பர் வீட்டு கல்யாணத்துல ஏகப்பட்ட குஜிலிங்க..மாப்பிளையும் பொண்ணும் சாப்ட் வேர் கம்பனி போல...ஏகப்பட்ட அம்மணிகள்..ஆனா ஒண்ணு..வந்த அனைத்து அம்மணிகளும் நல்லா தலையை விரிச்சு போட்டுக்கிட்டு ரொம்ப ஸ்டைலா தான் வந்தாங்க.
அப்புறம் கல்யாண வீட்டு பந்தியில ஒரு புதுவித உணவு பார்த்தேன்.நம்ம ஊர் சேவை மாதிரி ரொம்ப சன்னமா மொறு மொறுன்னு வட்டமா முறுக்கு போல கொண்டு வந்து வச்சாங்க.அதுக்கு மேல ஒரு போடி போட்டாங்க.அப்புறம் லட்டு வச்சாங்க.அப்புறம் பாதாம் பால் ஊத்தினாங்க.நமக்கு என்னன்னு தெரியல.பக்கத்து இலை  காரரை கேட்கலாம்னு பார்த்தேன்.அவரு ரொம்ப பிஸியா லட்டை பிச்சு பூந்தி யாக்கி அதுல போட்டு அதை அப்படியே ஒரு மடி மடிச்சு அப்படியே வாய்க்குள்ள தள்ளினாரு.ஓஹோ...இப்படிதான் சாப்பிடனுமா ..அப்படின்னு நினைச்சு அதே மாதிரியே நானும்...ரொம்ப நல்லா இருக்குங்க..அதுக்கு பேரு என்னன்னு நம்ம நண்பரை கேட்டேன்.பாதாம் பூரி அப்படின்னு சொன்னார்.புது வித உணவை சுவைத்த அனுபவம்..
அப்புறம் ஒரு பப் போனேன்..பகல்ல தான். அடிச்ச வெய்யிலுக்கு ஜில்லுன்னு ஒரு பீர் சாப்பிட்டோம்.அங்க ஒரு பீர் மெசின் இருந்துச்சு அலாவுதீன் விளக்கு மாதிரி இருக்கு அமுத்துனா பீர் வருது.கிட்ட தட்ட 300 லிட்டர் பிடிக்குமாம்.ஒரே ஒரே பிராண்ட் மட்டும் தான் யூஸ் பண்றாங்க.முடிஞ்ச வரைக்கும் குடித்து விட்டு வெளியில் வந்தோம்.இரவு நேரத்தில் சென்று இருந்தால், நல்ல ஆட்டம் பாட்டமுமாக  ..இன்னும் நன்றாக இருந்து இருக்கும்.


அப்புறம் பெங்களூர் எங்கும் கான்க்ரீட் கட்டிடமாக வே இருக்கிறது.மிகபெரிய கட்டிடங்கள் , பாலங்கள், மால் என எங்கும், கான்க்ரீட் மயம்தான்.எவ்வளவு தான் வறட்சியாக இருந்தாலும் பெண்களால் இது குளுகுளு அடைகிறது. அது போலவே ஏகப்பட்ட ட்ராபிக்.





 
பெங்களூர் விட்டு பிரிய மனமில்லை.நல்லா என்ஜாய் பண்ணனும், காசை பத்தி கவலை படாமல் என்ஜாய் பண்ணனும் என்பவர்களுக்கு இது சொர்க்கம்.இரண்டு நாளில் ஒரு ஏரியா மட்டுமே எனது பார்வையில் இந்த அளவுக்கு எனில் முழு பெங்களூர் இன்னும் எப்படி இருக்கும்...ம்கூம்...என்ன பண்றது....
ஆயினும் இரண்டு நாள் இருந்த சந்தோசம் ரொம்ப அருமை.

கிசுகிசு: காரில் செல்வதினால் அதிகம் போட்டோ எடுக்க முடிவதில்லை.ஒவ்வொரு தடவையும் நிறுத்தி ...நிறுத்தி...யப்பா முடியல.. 


நேசங்களுடன்  
ஜீவானந்தம் 


7 comments:

  1. ஆசையை தூண்டி விட்டதுக்கு நன்றி

    மேலும் சில விவரங்களுக்கு விரைவில் தொடர்பு கொள்கிறேன் தொலைபேசி வாயிலாக

    ReplyDelete
  2. நன்றி மனசாட்சி...கண்டிப்பா எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்...

    ReplyDelete
  3. என்ன ஜீவா இது பெங்களூருக்கு வந்துட்டு சொல்லாம கொள்ளாம திரும்பி போயிட்டீங்க??

    ReplyDelete
  4. நாம வர்றது தெரிஞ்சு யாரவது கட்அவுட் வச்சி பெங்களூர கதி கலங்க வச்சிட்டாங்கன்னா என்ன பண்றது ...
    ராம்வி அவர்களே

    ReplyDelete
  5. upto 1980 kaali dosa is so famous in bangalore. world famous hotel MTR just opp. lal park main gate and famous for rava idly masala dosa &so many. they servEd coffee & water in silver tumbler upto 1980. oorvasai theater just few months before upgraded the sound system in few crores expence to world class standard. pvr cinma mall is biggest in india 11 digital theaters in one mall at top floor.india's first revoving restarent in public utility building in mg road roof top.india's first cinerama theater kapali is now runnig in 70 mm. bangalore only 5 star hotel OBAROI in mg road. ther so many spacilaity not space listed here. sridhar_kva@yahoo.in

    ReplyDelete
  6. upto 1980 kaali dosa is so famous in bangalore. world famous hotel MTR just opp. lal park main gate and famous for rava idly masala dosa & so many. they served coffee & water in silver tumbler upto 1980. oorvasai theater just few months before upgraded the sound system in few crores expence to world class standards. pvr cinma mall is biggest in india 11 digital theaters in one mall at top floor.india's first revoving restarent in public utility building in mg road roof top.india's first cinerama theater kapali is now runnig in 70 mm. bangalore only 5 star hotel OBAROI in mg road. South inda's best hospital narayanairdalaya is in bangalor 13 km on hosur highway ther so many spacilaity not space listed here. sridhar_kva@yahoo.in

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....