Tuesday, May 15, 2012

கோவை மெஸ் - தென்றல் ஹோட்டல் - துடியலூர், கோவை

தென்றல் ஹோட்டல் - துடியலூர்


இது நல்ல விஸ்தாரமாக, கார் பார்க்கிங், ஏ சி, மற்றும்  கார்டன் ரெஸ்டாரன்ட் ஆக இருக்கிறது.பெரிய ஸ்க்ரீன் வேறு இருக்கிறது.அதில் கிரிக்கெட் மற்றும் கேபிள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவார்கள்.மேலும் குழந்தைகள் விளையாட சறுக்கு, ஊஞ்சல், போன்றவை இருக்கின்றன. போன ஐபிஎல் மேட்ச் அப்போ புதுசா ஆரம்பிச்ச ஹோட்டல் என்பதால் அப்போ ஐபிஎல் மேட்ச் காண அங்கு செல்வோம்.






       கிரிக்கெட் ஆர்வத்தில் அதிகமா டேஸ்ட் பார்க்கலை.அதில்லாமல் நம்ம சுட்டிக்கு ஊஞ்சல், சறுக்கு இருக்கிறதால் அவங்களுக்கு இங்க போக விருப்பம்.அடிக்கடி போவோம்..ஆனா அதிகமா சாப்பிட மாட்டோம்.சும்மா எதாவது ட்ரை சிக்கன் அயிட்டம் (அதுவும் சுமார் ரகம்தான்) மட்டும் சாப்பிட்டு விட்டு மேட்ச் பார்த்து விட்டு வருவோம். மேட்ச் பார்க்கணும், அதே சமயத்தில் சுட்டியின் விளையாட்டு ஆர்வம் இதுக்காக என்னவெல்லாம் சகிச்சிக்க வேண்டி இருக்கு பாருங்க.
     இப்போ போனவாரம் இந்த ஹோட்டலுக்கு சாப்பிட சென்றோம்.மதியம் ஆதலால் மீல்ஸ் மற்றும் மட்டன் வறுவல் ஆர்டர் பண்ணினோம்.ஸ்பெஷல் மீல்ஸ் இருக்குன்னு சொல்லி அதை கொடுத்தாங்க...சுத்தம்...அப்படி ஒண்ணும் பெருசா இல்லீங்க.ஒரே ஒரு சப்பாத்தி அப்புறம் மீல்ஸ், மீன் குழம்பு, மட்டன், சிக்கன், குழம்பு, ரசம், தயிர் இவ்ளோ தாங்க.ஒரு சுவையும் சரியில்லை.மட்டன் ரொம்ப மோசமா இருந்துச்சு.மசாலாவோட ஒரு அஞ்சு பீஸ் இருக்குமுங்க...அதுக்கு எம்மாம் ரேட்டு தெரியுமா...ஆரம்பத்தில இருந்த சுவை கூட இப்ப இல்லைங்க.
      நம்ம நண்பர் கேட்டாரு இந்த இரண்டு மீல்ஸ்க்கும் என்ன வித்தியாசம் என்று , நான் சொன்னேன், சின்ன சின்ன கப்புல பொரியல் அப்புறம் எல்லா குழம்பும் வச்சி ஒரு பெரிய தட்டுல கொடுத்தாங்கன்னா அது ஸ்பெசல் மீல்ஸ். சாப்பிட சாப்பிட குழம்பு ஒவ்வொண்ணா கொண்டு வந்து தட்டுல ஊத்தினாங்க என்றால் அது சாதா மீல்ஸ் அப்படின்னு..

மெனு கார்ட் பார்த்தா எல்லா அயிட்டமும் இருக்கும்.சைனீஸ், தந்தூரி இப்படி...எல்லாம் நல்லா இருக்குமா அப்படின்னு கேட்டால் சந்தேகமே.விலையும் அதிகமா தான் இருக்கு. இன்னொன்ணுங்க  நான் எப்போலாம் போறேனோ அப்போல்லாம் இதுவரைக்கும் இந்த ஹோட்டல் நிரம்பி பார்த்ததில்லீங்க.
ஒரு  சில ஹோட்டல் அட்மாஸ்பியரில் அடிச்சிக்க முடியாது.ஆனா டேஸ்ட் ரொம்ப சுமாரா இருக்கும்.அதே சமயத்துல சிம்பிளா இருக்கிற ஹோட்டல் தூள் பரத்தும்.இது முதல் வகை...
நேசங்களுடன்  
ஜீவானந்தம்

5 comments:

  1. நம்ம ஊர்ல இவ்வளவு வசதியோடு அழகான ஹோட்டலா ...'சுவையான' பதிவு

    ReplyDelete
  2. வசதி இருந்து என்ன பயன்..சுவை ரொம்ப குறைவா இருக்கே..மணி மாறன்

    ReplyDelete
  3. ஹோட்டல் அட்மாஸ்பியர் நல்லா இருக்கு. ஆனா, ருசிதான் சரியில்லைன்னு சொல்லீட்டீங்களே. அதனால அந்த ஓட்டலை நான் அவாய்ட் பண்ணிடுறேன்.

    ReplyDelete
  4. அப்பாடா,இப்பதாங்க உங்க பதிவு எல்லாம் ரீடர்கு வருது.

    ReplyDelete
  5. சின்ன சின்ன கப்புல பொரியல் அப்புறம் எல்லா குழம்பும் வச்சி ஒரு பெரிய தட்டுல கொடுத்தாங்கன்னா அது ஸ்பெசல் மீல்ஸ். சாப்பிட சாப்பிட குழம்பு ஒவ்வொண்ணா கொண்டு வந்து தட்டுல ஊத்தினாங்க என்றால் அது சாதா மீல்ஸ் அப்படின்னு..

    அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....