Thursday, July 26, 2012

கோவை மெஸ் - M.S.R பிரியாணி ஹோட்டல் - கோவை

M.S.R பிரியாணி ஹோட்டல்
கோவையில் நிறைய முஸ்லிம் அன்பர்கள் இருக்கிறதால் இங்க பெரியாடு என்கிற மட்டன் (மாட்டு இறைச்சி) அதிகம்.அதனால் பீப் பிரியாணி கோவையில் பல இடங்களில் நல்ல சுவையா கிடைக்கிறது.இதுல ரொம்ப முக்கியமான ஹோட்டல் போத்தனூர் டு சுந்தராபுரம் ரோட்டில் இருக்கிற MSR ஹோட்டல் ரொம்ப பேமஸ்.போத்தனூர் வழியா செல்லும் போது திடீர்னு ஞாபகம் வந்ததால் இந்த ஹோட்டலுக்கு போனோம்.
முன்புறம் சின்ன  கடை போல் தான் இருக்கிறது ஆனால் உள்ளே ஏகப்பட்ட இடம்.நிறைய பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் சுவரை ஒட்டி ஓரு அடி அகல டேபிள் டாப் வைத்து இருக்கின்றனர்.போய் அமர்ந்ததும் நமக்கு வேண்டிய பிரியாணி, சில்லி பீப், பீப் சுக்கா வறுவல் ஆர்டர் பண்ணினோம்.



 

நல்ல வாசத்துடன் பிரியாணி இருந்தாலும் சுவை முன்பு போல் இல்லை. கொஞ்சம் கம்மியாக தான் இருக்கிறது.ஆனாலும் நன்றாக இருக்கிறது .ரொம்ப வருடங்களுக்கு முன்பு இன்னும் சுவையாக இருந்தது.அப்புறம்  கறி மெதுமெதுவென்று பஞ்சு போல் நன்றாக இருக்கிறது.வறுவல் கொஞ்சம் காரத்துடன் இருக்க, குடிமகன்களுக்கு ஏற்ற சைட் டிஷ் போல் இருக்கிறது.அப்புறம் சில்லி வறுவல் நன்றாக இருக்கிறது. என்ன ...ரொம்ப நேரம் எண்ணையில் பொரிக்க வைப்பதினால் என்னவோ கொஞ்சம் சிவந்து இருக்கிறது.மத்தபடி டேஸ்ட் ஓகே.இரண்டு பிரியாணி ஒரு வறுவல்,ஒரு சில்லி 120 ரூபாய்.சாப்பிட்டு கையை கழுவிய பின்னும் பிரியாணியின் வாசம் இருக்கத்தான் செய்கிறது.
மதிய  நேரம் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.அப்புறம் சிக்கன் , காடை மீன் என்று எல்லா வகையும் இருந்தாலும் இங்க பீப் மட்டும் அதிகமா விற்பனை ஆகும்.பீப் சாப்பிட விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம்.விலையும் குறைவுதான்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்
 

26 comments:

  1. பீஃப் பிரியாணி பற்றி சுவையான பதிவு.

    ReplyDelete
  2. சுவை குறைவாக இருக்கோ இல்லையோ அசைவ பிரியர்களுக்கு சாப்பிடுற ஆசையை உண்டு பண்ணிடீங்க.....

    ReplyDelete
  3. மச்சி அடுத்த மீட்டிங்க அங்க வச்சுக்கலாமா...?

    ReplyDelete
  4. குடும்பத்தோடு போய் சாப்பிடும் வசதி உண்டா ?

    தெரிந்தால் சொல்லுங்கள்.

    நன்றி

    விமல்
    கோவை

    ReplyDelete
  5. மாப்ள ரொம்ப சௌகரியமான இடமா இருக்கே ம் ம் நாமா அங்கெ மீட் பண்றோம் ஒக்கே

    ReplyDelete
  6. போட்டு தாக்குங்கப்பு :D

    ReplyDelete
  7. மச்சி நெக்ஸ்ட் போஸ்டு தேனியா?

    ReplyDelete
  8. புதிய தலைமுறை டிவில கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறுன்னு ஒரு நிகழ்ச்சி போடுறாங்க. நான் விரும்பி பார்க்கும் மிகச்சில நிகழ்ச்சிகளில் ஒண்ணு. அதைப் பார்க்கும்போதெல்லாம் உங்க நினைவுதான் வரும் சகோ. அது நீங்கதானான்னு? எனக்கு மட்டும் உண்மை சொல்லுங்க. அது நீங்களான்னு?

    ReplyDelete
  9. //வீடு சுரேஸ்குமார் said...
    மச்சி அடுத்த மீட்டிங்க அங்க வச்சுக்கலாமா...?//

    பில்லு யாரு கட்டறது?

    ReplyDelete
  10. யோவ் இதென்ன பார்லிமென்ட் கேன்டீன் மெனுவா...? இம்புட்டு சீப்பா இருக்கு....?

    கோவை வந்தால் கண்டிப்பா சாப்பிடனும், காசு கொடுக்க ரெடியா இருங்க...

    ReplyDelete
  11. ராஜி...///
    சத்தியமா நான் இல்லைங்க...

    ReplyDelete
  12. வீடு சுரேஷ் ....// மாம்ஸ் கண்டிப்பா வச்சிக்கலாம்..

    ReplyDelete
  13. மனோ./// கண்டிப்பா உங்க கிட்டே இருந்து எடுத்து குடுப்பேன்..ஹி ஹி ஹி

    ReplyDelete
  14. சிவகுமார்..../// நீங்க வந்தா உங்களுக்கும் சேர்த்து கட்டுவேன்...பில்லை இல்ல பிரியாணிய...

    ReplyDelete
  15. விமல்.../// அது ரொம்ப சின்ன கடைங்க,,,பார்சல் வாங்கிட்டு போங்க

    ReplyDelete
  16. 28.07.2012 வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பதால் தங்களது MSR ஹோட்டல் பதிவுக்கு ஞாயறு மறுமொழி தருகிறேன்.
    வாழ்க வளமுடன்.
    snr.DEVADASS

    ReplyDelete
  17. இதே ரேஞ்சில் போனீங்கன்னா அடுத்த முறை பார்க்கும் போது அடையாளம் தெரியாதோன்னு தோணுது ஜீவா!! (கொஞ்சம் பொறாமையோ?)

    ReplyDelete
  18. 1. HMR பிரியாணி ஹோட்டல், ராமநாதபுரம் சிக்னல் அருகே
    2. ஹைதராபாத் பிரியாணி, டவுன் ஹால் எதிரில்
    3. மேலும் காந்திபுரம் அருகில் உள்ள அஞ்சப்பர்,அஞ்சலி,ராயப்பாஸ்
    4. சிக்கன் சம்பூர்ணா ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு அருகில்
    5. சுப்பு மெஸ், கீதா ஹால் ரோடு
    6. கீதா மெஸ்
    பற்றியும் எழுதுங்கள்.

    நன்றி

    விமல்
    கோவை

    ReplyDelete
  19. நண்பா ம்ம்ம்மம்மம்ம்ம்ம்ம்ம்ம்மம்மம்ம்ம்ம்
    வாசம் தூக்குது

    ReplyDelete
  20. மெனுவ படிக்கும்போதே எச்சில் ஊருகிறது.நல்லா சாப்டுங்க பாஸ்....

    ReplyDelete
  21. சுவையான பகிர்வு.

    ReplyDelete
  22. தனியா போயி சாப்பிட்டதும் இல்லாம , அந்த படத்த வேற போட்டு பசிய கெளர்ரீங்களே அண்ணே! மதியானா நேரம் வேற, ஆனாலும் மனசாட்சியே இல்லாத ஆளுண்ணே நீங்க!lol

    ReplyDelete
  23. வித்தியாசமான பதிவி தான் சுவை, அருமை.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....