Thursday, May 17, 2012

கோவை மெஸ் - R.R ஸ்வீட் ஸ்டால் - சின்ன போண்டா கடை, கோவை

R.R ஸ்வீட் ஸ்டால், சின்ன போண்டா கடை..
ஒருநாள் எதேச்சையாய் தினமலர் பேப்பர் படிக்கும் போது ஒரு கடையை பத்தி எழுதி இருந்தாங்க.ரொம்ப நல்லா இருக்கு அப்படின்னு வேற..சரி இன்னிக்கு பார்த்துடுவோம்னு டவுன்ஹால் பக்கம் செல்லும் போது வைசியாள் வீதி போனேன்.கடை எந்த பக்கம் இருக்குன்னு வேற தெரியல..அப்புறம் எப்படியோ கண்டு பிடிச்சாச்சு.

ஒரு சின்ன கடைதான்.ஆனால் அவ்ளோ கூட்டம்....வருவதும் போவதுமாக...கொஞ்சம் இடம் கிடைத்தவுடன் உள்ளே நுழைந்தோம். கனிவான உபசரிப்பு. உள்ளே நுழைகையில் சுட சுட எண்ணையில் போண்டா பொரிந்து கொண்டு இருந்தன.
சரி போண்டா எடுக்கட்டும் என காத்திராமல் தயிர் போண்டாவை வாங்கினோம்.கொஞ்சம் பூந்தி தூவி கொடுத்தனர்.சாப்பிட்டதில் அவ்ளோ அருமை.போண்டா முழுவதுமாக தயிரில் ஊறி இருக்க புளிப்பு சுவை மிதமாய் இருக்க ஆகா..என்ன ருசி....அருமை.

இதை சாப்பிட்டு முடிக்கவும் சுட சுட போண்டா (இரண்டு வகை போண்டா-ஜவ்வரிசி போண்டா, கார போண்டா என) தட்டில் வைத்து கொஞ்சம் தக்காளி சட்னியுடன் கொடுத்தனர்....நல்ல முறுக்கேறி மொறு மொறு தோற்றத்தில் வெள்ளையும் சிகப்புமாய் ...ஆனால்..உள்ளே அவ்ளோ சாப்ட்..கொஞ்சம் பிய்த்து சட்டினியில் தொட்டு சாப்பிட அருமை..தக்காளி சட்னி அவ்ளோ டேஸ்டா இருக்கு..
அப்புறம் நிறைய வகை முறுக்குகள், தட்டு வடை, தேங்காய் லட்டு, சுண்டல், பருப்பு உருண்டை என நிறைய வகைகள்.அனைத்தும் இவர்களாகவே தயார் செய்து விற்கிறார்களாம்.சுண்டல் சாப்பிட்டு பார்த்த போது மாங்காயின் சுவை அதில் இருந்தது.ஒருவேளை மாங்காய் சுண்டல் இருக்குமோ.

 

 


நிறைய பேர் பார்சல் வாங்கி செல்கின்றனர்.இங்கு மதியம் 12 மணிக்கு கொழுக்கட்டை கிடைக்குமாம்.ஆனால் ஒரு மணி நேரத்தில் அனைத்தும் தீர்ந்து விடுமாம்.இன்னொரு நாள் போய் கொழுக்கட்டை ஆசையை தீர்த்து கொள்ள வேண்டும்.நான் புகைப்படம் எடுப்பதை கண்ட அவர்கள் பிரஸ் காரரா (நம்மளையும் நம்புறாங்கப்பா) என்று விசாரித்து அனைத்து விவரங்களும் சொன்னனர்.
விலையும் குறைவுதான்.மனசும் (பசியும்) நிறைவுதான்.போண்டா ஒரு பிளேட் ஏழு ரூபாய், தயிர் போண்டா பத்து ரூபாய்.மொத்தத்தில் பர்சுக்கு / வயிற்றுக்கு கேடு விளைவிக்காத ஒரு கடை..
நேசங்களுடன்
ஜீவானந்தம் 

12 comments:

  1. டேஸ்ட் நல்லாயிருக்குன்னா அந்தமானுக்கே போவோம்..
    இந்தாயிருக்கிற வைசியால் வீதிக்கு போகமாட்டமா?

    அடையாளம் காட்டியதற்க்கு நன்றி.

    ReplyDelete
  2. பாஸ். போண்டா பார்சல் நாளைக்கு மதுரைக்கு வந்திரும்ல

    ReplyDelete
  3. பார்க்கும்போதே ஸ்ஸ் ஆஆ... சுவையான பதிவு.

    ReplyDelete
  4. வாங்க..உலக சினிமா ரசிகனே..இதையும் சாப்பிட்டு ரசிங்க

    ReplyDelete
  5. பிரகாஷ் ..நாளைக்கு வரும்..ஆனா கொஞ்சம் ஊசிப் போன ஸ்மெல் வரும் பரவாயில்லையா

    ReplyDelete
  6. விச்சு..ஒருநாள் வாங்க,,,போலாம்

    ReplyDelete
  7. Bondaa naa America ka povinga pola ..unga narration nalla iruku..Good..next time kovai vantha naanum oru kai paarkuren bonda ve..

    ReplyDelete
  8. அருமையான ருசிகரமான பதிவு அறிமுகபடுதியதர்க்கு நன்றி நாங்களும் சென்று ருசிக்கிறோம் .........பிரத்தியேகமாய் படங்களை எடுத்து அந்த கடைக்கு ஒரு விளம்பரம் கொடுத்த கோவை நேரத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. ஆஹா கோவை கேபிள் சங்கரா :-) போண்டாவும் அருமை போட்டோவும் அருமை

    ReplyDelete
  10. சரி போய் டேஸ்ட் பண்ணிருவோம்

    ReplyDelete
  11. கோவை வரும் போது கண்டிப்பாய் டேஸ்ட் செஞ்சு பார்த்திர வேண்டியது தான்..
    நான் கூட டவுன் ஹால் அருகே உள்ள ஒரு பள்ளியில் தான் படித்தேன். துய மைகேல் பள்ளி...

    ReplyDelete
  12. ya really super shop there..
    www.busybee4u.blogspot.com

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....